Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் சிங்கள காடையர் அட்டகாசம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tuesday, 10 May 2011 03:15

யாழ்ப்பாணத்தில் சிங்கள காடையர் அட்டகாசம் !

யாழில் ஐ.நா வின் அறிக்கையை எதிர்த்து ஊர்வலம் நடப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இருப்பினும் அவர்களில் அநேகமானோர் சிங்கள காடையர்கள் எனவும், இராணுவத்தால் அவர்கள் வரவளைக்கப்பட்டு அங்கே நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. முற்சக்கர வண்டி, மற்றும் வான்களை இவர்கள் வாடகைக்கு அமர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கூச்சலிட்டுள்ளனர். போதாக்குறைக்கு தமிழர்களை மிரட்டியும் ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்து வாங்கியுள்ளனர்.

sankathi

இன்று யாழ் குடாநாட்டுக்கு வந்த பசில், அண்ணாவின் ஒரு "செய்தியை" கொண்டுவந்துள்ளராம். இதன் மூலம் தமிழர்களின் நியாயமான குரலை அடக்குவதே சிங்கள அரச பயங்கரவாதத்தின் நோக்கமாக தெரிகின்றது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33926

ஐ.நா. அறிக்கை, "மிஞ்சி இருக்கும் தமிழர்களின் வாழ்வுரிமையையும் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது", என தமிழர் தரப்பு ஐ.நா.விடமும் மேற்குலகத்திடமும் முறையிட வேண்டும்.

இந்த தமிழ்நெட் இணைப்பில் படங்களும் உள்ளன:

Sinhalese stage anti-UN demonstration in Jaffna : http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33923

தமிழ் மக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்றமை ஜனநாயக விரோதமானது! கூட்டமைப்பு கண்டனம்

நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக சிறிலங்காவின் பிரதி அமைச்சர் ரத்நாயக்கா தலைமையிலான குழுவினர் பொதுமக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்றமை ஜனநாயக விரோதமான செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் அச் செயல் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.05.11) பிரதியமைச்சர் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றமை கவலைக்குரியதாகும். நிபுணர்கள் குழுவின் அறிக்கையைத் தமிழ் மக்களின் சார்பில் வரவேற்பாதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந் நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்கு மாறாக வெளியிடங்களில் இருந்து வந்து கையொப்பத்தை பெறுவது மக்களின் உண்மையான கருத்தை வெளிப்படுத்தாது. இந்தச் சம்பவம் படையினர் மற்றும் காவற்துறையினரின் பிரசன்னத்துடனும், நிர்ப்பந்தத்துடனும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடு. கருத்துக்களை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் வெளிப்படுத்துவதே நியாயமானது. மக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்ற இந்தச் செயலை நாம் கண்டிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு துணை போக வேண்டாம் என இங்குள்ள நிறுவனங்கள், அமைப்புககுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்' என மாவை சேனாதிராஜாவால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தனியார் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரத்நாயக்கா தலைமையிலான நூறு பேர் கொண்ட குழு கடந்த 8ஆம் திகதி வடபகுதியில் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழ் மக்களிடம் நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்துப் பெற்றமை குறிப்பிடத்தக்கது

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={81E6BA18-CCAA-4CB8-99A2-FE2DBAE0BE35}

to: sg@un.org

cc: ngochr@ohchr.org

Subject: Tamils being threatened, forced to sign against UN report

Dear Secretary General,

In the aftermath of UN report, Tamils in Sri Lanka are being subject to intimidation for sometime now. But, in recent days the intimidation has been more visible and direct. They have been asked to sign petitions against UN by thugs. Further, some civil organizations have been warned not to cooperate as well.

UN has a moral responsibility to safeguard and guarantee the safety of Tamils in Sri Lanka who have already suffered immensely. We cannot simply remain in silent.

Thanks You!

-----------------

Ref: Sinhalese stage anti-UN demonstration in Jaffna: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33923

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.