Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தேசிய தலைவர் அழுவதற்காக நாட்களை தெரிவு செய்தது இல்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசிய தலைவர் அழுவதற்காக நாட்களை தெரிவு செய்தது இல்லை!

வெள்ளி, 20 மே, 2011

பலமாக உருவாக்கப்பட்ட குழப்பங்களின் மத்தியில் இந்த வருடம் நடைபெற்ற மே 18 போர்க் குற்ற நாள் புலம்பெயர் தமிழர்களால் பேரெழுச்சியுடன் நடாத்தப்பட்டது. லண்டனில் 20,000 இற்கும் அதிகமான மக்களும், பிரான்சில் 5,000 இற்கும் அதிகமான மக்களும், கனடாவில் 40,000 இற்கும் மேற்பட்ட மக்களும் எனப் புலம்பெயர் தேசங்கள் எங்கும் மக்கள் வெள்ளம் திரண்டெழுந்து சிங்கள தேசத்தின்மீது போர்க் குற்றம் வாசித்தது. மே 18 நிகழ்வுகளைக் குழப்ப சில புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளிவிட சில தமிழ் சக்திகள் முயன்றது. போராட்டமும் அதன் தலைமையும் முடிவுபெற்றுவிட்டது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க பலர் முயன்றனர். ஆனால் மக்கள் திரண்டு ஒரு தெளிவன செய்தியை உலகிற்கு பறைசாற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டில் தமிழ்த் தேசிய தளங்களால் போர்க் குற்றவியல் நாளாக அறிவிக்கப்பட்டு, புலம்பெயர் தேசமெங்கும் பேரெழுச்சியுடன் நடாத்தப்பட்ட மே 18 நினைவு தினத்தை, இம்முறை துக்க நாளாக மாற்றவும், அது துக்க நாளா இல்லை போர் குற்ற நாளா என்று பட்டி மன்றங்களும் நடந்தது. மே 18 போர்க் குற்றவியல் நாளில் மாற்றங்கள் செய்வது விடுதலைத் தளத்தை மலினப் படுத்தும் செயலாகவே நோக்கப்பட்டது. தமிழீழம் எத்தனையோ பேரிழப்புக்களை, அழிவுகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், தேசியத் தலைவர் அவர்கள் எந்த நிகழ்வையும் அழுவதற்கான தினமாக அறிவித்ததே இல்லை என்பதனை நாம் முதலில் உணரவேண்டும்.

அழுகை தோல்வியின் அடையாளம். இயலாமையின் வெளிப்பாடு. அது எமது போர்க் குணத்தை சிதைத்துவிடும் என்பதே தேசியத் தலைவர் அவர்களது சிந்தனைத் தெளிவாக இருந்தது. தேசியத் தலைவரைப் பின்பற்றியே, புலம்பெயர் தமிழர்கள் நேற்று முந் தினம் அலையெனக் குவிந்தனர், அவர்கள் அங்கே அழவில்லை ! ஆர்பரித்து எழுந்து உலகே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணைகளை நடத்து என உரத்த குரலில் ஒற்றுமையாக நின்று கூறினர். இன அழிப்பை உலகிற்கு வெளிக்கொண்டுவரவேண்டும் என கோஷமிட்டனர். அரசியல் வாதிகளை திருப்திப்படுத்த, இன அழிப்பு என்ற வார்த்தையை சில அமைப்புகள் கையில் எடுப்பதை தவிர்த்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. ஆனால் அதனையும் தாண்டி, தற்போது தமிழ் மக்கள் ஒரு ஆணை பிறப்பித்துள்ளனர்.

மக்களுக்காக வேலைசெய்யும் அமைப்புகள் ஒவ்வொன்றும், போர் குற்றம், இன அழிப்பு ஆகிய இரண்டு விடையங்களையும் உலகிறகு முன்னர் கொண்டுசெல்லவேண்டும் என்பதே அந்த ஆணையாகும். இந்த மக்கள் ஆணையை அனைத்து தமிழ் அமைப்புகள் ஏற்கவேண்டும். போர் குற்றம், மற்றும் இன அழிப்பு என்ற ஆயுதங்களைக் கையில் எடுத்தால் மட்டுமே தமிழர்களின் போராட்டம் முன் நகர்த்தப்படும், இதில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.