Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

The state of Sri Lanka: After two years, how are efforts progressing in the seemingly intractable conflict between the Sinhalese and Tamils?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The state of Sri Lanka: After two years, how are efforts progressing in the seemingly intractable conflict between the Sinhalese and Tamils?

http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?videoid?957997816001

பேராசிரியர் சேரன், ரமேஸ் கெற்றியராச்சி, பேராசிரியர் கிரேக் ஸ்கொற், சுதாமி பூலோகசிங்கம் மற்றும் ஜோதி சண்முகம் ஆகியோருடன் tvo தொலைக்காட்சிச்சனலுக்காக டானியல் கித்ஸ்

Edited by valvaizagara

சேரன் அவர்களும், கண்ணாடி அணிந்த பிள்ளையும் தெளிவாகவும், நியாயமாகவும் பேசியுள்ளார்கள். முன்னாள் இலங்கை துணை தூதுவரின் மகள் ஐக்கிய இலங்கை எனும் தொனியிலும், இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் நீதி, நியாயத்துடன் நடக்கும் எனும் எதிர்பார்ப்பிலும் கருத்து கூறியுள்ளார். சிங்கள இளைஞர் முரண்பட்ட தரப்புக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதில் உள்ள சிரமங்களை புரிந்துள்ளார். உரையாடலை தொகுத்துவழங்கும் Steve Paikin ஏற்கனவே தமிழர், இலங்கை சம்பந்த்தமாக பல உரையாடல்களை வழங்கியவர். உலக அரங்கில் தரம்மிக்க அரசியல் உரையாடல்களை தொகுத்து வழங்குபவர். இவ்விடயத்தில் சேரன், கண்ணாடி அணிந்த பிள்ளை ஆகியோரின் கருத்தே எனது கருத்தும் ஆகும். இதை ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் கூறி பலரின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ளேன்.

விடுதலைப்புலிகள் மக்களை கேடயமாக பாவித்தது, சிறார்களை யுத்தத்தில் இணைத்தமை என பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. அதேவேளை சிங்களம் மீது பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல், பத்தாயிரக்கணக்கில் மக்களை கொன்றமை என்பன ( ஐ.நா. அறிக்கையை மேற்கோள் காட்டி) வைக்கப்பட்டன.

"இரண்டு தரப்புக்களும் குற்றம் புரிந்துள்ளன" என்பதை இந்த விவாதத்தில் பங்குபற்றிய எல்லோரும் கூறியுள்ளனர், உண்மை. ஆனால் இரண்டு தரப்பும் இரண்டு நாடுகள் மாதிரி ஒரு பார்வை இவர்களால் வைக்கப்பட்டுள்ளது ( உதாரணத்திற்கு, ஈரான் - ஈராக் யுத்தம் போன்று) . ஆனால் ஒரு அமைப்பு விடுதலை அமைப்பு, மற்றையது ஒரு ஐ.நா. அமைப்பில் உள்ள ஒரு நாடு.

அந்தவகையில் ஒரு அரசுக்கான பண்புகளை சிங்களம் கொண்டிருக்கவில்லை என்பது இந்த விவாதத்தில் சொல்லப்படவில்லை. அதற்குரிய தண்டனையையும் இந்த உலகம் சிங்களத்திற்கு தரவில்லை. ஆனால், லிபிய மற்றும் சிரியா மக்கள் மீது அதீத அக்கறை காட்டுவதும் விவாதிக்கப்படவில்லை.

இந்த விவாதத்தை நடாத்திய நிறுவனம் TVO (ஒன்ராறியோ மாநிலத்தின் வரிப்பணத்தில் நடாத்தப்படும் ஒன்று. அதில் இரண்டு இலட்சத்திற்கும் மேலான தமிழீழ மக்களின் வரிப்பணமும் அடங்கும் ) முன்னரும் பல விவாதங்களை நடாத்தியது. இதன் தொகுப்பாளர் அன்று, சிங்களம் ஒரு "அரசு" என்றும், பலரும் கேட்டதற்கு அமைய பொதுமக்கள் அரசின் "பாதுகாப்பு வலயத்துக்குள்" வர வேண்டும் எனவும் பொருட்பட கருத்துக்கூறியவர். அவருக்கு அந்த பலத்தை தந்தவர்களில் அன்று பங்குபற்றிய அன்னா நெய்டாத் (HRW), ஸ்டாலின் (தமிழர், இவர் அண்மையில் 'உலக சிறிலங்கா பேரவை' என ஒன்றை சிங்கள இனவாத அரசுடன் சேர்ந்து ஆரம்பித்தார்), ஒரு சிங்களவர் அடங்கினர். அங்கு அவர்களை வரச்சொல்லுவது தற்கொலைக்கு சமனானது என கனேடிய தமிழர் பேரவையின் சார்பில் டேவிட் பூபாலப்பிள்ளை வாதாடினார்.

இன்று, பக்கம் சார்ந்தவர்களை விவாதத்திற்கு அழைக்காமல் இளையவர்களை அழைத்துள்ளதாக விவாதத்தின் ஆரம்பத்தில் தொகுப்பாளர் கூறினார்.

இதன் மூலம் அந்த மக்களை பாதுகாப்பு வலயத்துக்குள் வரச்சொன்ன தாங்கள், அந்த மக்களின் படுகொலையில் தமது கைகளும் உள்ளன என்பதை. 'எதிர்காலம்' என்ற விவாதத்திற்குள் ஒளித்துக்கொண்டனர், ஒளித்துக்கொள்ள இடம் தந்துவிட்டது TVO.

இரண்டு தமிழரும் ஒரு சிங்களவருமாக மூன்று இளையோர் பங்குபற்றினர் இந்த விவாதத்தில்.

இவர்கள் Young Canadians' Peace Dialogue on Sri Lanka ( http://www.mosaicinstitute.ca/What_We_Do/current_initiatives.html ) என்ற அமைப்பை சார்ந்தவர்கள்.

நிச்சயம் இளையோர்கள், தமிழர்கள்/சிங்களவர்கள் இலங்கையின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என விவாதிப்பது ஆரோக்கியமானது. செல்வி. சண்முகம் தான் ஒரு 'தமிழ் கனேடியன்' என ஒவ்வொரு தரமும் கூறியதும், அதை ஏன் "சிறிலங்கன் கனேடியன்' என தங்களை அடையாளப்படுத்தவில்லை என கேட்டபோது, "சிங்களம் அங்கு தமிழரை சம உரிமைகளை கொடுத்து ஏற்காதவரைக்கும் தன்னால் சிறிலங்கன் என அடையாளப்படுத்த முடியாது உள்ளது" என்பது பாராட்டப்படக்கூடியதாக இருந்தது.

இந்த விவாதத்தின் இறுதியில் தமிழருக்கான 'தனி நாடு' என்பதும் ஒரு தீர்வாக விவாதிக்கப்பட வேண்டுமா என வினவப்பட்டது. சேரனும் (Windsor University) ஸ்கொட்டும் (York University) பதிலளிக்கும் பொழுது, இந்த கருத்தும் சுயாதீனமாக, தடைகளை மீறி, விவாதிக்கப்பாடல் வேண்டும் என கூறினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.