Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு

Featured Replies

இராணுவத்தினரை தாக்கும் பொது மக்களையும் சுடுமாறு படையினருக்கு இராணுவத் தளபதி உத்தரவு

இராணுவத்தினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினால் அவர்களைச் சுடுவதற்கான உத்தரவை இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, ஏழாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட விடுதலைப் புலிகளால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் படையினரை ஒன்றும் செய்து விட முடியாதெனவும் கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

விடுதலைப் புலிகள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தி வருகின்றனர். இம் முறை மட்டுமல்ல கடந்த காலங்களிலும் இதனையே செய்தனர்.

எண்பதுகளின் ஆரம்பப் பகுதியை ஒத்ததாகவே குடாநாட்டின் நிலமையுள்ளது. எனினும், 85 களில் யாழ். குடாநாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததைப் போல் இப்பொழுதும் எத்தனித்தார்கள். எனினும் புலிகள் அதில் தோற்றுவிட்டனர்.

இப்போது, புலிகள் பொது மக்களைத் தூண்டி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். இராணுவப்பயிற்சி பெற்றவர்களை எவ்வாறு பொது மக்கள் என்று கருதுவது?

தற்பொழுது மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் புலிகளிடம் இராணுவப் பயிற்சி பெற்றுள்ளனர். அது தவிர யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 15,000 பேர் இராணுவப் பயிற்சி பெற்றவர்கள்.

விடுதலைப் புலிகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி இராணுவ துணைப்படைகளிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு கோருகின்றனர். ஆனால், அவர்கள் மக்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குகின்றனர். இவர்கள் மட்டும் ஏன் மக்களுக்கு ஆயுதம் வழங்குகின்றனர்?

யுத்த நிறுத்த காலத்தில் யாழ். குடாநாட்டிற்குள் வந்த புலி உறுப்பினர்களது எண்ணிக்கைக்கு அளவில்லை. அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் பொது மக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களை படுகொலை செய்கின்றனர்.

இந்நிலையில், போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறுவது போல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி?

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கு இல்லை. தமக்கு வரும் முறைப்பாடுகளை பதிவு செய்து தமது பைல்களை நிரப்ப மட்டுமே முடியும்.

கடந்த கால அனுபவங்களின் படி, சமாதான பேச்சுவார்த்தைக் காலங்களில் இராணுவமும் அரசும் தமது இராணுவச் செயற்பாடுகளை முடக்கி வைத்திருக்கையில் புலிகள் தமது ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்வார்கள். பின்னர் இராணுவத்தினரை தாக்குவார்கள்.

புங்குடுதீவில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக கடற்படை மீது புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். கடற்படையை தாக்குவதற்கு அவர்கள் யார்? அந்தப் பெண்ணை கடற்படை வீரரே கற்பழித்ததாக இருப்பினும் கடற்படையை தாக்குவதற்கு புலிகளுக்கு அதிகாரமில்லை.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதாக புலிகள் கூறுகின்ற போதிலும் நடைமுறையில் அப்படியில்லை. இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தாமில்லையென கூறுகின்றனர். அதை இராணுவம் செய்தால் பெரிதாக்கி விடுவார்கள். என்ன கோழைத்தனமான நடிப்பு இது?

எது எப்படியிருப்பினும் இராணுவத்தினரை முறியடிப்பதற்கு புலிகளால் முடியாது. யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் ஆயுதங்களைக் கடத்தியதற்காக, புலிகள் இராணுவத்தினரை வெற்றி கொள்வார்களென கூற முடியாது. இராணுவத்தினரை சரியான வழியில் நெறிப்படுத்தினால் புலிகளால் இராணுவத்தை எதிர்கொள்ள முடியாது.

இராணுவத்தினர் மீதான தாக்குதல் நடத்துவதற்கான பயங்கரவாத உத்தியாக பொதுமக்களை தமது கவசமாக பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தம் மீள ஆரம்பிப்பதற்கு நாம் காரணகர்த்தாவாக இருக்க மாட்டோம். எமது ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய அரசு சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதையே நாம் விரும்புகின்றோம். இராணுவத்தினர் பேச்சில் ஈடுபட முடியாது.

அரசு- புலிகளுடன் பேசி ஒரு தீர்மானத்திற்கு வந்த பின்னர் என்ன செய்ய வேண்டுமென எமக்கு தெரிவிக்கட்டும் நாம் அதைக் செய்வோம். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதங்கள், கிளேமோர்கள் உண்டு. அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லாவிடில் அவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இராணுவத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம்

பார்த்தீர்களா சிங்களத்தின் முடிவை அப்புறம் மக்கள் வன்னிக்குச் செல்லாமல் என்ன ஆமிக்காரனிடம் சூடு / அடி வாங்க சொல்கிறீர்களா? வா.பா

சுட்டது: லங்காசிறீ

  • Replies 110
  • Views 12.7k
  • Created
  • Last Reply

லெனினை ஒரு சர்வாதிகாரி என்று செல்லும் கிறுக்கன் இல்லை நான். புரட்சி முடிந்த பின்னர் காலம் போகப் போக எல்ல குடியரசிலும் பொரும்பான்மையான மக்கள் கமுயூனிசத்தில் இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தார்களா? நம்பிக்கை இழக்கப்பட்ட போது அதன் விளைவுகள் எவ்வாறு கட்டுக்கு மீறாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும் கொஞ்சம் யோசியுங்கள். நிச்சையமாக கிட்லரின் படையெடுப்பு மீண்டும் ஒன்று சேர உதவியது. அந்த பொது எதிரியை வெற்றி கொண்ட பெருமை தான் (ஒரு போர்த் தளபதியாக) ஸ்ராலினுக்கு உண்டு. ஒரு நாட்டின் (அல்லது பல குடியரசுகளின்) நல்ல தலைவனாக போர் அற்ற காலங்களில் இருக்க முடியவில்லை ஸ்டாலினால்

பொருளாதார விடயங்களில் கம்யூநிசம் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம் அல்லது வேறு இசத்தைப் புகுத்தி அல்லது மாற்றம் செய்திருக்கலாம்.....

எப்படி எண்டாலும் தமிழீழம் தனித்துவமாய் தன் கொள்கையை நிலைநிறுத்தும்... அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.... :wink:

31ம் திகதி என்னோடை இருந்து ம...படிச்ச ஒரு வானம்பாடியைக்கானேல்லை யாராவது கண்டனீங்களே ?????

ஆள் 2 போத்தல் காசு குடுக்கேல்லை எண்டு பார் காறன் தேடினவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்திங்களா எங்கட அப்பாவி பொதுமக்ககள் எல்லாரும் சிங்களராணுவத்தால பல கொடுமைகளை உத்ததிக்கின்றார்கள் ?

சுனாமி வந்து இப்பத்தான் ஒரு வருடம் ? அதுக்கில இவங்கள் கொடுமைகள் சனம் என்ன பன்றது வன்னிக்குத் தானே போக வேண்டும் அங்க உள்ள மக்களுக்கு நிம்மதி Üடா இல்லை பாவம் அப்பாவி பொதுமக்கள் இறைவனுக்குÜட கண் இல்லையா :cry: :evil: :evil:

இறைவனுக்குÜட கண் இல்லையா :cry: :evil: :evil:

ஆமாம் கீதா சரியாகச் சொன்னீர்கள்.

நம்ம இறைவனுக்கு....................

கண்ணிருக்கு ஆனால் பார்க்காது.

வாயிருக்கு ஆனால் பேசாது.

காதிருக்கு ஆனால் கேளாது.

மூக்கிருந்தும் முகராது.

ஏனெனில் அது கல்லினாலான சிலையும் அச்சடிக்கப்பட்ட படமும் மட்டுமே.

ஆமாம் கீதா சரியாகச் சொன்னீர்கள்.

நம்ம இறைவனுக்கு....................

கண்ணிருக்கு ஆனால் பார்க்காது.

வாயிருக்கு ஆனால் பேசாது.

காதிருக்கு ஆனால் கேளாது.

மூக்கிருந்தும் முகராது.

ஏனெனில் அது கல்லினாலான சிலையும் அச்சடிக்கப்பட்ட படமும் மட்டுமே.

அடுத்த பவுர்ணமிக்கு பிள்ளையாரின் டான்ஸ்

ஊமைக்கு மேல தான்.. :P :D

அடுத்த பவுர்ணமிக்கு பிள்ளையாரின் டான்ஸ்

ஊமைக்கு மேல தான்.. :P :D

எனக்கென்ன சாமி கண்ணைக் குத்தப் போகுது...

ஐயோ சாமீ........... ஒரு பேச்சுக்கு சொன்னேன். :lol::lol::lol:

Now I am leaving ... and we will meet us again within this week ...ok... bye..bye... and take care

அப்பாடாாா கடவுளுக்கு நன்றி

ஓய் இதை எப்படியப்பா ஆங்கிலத்தில எழுதிறது

Thankx a god

சரியா பிள்ளையள் ஒரு இம்சை இல்லையப்பா இந்தக்கிழமை

:P :P :P :P :P :P :P :P :P

அடுத்த பவுர்ணமிக்கு பிள்ளையாரின் டான்ஸ்

ஊமைக்கு மேல தான்.. :P :lol:

ஓம் ஓம் ஒரு காலை உவர் ஊமையின்ர தலையிலையும் மற்றக்காலை டூயவனின்ர தலையிலையும் வச்சு ஆடும் பாக்க நல்லா இருக்கும்

:evil: :evil: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடாாா கடவுளுக்கு நன்றி

ஓய் இதை எப்படியப்பா ஆங்கிலத்தில எழுதிறது

Thankx a god

சரியா பிள்ளையள் ஒரு இம்சை இல்லையப்பா இந்தக்கிழமை

:P :P :P :P :P :P :P :P :P

ஜோவ் சின்னா லொள்ளா? ஒரு இம்சையா களத்தில நிக்குது,,,என்னொரு இம்சை யாழ்களத்தில அதுவும் பக்கத்த இருக்கிற உங்க கருத்துப்பிரிவில பாய் போட்டு படுத்திருக்கப்பா.... :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.