Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வரும் ரொபர்ட் ஓ பிளேக் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரும் ரொபர்ட் ஓ பிளேக் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம்

[sunday, 2011-05-01 05:13:11]

நாளை மறுதினம் இலங்கை வரும் அமெரிக்க அரசாங்கத்தின் மத்திய மற்றும் தெற்காசியா பிராந்தியத்திற்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் பிளேக் புதன்கிழமை வவுனியா மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அங்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது மாலைதீவு விஜயத்தை முடித்து கொண்டே பிளேக் கொழும்பு வருகின்றார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி அவர் கேட்டிருப்பதாகவும் அதற்கு அரசாங்கம் இன்னும் பதில் வழங்கவில்லை என்றும் ஜனாதிபதிக்குப் பதில் அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ் அல்லது ராஜித சேனரத்னாவைச் சந்திக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்படுவார் என்றும் சண்டே ரைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேளை பிளேக் அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொதபாயா ராஜபக்ஷ ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கும் கோதபாயா ராஜபக்ஷ திங்கட்கிழமை கொழும்பு திரும்புகின்றார் என்றும் சண்டே ரைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

May 2, 2011 / பகுதி: செய்தி /

கிளிநொச்சி – முல்லைத்தீவு செல்வதில் பிளேக் ஆர்வம் – சிறீலங்கா சந்தேகம்

எதிர்வரும் வாரம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் தென் ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்லவதில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சிறீலங்காவுக்கு அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை. சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) சிறீலங்கா வரும் பிளேக் சிறீலங்கா அரச தலைவருக்கான தனிப்பட்ட செய்தி ஒன்றை கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் சிறீலங்காவுடனான உறவுகளை முன்னோக்கி நகர்த்துவதே தனது நோக்கம் என அவர் அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தனது பயணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

எல்லோரும் ஐ.நா அறிக்கை தொடர்பில் தான் தமது கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் நான் பல விடயங்கள் தொடர்பில் பேசப்போகின்றேன். வட பகுதிக்கு பயணம் மேற்கொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். தற்போதே நான் முதல் முதலாக அங்கு செல்கிறேன். அது முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அமெரிக்காவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதுடன், அங்குள்ள உள்ளூர் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பயணத்தின் பின்னர் பிளேக் மாலைதீவு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பிளேக் சிறீலங்கா வருவதாக சிறீலங்கா அரசின் அமைச்சர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.