Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலையான ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா.பிரதிநிதி சிறிலங்கா வர தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலையான ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா.பிரதிநிதி சிறிலங்கா வர தடை!

Friday, June 3, 2011, 17:28

உலகம், தமிழீழம்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ சிறிலங்கா வருவதற்கான அனுமதியை இரண்டாவது தடவையாகவும் சிறிலங்கா அரசு மறுத்துள்ளது.

கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூவை சிறிலங்காவிற்கு அழைத்து காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, உட்பட காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் லெபனான் தலைநகர் பேரூட்டில் கூடிய இந்த அமைப்புக்கள் எடுத்துள்ளன. 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புக்களை உள்ளடக்கிய சர்வதேச சுதந்திரமான கருத்துக்கூறல் பரிவர்த்தனை அமைப்பு International Freedom of Expression Exchange (IFEX) சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு இன்று கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளன.

H.E. Mahinda Rajapaksa

President

Presidential Secretariat

Colombo 1

Democratic Socialist Republic of Sri Lanka

Fax: +94 11 243 0590

priu@presidentsoffice.lk

June 2, 2011

Dear Mr President,

Re: Invitation to the UN Special Rapporteur on Freedom of கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி பிராங்க லா றூவை (Frank La Rue.) சிறிலங்காவிற்கு அழைக்குமாறு சர்வதேச சுதந்திரமான கருத்துக்கூறல் பரிவர்த்தனை அமைப்பு கீழ் கையொப்பமிட்ட நாங்கள் தங்களை வேண்டிக்கொள்கின்றோம்.

லா றூ ஐநா மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பித்த தனது 2011 அறிக்கையில் உத்தியோபபூர்வமாக சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தான் விடுத்த வேண்டுகோள் இரண்டாவது வருடமாகவும் மறுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படாது தொங்கிநிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் சிறிலங்காவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு தங்கள் அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வரவேண்டும் என்று அவர்

கூறியுள்ளார்.

சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர் பாதுகாப்பு பற்றிதிரும்ப திரும்ப தமது கவலையை சர்வதேச சுதந்திர ஊடக அமைப்பக்கள் தெரிவித்து வந்துள்ளன.

லெபனான், பேரூட்டில் நாம் கூடியிருக்கும்போது சிறிலங்காவில் எமது சகோதர ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல், துன்புறுத்தல்; தாக்குதல் ஆகியவற்றுக்கு தொடர்ந்தும் உள்ளாகி வருகின்றனர் என்பது குறித்து நாம் மிகுந்த கவலை அடைகின்றோம்.

ஐநாவின் சிறப்புப்பிரதிநிதி பிராங்க லா றூவை உத்தியோகபூர்வமாக சிறிலங்காவிற்கு நீங்கள் அழைத்து காணாமல் போன படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளையும், அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் பற்றியும் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதன் மூலம் சிறிலங்காவின் மதிப்பு சர்வதேச சமூகத்தில் பெரிதும் உயர்வு அடையும் என்று நாம் நம்புகின்றோம். அவ்வாறான ஒரு அழைப்பு தங்கள் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தையும் சட்டம் ஓழுங்கை நிலைநாட்டுவதில் உள்ள வெளிப்படையான உறுதிப்பாட்டையும் சர்வதேச மனித உரிமைகளை அங்கீகரிப்பதையும் எடுத்துக்காட்டும்.

ஆனால் அதற்கு இடமளிக்காமல் சுதந்திரமான விசாரணைகளுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் தாங்கள் தொடர்ந்து மறுத்து வருவது எமக்கு கவலையை அளித்துள்ளது.

ஐநாவின் சிறப்புப்பிரதிநிதி பிராங்க லா றூ சிறிலங்காவுக்கு விஜயம் செய்து விசாரணைகளை நடத்துவதன் மூலம் 2010ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி தொடக்கம் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகித் எக்நலிகொட பற்றிய விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த ஒரு வருட காலமாக காவல்துறை மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் தூண்டுதலில் தாக்குதல், மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிவரும் லங்கா-ஈ நியூஸில் உள்ள பிரகீத்தின் சகபாடிகளின் நலன்கள் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அது போன்று 8 ஜனவரி 2009 இல் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா தொடர்பான விசாரணை மற்றும் அக்கொலைக்குப் பொறுப்பானவர்கள் பற்றிய முன்னேற்றம் பற்றி ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யும்போது ஐநாசிறப்புப்பிரதிநிதி லா றூவிற்கு தாங்கள் எடுத்துக் கூறும் வாய்ப்பும் தங்களுக்குக் கிடைக்கும்.

படுகொலை செய்யப்பட்ட காணாமல் போன தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தவும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் உதவும் என்று நம்புகிறோம்.

அதனை நாம் வரவேற்கின்றோம்.

பின்வரும் அமைப்புக்கள் இந்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளன.

1. International Federation of Journalists

2. Writers in Prison Committee, PEN International

3. Committee to Protect Journalists

4. Reporters sans Frontières

5. Arabic Network for Human Rights Information

6. ARTICLE 19: Global Campaign for Free Expression

7. Association of Caribbean Media Workers

8. Canadian Journalists for Free Expression

9. Center for Journalism in Extreme Situations

10. Center for Media Freedom and Responsibility

11. Center for Media Studies & Peace Building

12. Centre for Independent Journalism

13. Egyptian Organization for Human Rights

14. Freedom Forum

15. Freedom House

16. Free Media Movement

17. Globe International

18. Hong Kong Journalists Association

19. Independent Journalism Center

20. Index on Censorship

21. IPS Communication Foundation

22. Maharat Foundation (Skills Foundation)

23. Media, Entertainment and Arts Alliance

24. Media Foundation for West Africa

25. Media Institute of Southern Africa

26. Media Rights Agenda

27. Media Watch

28. Mizzima News

29. National Union of Somali Journalists

30. Norwegian PEN

31. Observatoire pour la liberté de presse, d’édition et de création

32. Pacific Islands News Association

33. Pakistan Press Foundation

34. Public Association ”Journalists”

35. Southeast Asian Press Alliance

36. South East European Network for the Professionalization of the Media

37. World Association of Newspapers and News Publishers

Non-member partners

38. International Media Support

CC:

Ban Ki-Moon

UN Secretary General

United Nations Headquarters

New York, NY 10017

Fax: +1 212 963 2155

ecu@un.org

Navi Pillay

UN High Commissioner for Human Rights

Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR)

Palais des Nations

CH-1211 Geneva 10, Switzerland

civilsociety@ohchr.org

Frank La Rue

UN Special Rapporteur on the promotion and protection of the right to freedom of opinion and expression

Palais des Nations

CH-1211 Geneva 10

Switzerland

Fax: +41 22 917 9006

freedex@ohchr.org

Subinay Nandy

Resident/ Humanitarian Coordinator and Resident Representative

United Nations in Sri Lanka

202 – 204,

Bauddhaloka Mawatha

Colombo 07

Sri Lanka

Fax : +94 11 2581116

undp.all.lk@undp.org

Human Rights Council Advisory Committee

Human Rights Council Secretariat

Office of the United Nations High Commissioner for Human Rights

Palais Wilson, United Nations Office at Geneva

CH-1211, Geneva 10

Switzerland

Fax: +41 (0)22 917 9011

hrcadvisorycommittee@ohchr.org

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.