Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர முதல்வரின் மற்றொரு மோசடி அம்பலம்;

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர முதல்வரின் மற்றொரு மோசடி அம்பலம்; பதவி இழந்த உறுப்பினருக்குச் சம்பளம் செல்கிறது

பிரசுரித்தவர்: Sukkran May 22, 2011Add a comment

யாழ். மாநகரசபையில் இடம்பெற்ற மற்றொரு மோசடி அம்பலமாகி உள்ளது.கடந்த 5 மாதங்களாகச் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சட்டத்துக்குப் புறம்பாக மாதாந்த அலவன்ஸ் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டு வருவதைக் கணக்காய்வுத்திணைக்களம் கண்டறிந்துள்ளது.

மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் பணிப்புரையின் பேரிலேயே, கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைக் கணக்கு இலக்கம் ஒன்றுக்குப் பணம் அனுப்பப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் முருகையா கோமகன், கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவால் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரைப் பற்றிய விவரங்கள் இன்று வரை மாநகரசபைக்குப் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.மாநகரசபை சட்டவிதிகளின் படி மூன்று மாதங்களுக்கு ஓர் உறுப்பினர் சபைக் கூட்டங்களுக்கு வருகை தராவிட்டால் அவர் சுயமாகவே உறுப்புரிமையை இழந்தவராகக் கருதப்படுவார்.அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதத்துடன் கோமகனின் பதவி இல்லாது போய்விட்டது.

இதுவரை சபைக்கு அது பற்றிய அறிவித்தல் எதுவும் தரப்படவில்லை. அத்துடன் அவரது இடத்துக்கு வேறு எவரும் நியமிக்கப்படவுமில்லை.ஆனால், பதவியிழந்த கோமகனின் மாதாந்த அலவன்ஸ் எனத் தெரிவித்து அலவன்ஸ் 14,000/= ரூபா வெள்ளவத்தையில் உள்ள கொமர்ஷல் வங்கியின் 8100045008 என்ற இலக்க கணக்குக்கு மாநகர சபையால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களுக்கான அலவன்ஸ் இது என்று தெரிவித்து மாநகர முதல்வர் அறிவித்தலின் பேரில் இந்த வைப்புச் செய்யப்பட்டதாக மாநகரசபை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.இந்த விடயம் கணக்காய்வாளர் நாயக அலுவலக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக இரகசிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

source:Mykathiravan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.