Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி இயக்கத்தினரின்; மே தினப் பலாத்காரம்

Featured Replies

கொழும்பில் இன்று மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி நடத்தும் மேதின பேரணி மற்றும் ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளச்செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழர்கள் ஈ.பி.டி.பியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஈ.பி.டி.பியினரின் ஏற்பாட்டில் இவர்கள் நேற்றுமாலை பஸ்களில் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். குடாநாட்டின் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் ஈ.பி.டி.பியினர் நேரடியாகச் சென்று வாக்குறுதிகளை அளித்தும் ஒலிபெருக்கி மூலம் சலுகை அறிவிப்பை விடுத்தும் அவர்களை கவர்ந்து செல்கின்றனர் என்று கிராம வாசிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிடைத்த வேலை பறிபோய் விடும், பதவி உயர்வு கிடைக்கும், பதவி நிரந்தரமாகும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி கொழும்பு செல்லும் அவர்கள், அங்கு ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக கோஷம் எழுப்பவும் தயாராகவே இருக்கிறார்கள் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்களை உங்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டுமானால் வரவேண்டும் என்று கூறியே ஊழியர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

யாழ். வைத்தியசாலையில் இருந்து நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்த ஊழியர்கள் பஸ்ஸில் ஏற்றப்பட்டனர். இதனால் வைத்தியசாலையின் முக்கிய பணிகள் முடங்கியுள்ளன என்றும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்தன.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வு ..

30 ஏப்ரல் 2011 தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் குறித்தானது

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அவர்கள் முகம் கொடுத்து வரும் வாழ்வியல் உரிமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் அரச உயர் மட்ட குழுவினருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நேற்று (29) நடைபெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான குழுவினருக்கும் பேராசியர் ஐP. எல். பீரிஸ் அவர்கள் தலைமையிலான அரச உயர் மட்ட குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற இவ் விஷேட பேச்சு வார்த்தையின்போது ஈ.பி.டி.பி தரப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்து விளக்கப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் எதுவித குடியேற்ற மாற்றங்களும்; நிகழாது பாதுகாத்தல்.

நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கான காணிகளை பகிர்ந்தளித்தல்.

இடம்பெயர்ந்த துயரப்பட்ட தமிழ் மக்களுக்கென மேற்கொள்ளப்பட்டுவரும்; மீள் குடியேற்றங்களையும் வாழ்வாதார வசதிகளையும் மேலும் அர்த்தமுள்ளதாக உருவாக்கி கொடுத்தல்.

கடந்த கால யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் வேலையற்றிருக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும் முகமாக வடக்கு கிழக்கில் பல்வேறு தொழிற்றுறைகளை ஊக்குவித்தல்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளில் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை

கணிசமான அளவு இணைத்தல்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினால் அவசர கால சட்டத்தை

விரைவில் நீக்குவதற்கான கால வரையறை ஒன்றை வகுத்து செயற்படல்.

தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர், விபரங்களை அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு உடன் தெரியப்படுத்துவதோடு அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துதல்.

நீண்டகாலமாக அரசியல் காரணங்களுக்காக சிறைகளில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கான நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு சிவில் நிர்வாகத்தை மேலும் சிறப்புற இயங்க வைத்தல்.

இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் என்பது பரஸ்பரம் ஏற்படும் வகையிலான ஏற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்தல்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவதற்கும், கலாசார உறவுகளை பேணவதற்கும் உரிய வசதிகளை உருவாக்கும் நோக்கிலான நம்பிக்கை தரும் ஏற்பாடுகளை முன்னெடுத்தல்.

அரச கரும மொழிக்கொள்கையின் அடிப்படையில் தமிழ் மொழி அமுலாக்கலை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் நி;லையங்களில் தமிழில் முறைப்பாடு பதிவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.

நீதித்துறை மற்றும் அரசாங்க அலகுகளுடன் தமிழில் தொடர்பு கொள்ளுவதற்கு வசதியாக, வடக்கு கிழக்கிற்கு வெளியே செறிந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் வசதி கருதி அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதில் ஆரம்பித்து அதற்கான மேலதிக அதிகாரங்களை வழங்குதல்.

மாகாண நிர்வாகத்திற்கும், மத்திய அரசிற்கும் இருக்கும் அதிகாரங்களைத் தவிர, இரண்டிற்கும் இடையில் இருக்கும் இணைப்பு பட்டியலில் உள்ள அதிகாரங்களையும் மாகாண நிர்வாகத்திற்குரிய அதிகாரங்களோடு இணைத்தல். இதன் மூலம் அதிகாரப்பகிர்வினை வழங்குதல்.

மேற்படி அதிகாரப்பகிர்வையும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், தமிழ் மக்கள் எதுவித தடைகளுமின்றி சம உரிமைகளை உரிய முறையில் அனுபவித்து சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கான ஏற்பாடக இரண்டாவது சபை ஒன்றை நிறுவுதல்.

இவைகளையே 13 வது திருத்தச்சட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களாக நடைமுறைப்படுத்துதல்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் அரச உயர் மட்ட குழுவினரிடம் பரிந்துரைக்கப்பட்ட மேற்குறித்த விடயங்கள் யாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ அன்றி தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ ஒரு போதும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்ற நியாயபூர்வமான எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு அரசாங்கம் இக்கோரிக்கைகள் அனைத்தையும் விரைவாக நடைமுறைபடுத்த சகல வழிகளிலும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஈ.பி.டி.பி தரப்பால் உறுதி வழங்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினையானது தீராப்பிரச்சினையாக நீண்ட காலமாக நீண்டு செல்வதற்கான காரணம் என்பது நடை முறைச்சாத்தியங்களுக்கு அப்பால் நின்று சிந்தித்ததே என்பதால் நடை முறைச்சாத்தியமான அணுகுமுறையினையே தாம் முன்வைத்திருப்தாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தரப்பால் எடுத்து விளக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் நடைமுறை வாழ்வியல் உரிமைகள் குறித்து பேசப்பட்ட இவ் விஷேட பேச்சு வார்த்தையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான அசோக் சந்திரகுமார், கட்சியின் நிர்வாக செயலாளர் அ. இராசமாணிக்கம், அமைச்சரின் இணைப்பதிகாரி றொபின் ராஜ்குமார், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா ஆகியோரும் அரச சார்பில் அமைச்சர்களான பேராசிரியர். ஜீ. எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, சஜித் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு .. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் -

இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஈ.பி.டி.பி அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசு நியமித்துள்ள நால்வர் கொண்ட குழுவுடன் நேற்று மாலை நடத்திய சந்திப்பில் மேற் கண்டவாறு ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.இந்தக் கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கட்சியின் செயலாளர்நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், சட்டத்தரணி ரெங்கன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார், ஈ.பி.டி.பியின் நிர்வாகச் செயலாளர் அ.இராசமாணிக்கம் ஆகியோரும் அரச தரப்பில் அமைச்சர்களான நிமல்சிறிபால சில்வா, ஜி.எல்.பீரிஸ். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க மற்றும் சஜித்தவாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் மற்றும் அதிகாரப் பகிர்வை எவ்வாறு காப்பது உட்பட மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.நாடு முழுவதும் தமிழ் மொழிபேசும் அமுலாக்கத்தை மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/60813/language/ta-IN/--.aspx

அரசு சொல்வதை கேட்டு தலை ஆட்டுவதை பேச்சுவார்த்தை என்று எப்போ தொடக்கம் அழைக்கிறார்கள்? இதற்கு சிறந்த உதாரணமாக தமிழ் நாட்டு, வடபகுதி மீனவர்களை கொழுவி விடுவதில் தாடிக்காரர் எப்படி செயற்பட்டார் என்பது யாவரும் அறிந்ததே!! எப்படி எல்லாம் இந்த **கள் அரசுக்கு ஆலவட்டம் பிடிக்கிறார்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.