Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் – ஜெனிவாவில் நவநீதம்பிள்ளை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on May 30, 2011-9:38 am

(By Thinakkathir Speacial Correspondent in Geneva)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு அறிக்கையில் சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டியது அந்நாட்டின் கடமையாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை சபையின் 17ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அங்கு விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த உரையாற்றுகையில் இதனைத்தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத்தொடர் அடுத்த மாதம் 17ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

இன்று ஆரம்பமாகியுள்ள 17ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது உரையில்…..

சிறிலங்காவில் யுத்தத்தின் இறுதிக்கட்ட மோதலில் சிறிலங்கா அரசாங்கப்படைகளும் விடுதலைப்புலிகளும் சர்வதேச சட்டங்களை பரந்த அளவில் மீறியுள்ளதற்கு நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு தனது பொறுப்புக்கூறுவது தொடர்பான அறிக்கையில் முடிவாகத் தெரிவித்துள்ளது குறித்தும் நான் இங்கு பிரஸ்தாபிக்கின்றேன்,

இக்குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும். அத்துடன் அரசாங்கம் ஐநா நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை

நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைத்து தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்ற சிபாரிசை நான் பூரணமாக ஆதரிக்கின்றேன். தேவையானால் அதனை சொந்தமாகவும் எடுக்கவேண்டும்.

சிறிலங்கா பற்றிய முன்னர் இடம்பெற்ற பரிசீலனையினதும் உலகம் முழுவதிலுமான சண்டையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றின் பின்னணியில் இம்முக்கிய அறிக்கையில் உள்ள புதிய தகவலை ஏற்றுக் கொண்டு மனித உரிமை சபை தனது நிலையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த வாரம் ஓஸ்திரேலியாவில் உள்ள குடிவரவு தடுப்பு நிலையங்களுக்குச் சென்றேன். குடியேற்றக்காரர்கள், அகதி மற்றும் தஞ்சம் கோருகின்ற சமூகங்களின் பிரதிநிதிகளை நான் சந்தித்து உரையாடினேன். ஓஸ்திரேலியாவின் தற்போதைய கடுமையானதும் மற்றும் நிலைத்து நிற்க முடியாததுமான குடிவரவு தடுப்புக் கொள்கைகளுக்கு மாற்றீடாக பல்கலாசார சமூகத்தில் தோன்றும் புதிய விதமான இனவாதம் மற்றும் இஸ்லாமிய பீதியை முறியடிக்கும் கொள்கை ஒன்றை தோற்றுவிக்கும் அவசிய தேவையை உணரமுடிகின்றது.

ஒஸ்திரேலியாவில் நின்றபோது வட பிராந்தியம் மற்றும் குயீன்ஸ்லந்து வாழ் பழங்குடி சமூகங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பழங்குடி மக்கள் எதிர்நோக்கும் பாரபட்சம் மற்றும் இணக்கமற்ற சூழ்நிலை பற்றியும் அவற்றை கையாளுவதில் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் நேரடியாக அப்போது நான் அறியக்கூடியதாக இருந்தது. தனித்துவமிக்க பழங்குடி மக்களுக்கு அரசமைப்பு ரீதியான அங்கீகாரம் தேவை மற்றும் சட்ட ரீதியான

பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவையாகும். அவை நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும் என நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

அவரின் நீண்ட உரையில் மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகள், லிபியாவின் பதட்டமான சூழல் உட்பட உலக நாடுகளின் மனித உரிமை நிலமைகள் பற்றி விரிவாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளின் பிரதிநிதிகளும் இன்று உரையாற்றுகின்றனர். சிறிலங்காவின் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று ஐரோப்பிய நேரம் 2.30மணிக்கு உரையாற்றுகின்றார்.

source:thinakkathir.

Edited by tamil arasu

இப்பொழுது முழு உலகின் கவனமும் மத்திய கிழக்கு மீதாக உள்ளது. அந்த வேளையிலும் சிங்களம் பற்றி அம்மையார் கூறியதும் வேறு சிலரும் அதைப்பற்றி கதைப்பதும் நம்பிக்கை தருகின்றது.

சிங்களத்திற்கு தாராளமான கல அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் சர்வதேச வேண்டுகோளின் எதிர்பார்புக்கு அமையாமல் இருக்கும். அடுத்த கூட்டத்தொடரில், செம்டம்பரில், சிங்களத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் வரும் என நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.