Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கொலை – பொலிஸார் மறைப்பு (video)

Featured Replies

http://www.youtube.com/watch?v=pvrl71ILdHo

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவரது சடலம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பொலிஸார் இந்த தகவலை வெளியில் கசியாமல் பாதுகாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இரண்டு நாட்களாக கொலை செய்யப்பட்ட நபர் வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தகவல் வெளியில் கசிந்துள்ளது.

இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவையும் மீறி பொலிஸார் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் அதிக அளவில் செயற்பட வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவை மீறி செயற்ப்பட்டமையினால் இந்த கலகம் தொடர்பில் பொறுப்பேற்ற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே பொலிஸ் மா அதிபர் பதவி விலகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

அமெரிக்காவால் சிங்களத்திற்கு தரப்படும் ஜி.எஸ்.பி. சலுகையை நிறுத்த இதை ஒரு ஆதாரமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அவர்களின் சலுகை பெரிய பொருளாதார சலுகையை தருகின்றது,

அதேவேளை அது தொழிலாளர் உரிமையுடன் சம்பத்தப்பட்டது. அந்த உரிமைகள் மீறப்படும் பொழுது அவர்கள் அந்த சலுகையை நிற்பாட்டக்கூடும்.

The US government has accepted a petition filed by an American trade union requesting a review of worker rights in Sri Lanka. The move also means a review of the US GSP benefits for Sri Lanka, the US Embassy in Colombo said.

In 2008, as part of the annual review process, the American Federation of Labor and Congress of Industrial Organizations (AFL-CIO), an American trade union, filed a petition with the US Government requesting a review of worker rights in Sri Lanka.

http://www.dailymirror.lk/index.php/news/4761-us-accepts-lankan-petition.html

http://www.ustr.gov/sites/default/files/uploads/gsp/asset_upload_file451_14840.pdf

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=pvrl71ILdHo

இந்த வீடியோ ஒளிப்பதிவைப் பார்க்க... மனதுக்கு, மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் உள்ளது.

மா.... புளிக்கிறது அப்பத்துக்கு, நல்லது.

  • தொடங்கியவர்

கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்

[ புதன்கிழமை, 01 யூன் 2011, 08:45.38 AM GMT ]

roshen_shanaka.jpg

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற பொலிஸாருடனான மோதலின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான 22 வயதுடைய ரொஷான் சானக என்பவரே ராகம வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் சிறுநீரகமொன்று முற்றாக செயலிழந்துள்ளதாகவும், கடுமையாக காயமடைந்த காலொன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

காயமடைந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியர் மரணம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த எல்.எஸ். ரொஷான் சானக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

21 வயதான ரொஷான் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். ராகம வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று புதன்கிழமை உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இப்போது (அ)ரெஸ்டில் இருப்பதால்....

சிங்கங்கள் கிளம்பி எழ வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க ஆர்ப்பாட்டம்: ஒருவர் சாவு 25 பேர் கவலைக்கிடம் அரசு செய்தி தணிக்கை

Thursday, June 2, 2011, 9:04

சிறீலங்கா

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த இளைஞன் றாகமை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதே வேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிலாளர் சங்கம் புறக்கோட்டைப் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசுக் கெதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் தனியார் ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தணிக்கை

மோதல்களில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம் என்று அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் இயக்குநருக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தனியார் செய்தி சேவை ஒன்று கூறுகிறது. சுமார் 300 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் 50 இற்கு மேற்பட்டோர் அவசர சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.

இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று ஹாங் காங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்காவில் இறந்தவர் அடையாளம் காணப்பட்டார்!

வியாழன், 02 ஜூன் 2011 09:41

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் பொலிஸாருக்கும், ஊழியர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் காயமடைந்து ராகமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் அது பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். மினுவங்கொடை கல்ஒலுவையைச் சேர்ந்த 22 வயதான ரொஷான் சானக என்பவரே இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளார்.

இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். இவரின் இடுப்பில் சூடு விழுந்திருந்தது.

இரத்த ஓட்டம் சரியாக இடம்பெறாததால் இவரின் ஒரு காலை அகற்றிய போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

tamilenn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.