Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள்

Featured Replies

ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள்

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பிய படையினர், அதை குண்டு வீசி அழித்துள்ளனர். ஆனால், அந்த ஹெலிகாப்டர்கள் முழுமையாக சிதையவில்லை.

வால் பகுதி மட்டுமே சிதறியுள்ளது. இதனால் அந்த ஹெலிகாப்டர் முழு அளவிலேயே அப்படியே கிடந்தது. இதை பாகிஸ்தானிய படையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர். அதை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

ரேடார்களில் இருந்து தப்ப அந்த ஹெலிகாப்டரின் முனைகளை மேலும் கூர்மையாக்கியுள்ள அமெரிக்கா, அதன் சத்தத்தைக் குறைக்க இறக்கைகளை மேலும் சிறிதாக்கியுள்ளது.

முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு 4 பிளாக்ஹாக் (Blackhawk) ரக ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அங்கே விட்டுச் சென்ற ஹெலிகாப்டரை பார்த்தபோது, அது பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் போலவே இல்லை.

கிட்டத்தட்ட F-117 ரக விமானத்தைப் போல காணப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானின் ரேடார்களில் மண்ணைத் தூவிவிட்டு அந்த நாட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளன.

இந்த ஹெலிகாப்டர்கள், அபோடாபாத்துக்கு வந்து தங்கள் தலைக்கு மேலே பறக்கும் வரை எங்களுக்கு சத்தமே கேட்கவில்லை என்று பின்லேடனின் வீட்டுக்கு அருகில் வசிப்போர் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் வெற்றியடைய முக்கிய காரணமே இந்த ஹெலிகாப்டர்கள் என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/05/05/ultra-secret-stealth-helicopter-used-bin-ladenraid-aid0090.html

பின்லேடனைப் பிடித்தவை ராடரில் அகப்படாத புதுவகை ஹெலிகொப்டர்கள் !

May 5, 201

zap.jpg

பின்லேடன் மீதான தாக்குதலை நடாத்த அமெரிக்கா ராடரில் அகப்படாத அதி விசேட ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாக அறிவித்துள்ளது. ஸ்ரெலாத் என்று அழைக்கப்படும் இந்த உலங்குவானூர்தி ஸாப்..ஸாப்..ஸாப்.. என்ற விசுவிசுக்கும் மோட்டார் ஓசை கொண்டது. உலகத்தின் இராணுவ ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு காரியத்தை முடித்துவிடும். ரஸ்யாவின் ராடர்களை எப்படி ஏமாற்றுவது என்ற இரகசியம் இந்த உலங்குவானூர்திகளில் உண்டு. கொம்போசிற் என்ற புதுவகை உலோகத்துடன் அலுமினியமும் கலந்து செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் எங்கும் இல்லாத இந்த ஹெலிகொப்டரில் ஒன்றே பின்லேடனைப் பிடிக்கப்போகும்போது பழுதடைந்து பாகிஸ்தானில் தகர்க்கப்பட்டது. அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு இதுபற்றி தெரிந்துள்ளது. ஆனால் இதற்கும் மற்றைய உலங்குவானூர்திகளுக்கும் மற்றவர்களால் பேதம் அறிய முடியாது. ஆனால் இதுபோன்ற உலங்குவானூர்திகள் ஆப்கான் போர்க்களத்திற்கு உகந்தவை அல்ல, காரணம் மணலை வாரி மோட்டருக்குள் இறைக்கும் தன்மை கொண்டதால் ஆப்கான் போன்ற மணற்பகுதிப் போர்களுக்கு இது உகந்ததல்ல என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=68354

  • தொடங்கியவர்

சீனாவுக்கு இந்த பாகங்களை பாகிஸ்தான் கொடுக்குமா?

Navy SEALs Used Secret Stealth Helicopter in OBL Raid

http://www.youtube.com/watch?v=_RDDBMWSBn0

Edited by akootha

  • தொடங்கியவர்

- மொத்தம் 38 நிமிடங்கள் இந்த தாக்குதல் நீடித்தது

- சகல் விதமான தொலைபேசி தொழில்நுட்பங்களும் அந்த காலநேரத்தில் செயலிழக்கப்படுத்தப்படன

- தமது ராடார்கள் அந்த காலப்பகுதியில் வேலை செய்யவில்லை என்பதை ஏற்கும் பாகிஸ்தான் அவை வேலை செய்யவில்லை என்கிறது அந்த நாடு

- 2004 ஆம் ஆண்டு மாதிரி (prototype) உலங்குவானூர்திகள் செய்யப்பட்டன

- அந்த ஆராய்ச்சிக்கு முடிந்த தொகை 6.4 பில்லியன்கள் (Christian Science Monitor)

- இன்று அந்த ஒவ்வெரு உலங்குவானூர்தி விலை 64 மில்லியன் டாலர்கள்

Radars were inactive, not jammed: air chief

Pakistan Air Force has assured the government that no foreign helicopters or fighter planes will be allowed to violate the Pakistani air space in future and if ordered, the PAF can shoot down the US drones.

Air Chief Marshal Rao Qamar Suleman has accepted the responsibility of air surveillance failure but informed the government that the entry of American helicopters into the Pakistani air space was not detected because the radars deployed on the western borders were not active on May 2. He dispelled the impression that the Pakistani radars were jammed.

http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=5806&Cat=13&dt=5/7/2011

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பின்லேடனைப் பிடித்தவை ராடரில் அகப்படாத புதுவகை ஹெலிகொப்டர்கள் !

May 5, 201

zap.jpg

பின்லேடன் மீதான தாக்குதலை நடாத்த அமெரிக்கா ராடரில் அகப்படாத அதி விசேட ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாக அறிவித்துள்ளது. ஸ்ரெலாத் என்று அழைக்கப்படும் இந்த உலங்குவானூர்தி ஸாப்..ஸாப்..ஸாப்.. என்ற விசுவிசுக்கும் மோட்டார் ஓசை கொண்டது. உலகத்தின் இராணுவ ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு காரியத்தை முடித்துவிடும். ரஸ்யாவின் ராடர்களை எப்படி ஏமாற்றுவது என்ற இரகசியம் இந்த உலங்குவானூர்திகளில் உண்டு. கொம்போசிற் என்ற புதுவகை உலோகத்துடன் அலுமினியமும் கலந்து செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் எங்கும் இல்லாத இந்த ஹெலிகொப்டரில் ஒன்றே பின்லேடனைப் பிடிக்கப்போகும்போது பழுதடைந்து பாகிஸ்தானில் தகர்க்கப்பட்டது. அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு இதுபற்றி தெரிந்துள்ளது. ஆனால் இதற்கும் மற்றைய உலங்குவானூர்திகளுக்கும் மற்றவர்களால் பேதம் அறிய முடியாது. ஆனால் இதுபோன்ற உலங்குவானூர்திகள் ஆப்கான் போர்க்களத்திற்கு உகந்தவை அல்ல, காரணம் மணலை வாரி மோட்டருக்குள் இறைக்கும் தன்மை கொண்டதால் ஆப்கான் போன்ற மணற்பகுதிப் போர்களுக்கு இது உகந்ததல்ல என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=68354

இது அப்பாச்சி ரக அமெரிக்க தாக்குதல் உலங்கு வானூர்தி. இது அல்ல பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் ஸ்ரில்த் தொழில்நுட்பம் சேர்பிய போரின் போதே தோல்வி கண்டுவிட்டது. எப் 117 ஐ சுட்டு வீழ்த்தியது மூலம்... ரஷ்சியாவின் இரண்டாம் நிலை ரடார்களே இவற்றை செய்தும் விட்டன.

பாகிஸ்தான்.. தான் ஒசாமாவை கொன்றாலோ.. வெளிப்படையாக காட்டிக் கொடுத்ததாக காட்டிக் கொண்டாலோ.. உள்நாட்டில் மக்களிடமும் தீவிரவாதிகளிடமும் இருந்து எழக் கூடிய சவாலை சமாளிக்கும் பொருட்டு பில்லேடன் விடயத்தைக் கையாண்டிருக்கலாம் என்பது போலவே அமெரிக்கா மும்பை தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்து ஊர்ஜிதம் செய்கிறது.

எதுஎப்படியோ.. அமெரிக்காவின் இந்த தொழில்நுட்பமும்.. முதல் முயற்சியிலேயே தோல்வியையும் சந்தித்துள்ளது. கொண்டு போன உலங்கு வானூர்திகளில் ஒன்று வீழ்ந்து.. வெடித்துச் சிதறி இருக்கிறது. அதன் பாகங்களை சிறுவர்கள் பொறுக்கி எடுக்கிறார்கள்..! அந்த அளவுக்கு அமெரிக்க தொழில்நுட்பம் மலிந்து போய் விட்டது. இதன் பின் எதனை ரகசியமாக காக்கிறது..?????!

_52551277_comanche.jpg

இதுதான் அந்த ஸ்ரில்த் உலங்கு வானூர்தி.

தமிழீழ விடுதலைப்புலிகள் ரடார்களில் சிக்காமல் இருக்க தாழ்வாக பறந்து வெற்றிகரமான தாக்குதல்களை செய்திருந்தனர். அவர்களின் வழியையும் அமெரிக்கா பாவிச்சிருக்கு என்று சொன்னால் நம்மவர்கள் நம்பவா போகிறார்கள்..???! :D:)

_52549561_debris_getty.jpg

எங்கு போனாலும் நம்மள மாதிரி ஆக்கள் இருக்காங்க. முன்னர் சிங்களப் படையினர் அமெரிக்க பெல் உலங்கு வானூர்திகளில் வந்து யாழ் கோட்டை பகுதியில் 50 கலிபரால் சுட்டுத் தள்ளிவிட்டு.. வெற்றுக் கோதுகளை கொட்டிவிட்டுப் போவார்கள். அதை பொறுக்கிறதிற்கு.. கெலி சுட சுட பதுங்கி பதுங்கி போறது. அந்த வகையில் இந்தச் சிறுவர்கள். ஆனால் இவர்களில் கையில் இருக்கும் துண்டுகள் சாதாரணமானவை அல்ல. ஸ்ரில்த் தொழில்நுட்பத்தின் ரகசியம் பொதிந்தவை. விலை மதிப்பு மிக்கவை..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இராட்ரில் அகப்படாத தொழில்நுட்பம் - ஸ்டெல்த்

ஆ!! :o:( வர வர ஒரு இணையத்தையும் நம்பி செய்தி இணைக்க ஏலாமல் இருக்கு....

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ் :)

இவ்வளவுக்கும் சீனாவின் கைக்கு எரிந்த எஞ்சிய பாகங்கள் சென்றடைந்து இருக்கும்... இனி இந்தியாவிற்கு ஒரே தலை இடி தான்.... ^_^

http://abcnews.go.com/WNT/video/osama-bin-laden-dead-seals-stealth-helicopter-13530978

Edited by குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.