Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசு உணரத் தவறினும் இந்திய தேசம் உணர்ந்துள்ளது

Featured Replies

இந்திய அரசு உணரத் தவறினும் இந்திய தேசம் உணர்ந்துள்ளது

இலங்கையில் தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக வாழும் பரிதாபத்திலிருப்பது வேதனைக்குரியது. இவ்வாறு தமிழகத்தின் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற பின் சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சுர்ஜித் சிங் பர்னாலா, ஈழத்தமிழர்களின் அவலத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி உரையாற்றினார். அவரின் இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஈழத் தமிழினத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததன் காரணமாகவும் செல்வி ஜெயலலிதா சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெறக் காரணம் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக ஆளுநர் பர்னாலா மேற்கண்டவாறு உரையாற்றவில்லை என்பது தெளிவு. ஏனெனில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்திலும் ஒரு தடவை இதேபோன்ற உரையை ஆளுநர் பர்னாலா ஆற்றியிருந்தார்.

ஆளுநர் ஆற்றுகின்ற உரை தமிழக அரசின் கொள்கையை - கருத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கின்ற போதிலும் தமக்கு உடன்படாத கருத்துக்களைப் புறந்தள்ளும் உரிமை ஆளுநருக்கு உண்டு. இருந்தும் ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய அரசின் நடவடிக்கையால் தவறு நடந்துவிட்டது என்பதை அவர் மானசீகமாக உணர்ந்துள்ளார்.

எனவே இதிலிருந்து தமிழக ஆளுநர் தமிழக அரசின் கருத்தறிந்து உரையாற்றவில்லை என்பதும் அவர் ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை உணர்ந்து உரையாற்றியுள்ளார் என்பதும் தெளிவு. ஆளுநர் பர்னாலா ஈழத்தமிழர்களின் அவலம் பற்றி தமிழக சட்டசபையில் ஆற்றிய உரை இந்திய மத்திய அரசு எமது பிரச்சினையை உணர்ந்துகொள்ள மறுத்தாலும், இந்திய தேசம் ஈழத்தமிழினத்தின் அவலத்தை நன்கு உணர்ந்துள்ளது என்பதை நிரூபணம் செய்துள்ளது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் பாரத தேசத்தின் புத்திஜீவிகளின் கருத்துக்களும் ஈழத் தமிழர் தொடர்பில் கர்நாடகாவில் நடந்த ஆதரவுப் பேரணிகளும் அமைந்துள்ளன.

இந்திய முன்னாள் நீதிபதி ஒருவரின் கருத்திலும் இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியா பொறுப்புடன் நடக்கவில்லை என்ற கருத்து மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடியும்.

ஒட்டுமொத்தத்தில் இந்திய மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்துவிட்டது என்ற உண்மையை இந்திய தேசம் உணர்ந்துள்ளதென்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். இத்தகைய நிலைமை நிச்சயம் இந்திய மத்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

எதுவாயினும் இந்திய மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்காக அல்லது அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றக்கூடிய தராதரத்தில் இந்தியா இருந்தபோதிலும் அதனைச் செய்யாதது குற்றம் என்ற பிரசாரத்தின் மத்தியில், தற்போதிருக்கும் இந்திய மத்திய அரசு அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக, இலங்கை தமிழர்களின் பிரச்சினை தமிழகம் என்ற அரசியல் எல்லை தாண்டி இந்திய தேசம் என்றவாறு விரிந்து தேர்தல் முடிபுகளைத் தீர்மானிப்பதாக இருக்கப் போவதைச் சாதாரண விடயமாக எவரும் கருதிவிட முடியாது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=19904

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அந்த நேர பாப்புலாரிட்டிய யூஸ்பண்ணி சைடு கேப்பில் ஆட்டோ ஓட்டினால்தான் .. நியுஸ் இந்திய முழுவதும் ரீச்சாகும்..

இன்னுமா பிரியல???

ramdev-baba.jpeg

அய்யா!

ஊழலுக்கு எதிரான தங்கள் போராட்டத்திற்கு எங்கள் மனம் கணிந்த வாழ்த்துக்கள்.. தங்கள் நெஞ்சுறுதியையும் பாத்திக்க பட்ட மக்கள் சார்ப்பில் குரல் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்..

டிஸ்கி

மிகுதிய தோழர் அகூதா பார்த்து கொள்ளுவார்... :)

Bharat Swabhiman (Trust)

Administrative Office: :

Patanjali Yogpeeth, Maharshi Dayanand Gram,

Delhi-Haridwar National Highway,

Near Bahadarbad,

Haridwar-249402

Uttarakhand,India

Helpline No: +91-1334-240008

Fax No. : +91-1334-244805, 240664

E-mail : divyayoga@rediffmail.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.