Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்

Featured Replies

தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்குரிய தற்பாதுகாப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் இதில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிராயுத பாணிகளாகஇ வெறும் அடையாள அட்டைகளுடன் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டும்இ வெட்டியும்இ குண்டு வீசியும் கொன்றொழிக்கும் கொடிய கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து கொடுக்க இந்தப் பயி;ற்சிகள் நடைபெறுகின்றன.

இலங்கையில் நடைபெற்ற இனப்போர் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலியல் பலாத்காரம் உட்பட வர்ணிக்க முடியாத கொடுமைகள் எல்லாம் அங்கு நடந்தேறிவிட்டன.

உலக சமுதாயமும்இ ஊடகங்களும் ஐ.நா மன்றும்இ ஐரோப்பிய ஒன்றியமும் இதுவரை எமது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பின்னர்தான் கூலிக்கு மாரடிப்பதற்காக பாசாங்கு செய்துள்ளன. வருமுன் காப்பதற்கு உலக சமுதாயம் என்றுமேஇ எங்குமே முன் வந்ததாக இல்லை. சர்வதேச சட்டங்களின்படி ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. இப்போது பொது மக்களுக்கு நடைபெறும் தற்பாதுகாப்புப் போர்ப்பயிற்சி சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதுதான்.

1958 இனக்கலவரம்இ பின் 1978இ 1983 என்று வரிசையாக நடைபெற்ற கலவரங்கள்இ வடமராட்சி தாக்குதல்இ கொக்கட்டிச் சோலைப் படுகொலைகள்இ சூரியக்கதிர் என்று அத்தனை படுகொலைகளையும் பட்டியலிட்டால் அங்கெல்லாம் மடிந்தது அப்பாவி பொதுமக்கள்தான். இவர்கள் வரலாற்றால் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொல்லப்பட்டார்கள் என்பதை நினைத்தால் உள்ளம் கொதிக்கும். பொது மக்களாக வாழ்ந்துஇ வெறுங்கைகளை காற்றில் வீசியபடி உயிர் காக்க அவர்களோடு ஓடியிருந்தால் அந்த வேதனையின் முழுப் பரிமாணத்தை நீங்களும் உணர்வீர்கள்.

பல மானிடப் படுகொலைகள் தமிழீழத்தில் நடைபெற்ற போது அந்த இரத்தமும் சதையும் சிதறிய இடத்தில் நின்று பொது மக்களின் குரல்கள் எவ்வாறு இருக்குமென்பதைக் கேட்டவர்களர் எவரும் இந்தப் பயிற்சியை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.

வல்வையில் அப்பாவிகளை பிடித்துச் சென்ற இராணுவம் 23 பேரை ஒரு சிறிய நூல் நிலையித்தில் அடைத்து வைத்துவிட்டு அதன் கீழ் பாரிய வெடிகுண்டை வைத்துத் தகர்த்தது. அந்த நேரம் மடிந்த அப்பாவிகளின் ஒருவருடைய உடலைக்கூட முழுமையாக எடுக்க முடியவில்லை. அதில் மடிந்த அத்தனைபேரும் போர்இ ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாத அன்றாடங்காய்ச்சிகள்.

அதற்குப் பத்தாவது நிமிடம் அருகில் இருந்த தீர்த்தக் கடற்கரையில் பன்னிரெண்டு பேரை வரிசையாக விட்டு சுட்டுத்தள்ளினார்கள். அந்தப் படத்தில் ஒரு சிறுவன் பின்புறத்தை உணர்த்தியபடி குப்புறக் கிடக்கிறான். இவன் சந்தையில் வாழைக்குலை தூக்கிக் கொடுத்து சீவியம் நடாத்திய ஊமைச் சிறுவன். தமிழர் சிங்களவர் என்ற இனப் போர் இருப்பதே இவனுக்கு தெரிந்திருக்க நியாமில்லை. அந்தச் சிறுவனின் அவல ஒலியைக் கேட்ட இன்னொரு நண்பர் மெல்ல எட்டிப்பார்த்தார்இ அவரையும் சுட்டார்கள்இ சூடு வாங்கியபடியே ஓடிச்சென்று கடலில் விழுந்து இறந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்கள்தான் ஆகியிருந்தது.

இந்த நிகழ்வுகளும்இ வெறியாட்டுக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தபோது அந்தப் பொறிக்குள் மாட்டுப்பட்ட மக்கள் அந்த நேரம் என்ன பேசினார்கள் என்பது அவர்களோடு மாட்டுப்பட்டவர்களுக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஐ.நா மன்றின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூடுகளுக்குள் இருப்போருக்கு இதன் அரிச்சுவடியும் தெரியாது.

நம்மிடம் மட்டும் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நாமும் இவர்களை சுட்டு உயிர் தப்பியிருக்கலாமேஇ இந்த ஆபத்திலிருந்து தப்புவதற்கு ஒரு தற்பாதுகாப்பு பயிற்சியைக் கூட கற்றுக் கொள்ளாமல்; போனோமே? என்று புலம்பியவர் பலர். இந்த அவலத்திற்கு முதலில் விடைகாணாமல் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வட்டுக்கோட்டையில் போய் தமிழீழம் பிரகடனம் பண்ணி என்ன பயன் என்று பலர் அங்கலாய்த்தார்கள். அடுத்த கணம் துப்பாக்கி வெடியில் சிக்குண்டு இவ்வுலக வாழ்வை நீத்தவர் பலர். துள்ளித் திரியும் வயதில் என் துடிப்படக்கி பள்ளிக்கு அனுப்ப மறந்தாயே பாதகத்தி என்று தனது தாயரை பட்டினத்தார் திட்டியது போலத்தான் மக்கள் வேதனைப்பட்டு மடிந்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல புகைகுழியில் கிடக்கும் ஒரு இலட்சம் அப்பாவிகளின் ஆதங்க ஒலி இது.

இப்படிக் கூறுவதால் மக்கள் போரிட்டு அழிய வேண்டுமென நினைப்பதாக தப்பான கோணத்தில் பிழை பிடிக்க முயலக் கூடாது. உலகத்தில் எல்லா நாடுகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் முறை கட்டாயப் பயிற்சியாக இருந்து வருகிறது. ஆனால் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமிழர் என்ற ஒரே காரணத்தால் தகுதி இருந்தும் இராணுவம்இ போலீஸ் உட்பட முப்படைகளிலும் சேர்க்கப்படாது விரட்டியடிக்கப் பட்டார்கள்.

எல்லாவற்றையும் விடுங்கள் முப்படைகளிலும் தமிழர்களை எத்தனை விழுக்காடு சேர்த்தீர்கள் என்பதை சிறீலங்கா அரசிடம் விசாரித்துப் பாருங்கள். ஒரு வீதம்கூட தமிழர்கள் சேர்க்கப்படவில்லை. பின்னாளில் வரக்கூடிய இனப்போரினைக் கணக்கிட்டுத்தான் அவ்வாறு செய்தார்கள் என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் இனியும் மக்களை வெறுங்கையோடு கும்பிட்டு மன்றாடும் பேதைகளாக வைத்திருக்க முடியாது. இன ஆக்கிரமிப்பிற்கு எதிராக மட்டுமல்ல சமுதாயத்தில் ஒழுங்குஇ ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் இது தேவைப்படுகிறது. போதைவஸ்துஇ படுகொலைஇ கொள்ளைஇ சாதி மோதல்இ கோஸ்டி மோதல் போன்றன மக்களிடையே திட்டமிட்ட முறையில் பரவ விடப்பட்டுள்ளன. மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்கும் பணி நன்கு திட்டமிட்டு அரங்கேறியுள்ளது. ஒன்றுந் தெரியாத சாதாரண குடிமகன் அச்சமின்றி வாழ அங்கு யாதொரு வழியும் இல்லை.

இப்படியான அவலங்களைத் தடுக்க பெரும் பெரும் மக்கள் விழிப்புக் குழுக்கள் இப்போது அவசியம். ஒவ்வொரு ஊரையும் அவ்வவ் ஊர் மக்கள் இரவு பகலாக தவணை அடிப்படையில் காவல் புரிய வேண்டிய நிலை உள்ளது. அப்படி செய்யாவிட்டால் லெபனான் வீதிகளாக யாழ். குடாநாடு மாறும். பிற்பொக்கற் அடிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து திருடர்கள் கொண்டுவந்து யாழ் நகரத்தில் இறக்கிவிடப்பட்ட செய்திகள் கூட அங்கு வெளிவந்துள்ளன. நல்லு}ர்இ செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களில் இவ்வருடம் நடைபெற்ற திருட்டுக்கள் சொல்லும் செய்திகள் பல. இவை மேலும் பல மடங்கு பெருகிச் செல்வதைத் தடுக்க மக்கள் படை அவசியம்.

நாட்டில் யாதொரு அழிவுப் போருக்கும் அவசியமில்லாமல் முழு மக்களும் பொறிஸ் ஜெற்சின் தலைமையில் களமிறங்கிய போது ரஸ்யாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு தடுக்கப்பட்டது. அனைத்து இராணுவ முகாம்களையும் மக்கள் சூழ்ந்து மூடும் நிலமை இப்படி சில நாடுகளில் ஏற்பட்டபோது சர்வதேச சமுதாயம் தலைசாய்க்க வேண்டிய நிலை உருவானது. ரஸ்யாவில் நடந்தது போல கடைசித் துணிச்சல் வராவிட்டால் இன்றுள்ள தடைகளை ஈழத் தமிழினத்தால் தாண்ட முடியாது. இதை வவுனியாவில் இருந்து ஆரம்பித்த மக்கள் எழுச்சி நிகழ்வுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மக்கள் களமிறங்காமல் சர்வதேச சமுதாயத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதை இப்போது தமிழ் மக்கள் உணருகிறார்கள் என்பதையே இந்தத் தற்காப்புப் போர்ப் பயிற்சிகள் எடுத்துரைக்கின்றன.

மக்கள் வெற்றிக்கு போர்ப்பயிற்சி முதல் கட்டமாக அவசியமாகிறது. அதைத் தொடர்ந்து அவர்களை நவீன சிந்தனை மயப்படுத்த வேண்டிய பணி இருக்கிறது. பொருளாதாரம்இ உள்ளுர் உற்பத்திஇ மருத்துவம்இ பாடசாலைகள் உட்பட சகல பொது இடங்களிலும் ஊழியர்கள் உருப்படியாக கடமை செய்யும்படி மக்கள் அவர்களை கண்காணித்தல்இ ஊழல்இ இலஞ்சம் போன்ற சமுதாயக் குறைபாடுகளை தகர்த்தல் போன்ற அடிப்படையில் அது தெளிவான நோக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது குறித்த விரிவான வேலைத்திட்ட வழிகாட்டி சகல தமிழீழ மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இப்போது ஐ.நா மன்று தன்னுடைய 60 வது அகவையைக் கொண்டாடுகிறது. ஐ.நாவில் பல அடிப்படை மாற்றங்கள் வேண்டுமென்று பலர் கூறியிருந்தனர். அதுபற்றி ஆரம்பத்தில் உரத்துப் பேசிய ஐ.நா மன்று இப்போது அதை அப்படியே அடக்கி வாசித்துவிட்டது. ஒரு நாட்டில் இரு இனங்கள் இருந்தால்இ அங்கு உள்நாட்டு இனப் போர் ஏற்பட்டால் ஐ.நா அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் மொழிய முதலில் ஒப்புக் கொண்ட ஐ.நா இப்போது கமுக்கமாக கைவிட்டுவிட்டது.

மக்கள் தொகை அடிப்படையில் நாடில்லாத பெரிய இனமாக இன்று தமிழினமே இருக்கிறது. ஐ.நாவின் 60 வது அகவையிலாவது நாடில்லாத இனங்களின் கருத்துக்களுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டுமென்று ஐ.நா கருதவில்லை. நாடுள்ள இனங்களுக்கு மட்டும் ஐ.நா பாதுகாவலராக இருக்கிறது என்ற பிரேரணையை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து முன் வைக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.நாவிலும்இ உலக வங்கியிலும் நடைபெறும் சங்கதிகளை அறியாது தமக்குள்ளேயே மோதுவது ஐ.நாவிற்கு தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்பாகி வருகிறது. இது குறித்தும் மக்களிடையே பேசப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்றுவிட்ட மிகப்பெரிய மானிடப் படுகொலைகளுக்கெல்லாம் ஏது தண்டனை? கண்ணீரில் கிடக்கும் மக்களின் கேள்விக்கு சர்வதேச சமுதாயம் தரும் பதில் எதுவுமே இல்லை என்றால் மக்கள் என்ன செய்வது. ஐ.நாவும்இ சர்வதேச சமுதாயமும் திருதராட்டிரன் போல இருப்பதால் தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாக்க தர்ம வியூகம் அமைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. ஒன்று சர்வதேச சமுதாயம் முழுமையாக மனம் வைத்து இப்பிரச்சனையை தீர்க்க வேணடும்இ இல்லை அவர்களாக தீர்க்க இடம் விட வேண்டும். இந்த இரண்டுமே இல்லாத மூன்றாவது இடத்தில் ஐ.நா மதில் மேல் பூனைபோல இருந்தால் அதை மதிக்க வேண்டிய கடமை ஈழத்தமிழினத்துக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

மக்களின் சக்தி எவ்வளவு என்பது இதுவரை எந்த ஆய்வுகளாலுமே கண்டறியப்படவில்லை. ஆனால் அதை எவ்வளவு பெரியதாகவும் மாற்ற முடியும். முயன்றால் விரும்பியளவு தூரம் அது இழுபட்டுச் செல்லும். அப்படியே வளர்ந்து உலகத்தையே வெல்லும் அஸ்திரமாகவும் அது மாறும். விளக்குக் கம்பத்திற்கு குறி வைக்கும் அம்பு விளக்குக் கம்பத்தைத்தான் தொடப் போராடும். ஆனால் நட்சத்திரங்களுக்குக் குறி வைத்தால் அந்த அம்பு விளக்குக் கம்பத்தை பல மடங்கு தாண்டிச் செல்லும். குறிகளே தூரத்தையும் மக்கள் சக்தியின் அளவையும் தீர்மானிக்கும்.

இதுவரை அப்பாவிகளாக மடிந்த மக்களின் மரணமெல்லாம் நமக்கு கண்ணீரல்லஇ பாடங்கள். விளக்குக் கம்பம் போன்ற சிங்கள தேசமும்இ தென்னாசியாவும் நமது இலக்கல்ல. முழு உலகத்தின் கவனத்தையும் நோக்கி நமது இலக்குகள் இருந்தால் இந்த உழுத்துப் போன மின்விளக்குக் கம்பங்களை நாம் தாண்டி விடலாம்.

உன்னை ஒரு தடவை ஏமாற்றினால் அது ஏமாற்றியவனுக்கு அவமானம் இரு தடவைகள் ஏமாற்றினால் அது உனக்கு அவமானம் என்பது பழமொழி. ஈழத் தமிழினம் இரண்டாவது தடவையும் அப்பாவித்தனமாக ஏமாற முடியாது. கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.

அலைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.