Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களை அடக்கி ஆளவோ, கோரிக்கைகளை புறந்தள்ளி விடவோ நாம் துணைபோக மாட்டோம்

Featured Replies

இந்நாட்டில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக உள்ளதைப் போன்று முஸ்லிம் மக்களும் சிறுபான்மை யினராகவே உள்ளனர்.அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்புக்கும் இடையே இடம்பெற்று வரும் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்து இறுதி

வடிவம் பெறும் சூழல் தோன்றும் போது முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பு கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத் தரணி எம்.ஏ. சுமந்திரன், பா. அரியநேத்திரன், பி. செல்வராசா மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் த. கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேலும் பேசுகையில், அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம் பெற்று வருகிறது. இப்பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம் மக்களின் சார்பான தரப்பு பங்கேற்கவில்லையென்று முஸ்லிம் மக்கள் தெரிவிக்கும் கருத்து நியாயமானது.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஏற்றுள்ளதை எவரும் மறுக்க முடியாது. கடந்த காலத் தேர்தல்களில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்று மக்கள் நிரூபித்தும் வெளிப்படுத்தியும் உள்ளனர்.

இதே போன்று முஸ்லிம் மக்களின் பெரும் பான்மை ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ள தையும் நாம் நன்கறிவோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையிலான நல்லுறவு, பரஸ்பரம், புரிந்துணர்வு என்பன உறுதிப்பாடாகவே இருந்து வருகின்றன.

எமது கோரிக்கைகளை ஏற்று அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்க முன் வரும் போது நாம் முஸ்லிம் மக்களைப் புறந்தள்ளிவிட்டு எந்தவொரு அரசியல் தீர்வையும் பெற்றுக் கொள்ள முனைய மாட்டோம். தமிழர்களும் முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுத் திட்டத்தையே பெறுவோம்.

இந்நாட்டில் வாழும் தமிழ் சிறுபான்மையினராகிய நாம் முஸ்லிம் மக்களை அடக்கி ஆளவோ, அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிடவோ துணை போக மாட்டோம். சிறுபான்மை சமூகங்கள் கௌரவமான அரசியல் தீர்வை பெறுவதே எமது இலக்காகும்.

அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தமிழ் மக்களை வழி நடத்திய சகல தலைவர்களும் வட புலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் வட புலத்தைச் சேர்ந்த தமிழ் தலைமைகளின் கொள்கைகள் கோட்பாடுகள் என்பவற்றை ஏற்று தமிழ்த் தேசியத்தின் மீது அபாரபற்றுறுதி மிக்கவர்களாக தமது உணர்வுகளை பறைசாற்றி வந்துள்ளனர். இன்றும் கூட யாழ்ப்பாண மக்களை விடவும் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தேசியத்தின் மீதான பற்றுணர்வை தேர்தல்கள் மூலம் பறைசாற்றியுள்ளதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

கிழக்கு மாகாணத்தில் இரு இடங்களிலும், வட மாகாணத்தில் இருபத்து நான்கு இடங்க ளிலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் இருபத்து மூன்றாம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குறிப்பாக வட மாகாண மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பேராதரவளித்து எமது பலத்தை மீண்டும் வெளிப்படுத்தி காட்டவுள்ளனர். கடந்த காலங்களில் யாழ். மாவட்ட மக்களில் சிலர் மாற்று கட்சிகளுக்கு வாக்களித்து எமது இனத்தின் ஒற்றுமை, பலம் என்பவற்றுக்கு பங்கம் விளைவித்ததை நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக இடமளித்ததை இனிமேல் அனுமதிக்க கூடாதென கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் நாம் பேசிப் பேசி ஏமாந்தவர்கள். ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு கைகூடாதவர்கள். இது வரலாறு, போராட்டம் இடம்பெற்ற காலத்தில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அரசியல் பேச்சுக்களில் ஈடுபட்டு ஏமாந்த இனம் தமிழினம்.

இந் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பிலான விமர்சனங்கள் நியாயத்தன்மை மிக்கவையாக இருந்தாலும், இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசம் அவதானித்த வண்ணமுள்ளது. அரசாங்கம் பல யுத்திகளைக் கையாண்டு எம்மை பேசிப் பேசி காலத்தை ஓட்ட முனையலாம். ஆனால் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பேசுகையில்: வடக்கு கிழக்கில் உள்ள இருபத்தாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பு தவறானதாகுமென்று எம்மால் மேன்றையீடு செய்ய முடியும். இதற்கான தகுதியும், தராதரம் எமக்குண்டு. இருப்பினும் நாம் மேன்றையீடு செய்யாமைக்கு பிரதான காரணம் சரியான பதிலை அல்லது தீர்ப்பை எமது மக்கள் அளித்து எமது பலத்தை நிரூபணம் செய்வார்கள் என்ற நம்பிக்கையிலாகும். மக்கள் அளிக்க காத்திருக்கின்ற மேலான கௌரவத்திற்காகவே நாம் இதனை அலட்டிக் கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.

இதுவரை அரசாங்கம் ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டத்தை அளிக்கவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவுள்ளதை சர்வதேச நாடுகள் பல குழப்பி வருவதாக அரசாங்கம் போலியான சாட்டுக்களைத் தெரிவித்து வருவதை சர்வதேச சமூகம் நன்கறியும். அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்று வரும் இவ்வேளையில் எமது மண்ணில் திட்டமிட்ட குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் கலாசார இழப்புக்கள் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிட வேண்டியுள்ளது என்றார்.

பி. செல்வராசா எம்.பி. பேசுகையில்: கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாமல் உள்ள பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எல்லை நிர்ணய குழு மூலம் பொது நிர்வாக அமைச்சு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.எமது கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் இப்பிரச்சினையை சுமூகமாக தீர்க்க எண்ணியுள்ளோம்.

வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சரை சந்தித்து தீர்வினைப் பெறவுள்ளோம். எது எப்படியிருப்பினும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கையை நாம் மட்டுமே ஆதரித்தோம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.