Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதியும் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதியும் இல்லை

09 மே 2011 - டொலர்களுக்காக, இலங்கையை காட்டிக் கொடுக்கக் கூடாது – பசில் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதியும் இல்லை வடக்காயினும் சரி தெற்காயினும் சரி மேற்காயினும ;சரி கிழக்காயினும் சரி இப்போது பாதுகாப்பு வலயங்களாக சமாதான வலயங்களே இலங்கை முழுவதும் உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்தார். குடாநாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற மீள் குடியமர்வு அமர்விற்காக இதில் திடீர் விருந்தாளியாக பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்ச கலந்துகொண்டார். மாவட்டபுரம் கந்தசாமி கோவிலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீள் குடியேற்ற நடவடிக்கை ஏற்பாடாகியிருந்தது. சுமார் 1 மணிநேரம் தாமதித்து பசில்ராஜபக்ச வருகை தந்திருந்தார். முன்னதாக டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலயவழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவஞான் சிறிதரன், சரவணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு பசில் ராஜபக்ச மேலும் உரையாற்றுகையில் தான் ஜனாதிபதியிடமிருந்து விசேட செய்தியொன்றைப் பெற்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வலயம் என ஒன்றும் இல்லை என தெரிவித்துடன் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சர்வதேச நாடுகளால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு யாழ்ப்பாண மக்கள் உடந்தையாகக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மக்கள் டொலர்களுக்காகவும், அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் சுயநலத்திற்காகவும் இலங்கையை காட்டிக் கொடுக்கக்கூடாது எனவும் அவ்வாறு எவரும் செய்யக்கூடாது எனவும்அவர் கேட்டுக்கொண்டார். இலங்கையில் அனைத்துத் தரப்பினரும் வாழவேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் ஐ.நா. வின் அறிக்கைக்கு ஆதரவாக பதில் அறிக்கைகளை வெளியிடுவதால் எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்தே இதனைக் கூறியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா, அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் உரையபற்றினர். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்கள் உரையாற்ற அனுமதிக்கப்படவில்லை. வலிகாமம் வடக்கில் மேலும் ஒரு பகுதி மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பசில் ராஜபக்ஷவின் இந்த உரை தொடர்பில் தமிழ் மக்களுக்கு விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

இலங்கையில் மக்களுக்கு எதிரான சக்திகள் என்று எவருமே இனி இல்லை என்பதால் பாதுகாப்பு வலயங்கள் இனிமேல் தேவைப்படாது என்று பசில் ராஜபக்ஷ கூறுவது உண்மையானால் ஏன் பல தரப்பினரினதும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை நீடித்து வருகின்றது? மக்களுக்கு எதிரான சக்திகள் இல்லையென்றால் அரசுக்கு எதிரான சக்திகளை சமாளிக்கவா அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது? அத்துடன் எம்மத்தியில் உள்ள ஒரு சிலரால் தான் மீள்குடியேற்றம் தாமதமடைந்தது என்பது உண்மையானால் எமது மீள்குடியேற்றம், புனர்வாழ்வில் அக்கறையற்ற அந்தப் பிரகிருதிகள் யார்? அரசுக்கு எவ்வாறான தாமதங்களை இவர்கள் ஏற்படுத்தினார்கள்?

மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அவர்கள் இழந்த ஏனைய அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்படுமென ஜனாதிபதி கூறியது உண்மையானால் சிறைச்சாலைகள், புனர்வாழ்வு நிலையங்களில் ஏன் இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? காணாமல் போன தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு அல்லது ஒரு தடவையேனும் தங்கள் கண்முன்பாக காட்டுமாறு ஆயிரக்கணக்கான பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டழுது மன்றாடுகின்ற போதிலும் ஏன் அவர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை? அதுமட்டுமன்றி இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ளனர். இவர்களுக்கான அந்த உரிமை தொடர்ந்தும் ஏன் மறுக்கப்பட்டு வருகின்றது என்ற தமிழ் மக்களின் நியாயபூர்வமான கேள்விகள் தொடர்பில் அரசின் பதில் என்ன?

பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களின் உரைகள், கருத்துகள் வெறும் வாய்ச்சவடால்களாகவோ அல்லது அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்தல் கால கட்டங்களிலும் யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மீள்குடியேற்றங்கள் தேர்தல் கால நாடகமாக அமைந்ததே வரலாறு. அந்த வகையில் தான் தற்போது யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றதோ என்ற சந்தேகமும் மக்களுக்குண்டு. எனவே வெறும் வாய்ப்பேச்சுகளை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து இரு வருடங்களாகிவிட்ட நிலையில் இனியாவது பாதுகாப்பு வலயங்களை நீக்கி மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும். அந்தவகையில் பசில் ராஜபக்ஷவின் பேச்சு மெய்ப்படவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

http://www.thinakkural.com/editorial/3904-minister.html

தமிழர் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயம் என்பது இனிமேல் இல்லை என்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் முக்கியமான செய்தி வெளிவருவதற்கு முதல் நாள்,யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ்ப்பாணம் கத்தோலிக்கப் பாதுகாவலன் மண்டபத்தில் யாழ் வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றில் உரை யாற்றும்போது, யாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் என எதுவும் இருக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார். அதாவது யாழ். குடாநாடு முழுவதிலும் இரா ணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ரோந்து நடவடிக்கைகளும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைச் சுருங்கக் கூறின் குடாநாட்டு மக்களின் இருப்போடு படையினரின் பிரசன்னமும் இருக்கும் என்பதாகும். இங்குதான் மந்திரியும், தளபதியும் ஒரு கருத்தை- உண்மையை இரு வடிவங்களில் கூறியுள்ளனர். அதாவது உயர்பாதுகாப்பு வலயம் இல்லை என்பது உண்மை. அதற்காக படையினர் இல்லாமல் இல்லை. படையினர் இருந்தால் அவர்களுக்கு இருப்பிடம் தேவை. ஆக, உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயர் இல்லாதொழிக்கப்பட்டாலும் படையினரின் இருப்பிடங்கள் இருக்கவே செய்யும்.

http://valampurii.com/online/viewnews.php?ID=19011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.