Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் எம்.பி. அங்கே வாயைத் திறந்தால், உங்கள் வீட்டு கிச்சனில் குரல் கேட்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு, ஸ்ரீலங்கா: நாடாளுமன்றத்திலிருந்து நேரடி ஒலிபரப்பு (live broadcast) ஒன்றை ஸ்ரீலங்காவின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக ஆரம்பிக்கவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். இதற்காக புதிதாக ஒரு எஃப்.எம். சானல் ஆரம்பிக்கும் உத்தேசம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

“ஸ்ரீலங்கா மக்களுக்கு தமது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன பேசுகிறார்கள் என சுடச்சுடத் தெரிந்து கொள்வதற்கான வேளை வந்துவிட்டது. அதற்காகவே இந்த ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுபற்றி சில ஒலிபரப்பாளர்களுடன் நாம் ஏற்கனவே பேச்சுக்களைத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் அவர்.

“இந்த புதிய வானொலி நிலையத்தின் செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாடாளுமன்றம் இருக்கின்றது. இதற்காக எமக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் சில திட்டங்களைச் செயற்படுத்தவுள்ளோம்” என்று தமது திட்டத்தை விபரிக்கிறார் அவர்.

நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடும் தியவன ஓயா நதியில் படகு விடுவதுதான் அதற்கான திட்டம். ஸ்ரீலங்கா கடற்படையுடன் இணைந்து இந்தப் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகளிடம் படகுச் சவாரிக்குக் கட்டணம் அறவிடப்படும்.

ஸ்ரீலங்காவில் உள்ள தெஹிவல மிருகக்காட்சி சாலையில், உள்நாட்டு மக்களுக்குக் குறைந்த கட்டணமும், வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அதிக கட்டணமும் அறவிடப்படுகின்றது. இந்தப் படகுக் கட்டணமும் அப்படி வெவ்வேறாக இருக்குமோ தெரியவில்லை.

படகு சேவை இருக்கட்டும். நாடாளுமன்றத்திலிருந்து நேரடி ஒலிபரப்புத் தொடங்கினால், நாடாளுமன்றக் கேன்டீனில் (சாப்பிடுவதற்கு) மாத்திரம் வாயைத் திறக்கும் நம்ம தமிழ் எம்.பி.க்களின் கதி என்னவாகும்?

நன்றி - விறுவிறுப்பு.கொம்

http://viruvirupu.com/2011/05/09/1478/

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.