Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசின் ஜனநாயக அணியுடன் ஒரு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசின் ஜனநாயக அணியுடன் ஒரு நேர்காணல்

Posted by: on May 1, 2011

சமகால நிலவரம் எனும் நேர்காணல் ஊடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

கேள்வி – போர் குற்றவியல் ஆதாரங்களைச் சேகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த நீங்கள் அண்மையில் நிபுணர் குழு அறிக்கை வெளிவந்துள்ளதை அறிவீர்கள் அது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஓவ்வொரு நாடுகளிலும் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புக்களோடும் TGTE ஐனநாயக அணியும் இணைந்து செயற்பட்டு ஐநா நிபுணர் குழுவுக்கு மிக முக்கிய சாட்சியங்களை நெறிப்படுத்தினோம். அன்றும் போல் இன்றும் எமது தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான பணிகள் நிறைய இருக்கின்றன என்பதை நன்கு அறிவோம்.

நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்களும் தமிழர் அமைப்புக்களும் சிறிலங்கா அரசு மீதும் ஐநா மீதும் குற்வாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காகத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை TGTE ஐனநாயக அணியினராகிய நாம் வலியுறுத்துகிறோம்.

கேள்வி – ஈழத்தமிழருக்கு மே 18 துக்க நாளா ?

பல ஈழத் தமிழர்களுக்கு மே 18, 2009 நேற்றுப் போல் இருக்கிறது. இரு வருடங்கள் சென்றுவிட்டன என்பதை நம்பமுடியவில்லை. அந்தப் பேரழிவு காலத்தில் எமது மக்கள் பலர் கொல்லப்பட்டனர் கண்ணீருக்கும் துயரத்திற்கும் எல்லைகள் கிடையாது. மே 18, துயர நாளாக இருக்க முடியாது. அது எழுச்சி நாளாக மாத்திரம் இருக்க முடியும் தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லாட என்போம் நாம் ஒன்றினைந்து செயற்பட்டுத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்று உறுதி எடுப்போம். ஏன் மே 18 ஐத் துக்க தினமாகச் சிலர் கொண்டாட விரும்புகிறார்களோ தெரியவில்லை. முழு உலகமும் போர்க் குற்றங்கள் நடந்ததாக ஏற்றுக் கொள்ளும் போது நாம் ஏன் துக்கம் கொண்டாட வேண்டும்.

கேள்வி – அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழருக்கு எதிரான சிறிலங்கா அரசு போர் விதிமுறைகளை மீறி கண்மூடித்தனமாக பொது மக்களை படுகொலை மேற்கொண்டுள்ளதை நிபுணர் குழு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. நாங்கள் ஒவ்வொருவரும் எமக்கு இருக்கின்ற இராசதந்திர, அரசியல் தொடர்புகளுக்குடாக சிறிலங்கா அரசு மீது ஐ.நா போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளவேண்டுமென வலுருத்த வேண்டும். தமிழீழ இலட்சியத்திற்காக உழைக்கும் உலக அமைப்புக்களோடும் தொடர்பு கொண்டு கருத்துக்களை மேற்கொண்டுவருகின்றோம். அவர்களுக்குடாக உலக நாடுகளையும் மனித உரிமை அமைப்புக்களையும் ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டிவருகின்றோம். தொடர்ந்து முயச்சிப்போம்.

கேள்வி – அண்மையில் தமிழ் நாட்டிற்கு மாத்திரம் சென்றதன் நோக்கம் என்ன? அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழ் நாட்டிற்கு நாமொரு இராசதந்திரப் பயணத்தை மேற்கொண்டோம். பழைய உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் புதிய உறவுகளைப் ஏற்படுத்துவதற்கும் இந்தப் பயணம் உதவியது. பல முக்கியமானவர்களைச் சந்தித்தோம். அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்கள் செல்வாக்கு நிரம்பியவர்கள் சமூகவியலாளர்கள், நீண்ட நாள் ஆதரவாளர்கள் எனப் பலதரப்பட்டோரைச் சந்தித்தோம். இது போன்ற இராசதந்திரப் பயணங்களைத் மேலும் தொடரவுள்ளோம். ஏன் தமிழ் நாட்டை எமது முதல் பயண இலக்காகக் கொண்டிருந்தோம். என்றால் அங்கு தான் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய ஆதரவுப் பலம் எமக்குத் தேவை.

தமிழ் நாட்டில் நாம் சந்தித்தவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்தனர். பல முக்கிய உரையாடல்களை மேற்கொண்டோம். ஐயப்பாடுகளை நீக்கினோம். நம்பிக்கையை கட்டி எழுப்பினோம். கருத்துப்பரிமாற்றம் இருபக்க உறவைப் பலப்படுத்தியது. பல உறுதியான தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அவை எமக்கு எதிர்காலத்தில் பயன்தரும் என்று நம்புகின்றேன்.

கேள்வி – நீங்கள் சந்தித்த முக்கிய அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதை ஏற்றுக்கொண்டார்களா?

அங்கு சென்ற சந்திப்புக்களை மேற்கொண்ட போது ஒன்றை நன்றாக விளங்கிக் கொண்டோம். நாம் சந்தித்த ஒவ்வொருவரும் தமிழ் அபிமானியாகவும் தமிழீழத்திற்கு ஆதரவானவராகவும் இருந்தனர். அவர்கள் ஈழத்தமிழர் உரிமைக்கான போராட்டங்களில் பங்குபற்றிய வரலாறு உடையவர்கள். தமிழீழம் தான் தீர்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லாதவர்கள். 60 வருடகால இன அழிப்பிற்குத் தமிழீழம் தவிர்ந்த பிற தீர்வு இல்லை என்பது அவர்கள் நிலைப்பாடு.

எமது மக்களுடைய சுதந்திரத்திற்காக நாம் முன்னெடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் தாம் ஆதரவு நல்குவதாக உறுதி அளித்தார்கள். போர் முடிந்து விட்டது என்று 2009ல் சொன்ன ராஐபக்ச இது வரையில் ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க வில்லை என்பதை அவர்களே சுட்டிக் காட்டினார்கள். ஆகையால் தமிழீழம் தான் அவர்கள் தீர்ப்பாகவும் இருக்கிறது.

கேள்வி – தமிழ் நாட்டு மக்களின் பூரண ஆதரவை உங்களால் திரட்ட முடிந்ததா?

நாங்கள் பொது மக்களைச் சந்திப்பதற்காகச் செல்லவில்லை. சட்ட சபைத் தேர்தல் நடந்த படியால் நாங்கள் மக்கள் சந்திப்பிற்கு முடியவில்லை. முக்கியமானவர்கள் எங்களுக்கு ஆதரவானவர்கள், உயர் மட்டத்தினரைச் சந்திக்கச் சென்றோம். அதைச் செய்தோம். தமிழ் நாட்டு பொது மக்கள் எமக்கு ஆதரவானவர்கள் என்று நம்புகிறோம். தமிழ் நாட்டு அரசியல் தலைமை தமது நலன் நோக்கில் வித்தியாசமான பாதையில் செல்கிறார்கள். நாம் எமது இலட்சியப் பாதையில் முன்னேறும் போது தமிழ் நாடு எமக்கு பூரண ஆதரவு தரும் என்று நம்புகிறோம்.

கேள்வி – அறிக்கைகள் விடுவது தவிர்ந்த பிற ஆக்கபூர்வமான திட்டங்கள் ஏதெனும் வைத்து இருக்கிறீர்களா?

எமது நோக்கம் அறிக்கை விடுவது இல்லை. மக்களின் விடுதலைக்காக பணி செய்வதே எமது நோக்கம். நாம் புலம்பெயர் அரசியல் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் அதே நேரத்தில் ஐனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்றவகையில் மக்களின் கருத்துக்களை எதிர்பாப்புக்களை கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித நேய அமைப்புக்களுக்கு எடுத்து கூறிவருகின்றோம்.

மே 18 அனைவரும் மறக்கமுடியாத எழுச்சி நாள் அந்த மாதத்தில் முக்கிய செயல் அமர்வை திட்டமிட்டுள்ளோம். அந்த அமர்வில் எமது விடுதலை பணிக்கு உறுதியெடுக்கும் அதேவேளையில் அன்றிலிருந்து புதிய எமது செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

tamilkathir.com

நீங்களும் அறிக்கைகளை மட்டும் விட்டும், இப்படியான பேட்டிகளை கொடுத்தும் மட்டும் போதுமா????????? ... உருப்படியாக எதனையும் செய்யுங்கள் மக்கள் உங்கள் பின் வருவார்கள்!!! ...

கேள்வி – ஈழத்தமிழருக்கு மே 18 துக்க நாளா ?

பல ஈழத் தமிழர்களுக்கு மே 18, 2009 நேற்றுப் போல் இருக்கிறது. இரு வருடங்கள் சென்றுவிட்டன என்பதை நம்பமுடியவில்லை. அந்தப் பேரழிவு காலத்தில் எமது மக்கள் பலர் கொல்லப்பட்டனர் கண்ணீருக்கும் துயரத்திற்கும் எல்லைகள் கிடையாது. மே 18, துயர நாளாக இருக்க முடியாது. அது எழுச்சி நாளாக மாத்திரம் இருக்க முடியும் தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லாட என்போம் நாம் ஒன்றினைந்து செயற்பட்டுத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்று உறுதி எடுப்போம். ஏன் மே 18 ஐத் துக்க தினமாகச் சிலர் கொண்டாட விரும்புகிறார்களோ தெரியவில்லை. முழு உலகமும் போர்க் குற்றங்கள் நடந்ததாக ஏற்றுக் கொள்ளும் போது நாம் ஏன் துக்கம் கொண்டாட வேண்டும்.

இதை வாசிக்கும் போது. கரி நாகம் கருனா அமைப்பில் இருந்து விலகிய பின் பிபிஸி நிருபருக்கு ஒரேஞ் யூசும் கூடிச்சு கொண்டு பேட்டி கொடுத்து பொல்ல இருக்கு.

எங்கை பார்கலாம் யாழ்களத்தில் அதுவும் என்ன நோக்கத்துக்காக யாழ்களாதை ஆரம்பித்தார்களோ? அதை 99% சரிய்யாக பயன் படுத்தும் அகூதா ஒருவராவது இதுக்கு சரியான கருத்தை எழுதட்டும்?

இதை வாசிக்கும் போது. கரி நாகம் கருனா அமைப்பில் இருந்து விலகிய பின் பிபிஸி நிருபருக்கு ஒரேஞ் யூசும் கூடிச்சு கொண்டு பேட்டி கொடுத்து பொல்ல இருக்கு.

எங்கை பார்கலாம் யாழ்களத்தில் அதுவும் என்ன நோக்கத்துக்காக யாழ்களாதை ஆரம்பித்தார்களோ? அதை 99% சரிய்யாக பயன் படுத்தும் அகூதா ஒருவராவது இதுக்கு சரியான கருத்தை எழுதட்டும்?

தமிழின அழிப்பு நினைவு நாள் என்றே மே 18 அறிவிக்கப்படவேண்டும்.

ஆர்மேனிய இன அழிப்பு நினைவு நாள் (http://www.nytimes.com/ref/timestopics/topics_armeniangenocide.html)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88

http://en.wikipedia.org/wiki/Genocide_Remembrance_Day

ருவாண்டா இன அழிப்பு நினைவு நாள்

யூத இனப்படுகொலை நாள்... கம்போடிய , பொஸ்னியா ,டாபூர் இன இவ்வாறு நாமும் பெயரிட்டு எமது இனத்திற்கு நடப்பது நடந்தது இன அழிப்பே என வருடந்தோறும் நினைவு கூரப்படவேண்டும்.

ஏனைய தினங்கள் ஏற்கனவே தமிழீழ கலண்டரில் உள்ளது. மே 18 அவை எல்லாவற்றையும் தாண்டி மிகப்பெரிய அவலல்ங்களை சந்தித்து அடியோடு தமிழர்களை வேரறுக்க செய்த நாள்.

ஆகவே மே 18 இனை தமிழின அழிப்பு நினைவு நாள் என நினைவு கூருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவர்களை எல்லாம் பேட்டி காண்பது போடு வதால் என்ன பயன்.

ஒரு தொடக்கப்பட்ட அமைப்பில் முழுதாக பங்கு பெற்றாமல் வெளியேறியவர்கள். எப்படி தாங்கள் செயற்படுவார்கள்?

இவர்களை ஆதரிப்பது வீண்.

நாடு கடந்த அரசு என்பது புலம் பெயர் தமிழரை ஒன்றாக்கும் ஒரு அமைப்பே. இதை ஏதோ பெரிது படுத்தி எதிர்க்கட்சி இல்லை,விவாதிக்க இடம் இல்லை என்று எத்தனையோ மொட்டை காரணங்களை சொல்கிறார்கள்.

சரி எதிர்க்கட்சி என்ன செய்ய போகிறது.

நா.க.த.அ ஒரு இடமும் ஆட்சி செய்யவில்லை.

எல்லா புலம் பெயர் நாட்டில் உள்ள தமிழர்களை ஒருங்கமைக்கும் ஒரு கூட்டு முயற்சி. விடுதலைப்புலிகள் பின் ஒரு முழு கட்டமைப்பாக எல்லா தமிழரயும் ஒன்று சேர்க்கும் முயற்சி.

ஒருவர் கீழ் தங்கி இருத்தல் கூடாது என்பதற்காக தேர்தல் முறையை கொண்டு வந்தார்கள். நீ 4 வருடம் இருந்தால் அடுத்தவர் அடுத்த 4 வருடம் மக்களால் தெரிய பட்டு அந்த கட்டமைப்பை நடாத்துவார்கள்.

சிறிலங்காவுக்கு எதிராக கட்டப்பட்ட ஒரு தமிழர் அமைப்பு அவ்வளவே.

இதற்கெல்லாம் பேச்சு சுதந்திரம் இல்லை ஒன்டு மில்லை என்று பூ சுத்துவது ஏற்க முடியாது.

தவறுகள் இருக்கலாம், அதுதானே சனநாயகம் பேசி க்கொள்ளலாம்.

இவர்களை நா.க.அ.சின் ஜனநாயக அணி என்று கூறுவதே பிழை. வெளியேறியோர் அவ்வளவு தான்.

சும்மா பந்தா காட்டு கிறார்கள்.

இப்படியான பெய்ரை பிரபலப்படுத்தி அதை கொச்சை படுத்தாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.