Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் நம்மவர் சினிமா.. தமிழக தமிழனின் பார்வையில்..

Featured Replies

பொதுவாக இலங்கை தமிழன் என்றால் இந்தியாவில் இருக்கும் அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு முள்வேலியில் அவர்கள் சிந்திய ரத்தமும். எண்ணெய் காட்டாத தலைகளாய் அவர்கள் கதறலோடு ஷெல்லுக்கு பயந்து ஓடும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும்... ஆனால் இந்த படம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வேறு பக்க வாழ்க்கையை சொல்லும் படம்.....

சென்னையில் சத்தியம் மற்றும் மாயாஜல் தியேட்டரில் சுற்றும் இளைஞனை போல் அவர்கள் இருப்பதும், அவர்கள் இலங்கை தமிழ் பேசும் போதுதான்.. அவர்கள் இலங்கை தமிழர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்... எல்லாம் அல்ட்ரா மார்டனாக இருக்கின்றார்கள்...1990 களில் கனடாவில்புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் இளைஞர்களின் இரண்டு கேங்குகளுக்கு மத்தியில் நடக்கும் சண்டையே கதை......1999 படத்தின் கதை என்ன??

மரனா ஒரு கேங்.... குமார் ஒரு கேங்.. இரண்டு கேங்குக்கும் கீரியும் பூனையும் போலத்தான்...அகிலன் மற்றும் அன்பு இரண்டு பேரும் பால்யகால் நண்பர்கள்.. ஆனால் இருவரும் கீதா என்ற பெண்ணை நேசிக்கின்றார்கள்.. ஒருதலைக்காதல்தான்...

அகிலன் ரொம்ப நல்லவன்.. பட் அன்பு குமார் கேங்கில் சேர்ந்து வம்பு வழக்குகளில் சுற்றிக்கொண்டு இருப்பவன்... முக்கியமாக அப்பாவின் பேச்சை கேட்கவே மாட்டான்..

ஒரு நாள் குமாரின் தம்பி, மரனாவின் தம்பியை வாய்த்தகராறில் துப்பாக்கியால் சுட்டு சாகடித்து விட,கேங் தலைவன் குமார், மரனாவிடம் இருந்து தன் தம்பியை காப்பாற்ற தன்னையே நம்பி தன் கூடவே சுற்றி வரும் அன்பு மேல் அந்த கொலை பழி வருவது போல் செய்து விட... அந்த கொலைபழியில் இருந்து அன்பு வெளியே வந்தானா? அகிலன் மற்றும் அன்பு இரண்டு பேரும் யார் முதலில் தன் காதலை கீதாவிடம் சொன்னார்கள் என்பதை வெண்திரையில் காண்க..

=========================================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை அவுத்து போட்டு ஆடிச்சான்னு ஒரு பழமொழி இருக்கின்றது.... இலங்கையில் நடந்த இனப்போரில் துப்பாக்கி சண்டையில் தன் குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ளவும் , தன் குலம் செழிக்கவும் உலகம் எங்கும் ஈழ மக்கள் போரின் காரணமாக புலம் பெயர்ந்தார்கள்..

பலர் கனாடா நாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்.. அதில் இரண்டு இளைஞர் குழுவுக்குள் நடக்கும் சண்டையில் யார் ஜெயித்த்தார்கள்?? என்பதே இந்த படத்தின் கதை...துப்பாக்கி தோட்டாவுக்கு பயந்து பிழைப்புக்கு தஞ்சம் புகுந்த நாட்டிலும் துப்பாக்கியை தூக்கிய இலங்கை தமிழ் இளைஞர்களின் கதை இந்த படம்......

முக்கிய காதாபாத்திரத்தை தவிர்த்து விட்டு நம் நெஞ்சில் இருப்பவர்கள்.. அன்பின் அப்பாவும் உடும்பன் கேரக்டரும்தான்....

திட்டி அனுப்பிய பிள்ளையிடம் மனது கேட்காமல் போனில் மன்னிப்பு கேட்கும் அந்த காட்சியில் நெகிழவைக்கின்றார்....நடிப்பும் அற்புதம்....எனக்கு தெரிந்து சிறப்பான நடிப்பை திரைப்படத்தில் இயல்பாய் வெளிபடுத்தியவர் அவரும் உடும்பன் கேரக்டரும்தான் என்பேன்..

நிறைய நாடகத்தனமான நடிப்பு எல்லோரிடத்திலும் குடிகொண்டு இருக்கின்றது... அது பலரிடம் பலநேரம் எட்டி பார்க்கின்றது... அதையும் மீறி தனக்கு கொடுக்கபட்ட பாத்திரத்தை உள்வாங்கி செய்து இருப்பவர்... அந்த உடும்பன் கேரக்டர்தான்...

முக்கியமாக அகிலன் கேரக்டர் வெயிட்டாக இல்லை...ரொம்பவும் சாப்டாக இருக்கின்றார்...நல்லது செய்ய நினைத்தால் அவர்கள் கொல்லபடுவார்கள் என்பதை ஆகிலன் கேரக்டர் நிருபித்து இருக்கின்றது...இந்த உலகத்தில் நல்லலவனாக இருப்பது என்பது தகுதி இழப்பு என்று நான் அடிக்கடி சொல்லும் வாக்கியத்துக்கு உயிர் கொடுத்து இருக்கின்றார் இயக்குனர் சிவம்.....

லெனின் சிவன் இந்த படத்தை எழுதி இயக்கி எடிட் செய்து இருக்கின்றார்....

ரொம்ப லோ பட்ஜெட் படம்....

முக்கிய கேரக்டரான கீதா மற்றும் இன்னோரு கேங் தலைவனான மரனா இரண்டு பேரையும் படத்தில் எங்ககேயும் காண்பிக்காமல் திரைக்கதை அமைத்து இருக்கும் யுக்தி நன்றாக இருக்கின்றது...

படத்துக்கு பெரிய மைனஸ்.. டெம்ளெட் இசைதான்... சில சமயம் கடுப்பை கிளப்புகின்றது....

ஒளிப்பதிவு செய்து படத்தயாரிப்பில் பங்கு கொண்டும் இருக்கின்றார் சபீசன்...

முக்கியமாக டைட்டில் முடிந்து தொடங்கும் முதல் காட்சியில் மரனா தம்பியை கொலை ரோட்டில் வைத்து கொலை செய்யும் இடத்தில் லைட்டிங் நன்றாக இருக்கின்றது...

அகிலனின் நண்பரில் தமிழில் பேசாமல் பீட்டர் வீடும் கேரக்டர் வித்யசமான கேரக்டர்....

இயக்குனர் தன் நண்பர் யாரோ ஒருவரை கேங் வாரில் பலி கொடுத்து இருக்க வேண்டும்... அதன் பாதிப்பு ரொம்ப டடீடெயில்டாக சொல்லி இருக்கின்றார்...

அவ்வப்போது ரேடியோவில் ஈழத்து செய்திகளை சொல்லி தங்கள் பிரச்சனையை உலக அளவில் கவனப்படுத்துகின்றார்கள்..

புலம் பெயர்ந்த இடத்தில் நல்ல வாழ்க்கை வாழ்வதை விட்டு விட்டு கேங் அமைத்து துப்பாக்கி தூக்கி கொண்டு சுற்றுவதை ஏற்றுக்கொள்ள நம் மனம் மறுக்கின்றது...ஆனால் உண்மை துப்பாக்கியால் சுடுகின்றது...

=====================================

இந்த படம் வாங்கி குவித்த விருதுகள்..

CBC Reel Audience Choice Award, ReelWorld Film Festival in April, 2010

Best Film Award (Midnight Sun), Oslo Tamil Film Festival in February, 2010

Top 10 Canadian Films, Vancouver International Film Festival in October, 2009

Official Selection, Toronto TAMIL STUDIES CONFERENCE in May, 2010

Best Feature Film Award, Toronto Independent Art Film Society (IAFS) in June, 2010

Official Selection, University of Toronto Cinema Studies Student Union (CINSSU) in March, 2010

Part of the ‘Best Features’ Showcase, Toronto 2010 Moving Image Film Festival (MIFF) in October, 2010

Official Selection, Swiss South Indian Film Festival (SSIFF) in October, 2010

Official Selection, Ilankai Thamil Sangam (ITS) in November, 2010

Official Selection, Canadian Tamil Film Festival (CTFF) in January, 2011

Official Selection, London Happy Soul Festival (HSF) in June, 2011

========================

படக்குழுவினர்விபரம்...

Directed by Lenin M. Sivam

Produced by Sabesan Jeyarajasingam

Jeya Subramaniyam

Written by Lenin M. Sivam

Starring K. S. Balachandran

Ampalavanar Katheeswaran

Suthan Mahalingam

Thelepan Somasegaram

Kaandee Kana

Deva Gasparson

Vince Jerad

Sutha Shan

Madona T. Alphonse

Mannoge Rajanan

Gobiraj Thiruchelvam

Music by Raj Thillaiyampalam

Cinematography Sabesan Jeyarajasingam

Editing by Arul Shankar

Studio Khatpanalaya Production Inc

Bagavan Productions

Running time 101 min.

Country Canada

Language Tamil

===========================

படத்தின் டிரைலர்...

பைனல்கிக்

இந்த படம் டைம்பாஸ்படம்தான்.. கொஞ்சம் நாடகதனமான நடிப்பை தவிர்த்து இருந்தால் இந்த படம் அடுத்த படிக்கு முன்னேறி இருக்கும்.. இருப்பினும் திரைக்கதையில் சின்ன சின்ன டுவிஸ்டுகள் ரசிக்க வைக்கின்றன....புலம்பெயர்ந்த தமிழர்களின் முழு நீளதிரைப்படம் இது என்பதால் மேலும் பாராட்டலாம்...

thanz...http://www.jackiesekar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.