Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த "மாமா" தற்போது இன்ரபோல் பட்டியலுக்குத் தரமுயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த "மாமா" தற்போது இன்ரபோல் பட்டியலுக்குத் தரமுயர்வு

[Tuesday, 2011-06-07 05:02:16]

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக இருந்து வரும் பி.எல்.ஓ.மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும் அறியபட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரபோல் பகிரங்கமாக உதவி கோரியுள்ளது.

maama07062011j.jpg

கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த வடிவேலு மகேந்திரன் தற்போது இன்ரபோல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

seithy.com

இவரையும் சிங்களம் கைது செய்து ஒளித்து வைத்துள்ளதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

maama07062011j.jpg

இவர் பேசும் மொழி ஆங்கிலம், சிங்களம் என்று இருக்கின்றது.

கருணா குழு முக்கியஸ்தரான சந்திவெளி மாமா மீது இன்ரப்போல் பிடியாணை

கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முக்கியஸ்தரான பி.எல்.ஓ மாமா, சந்திவெளி மாமா என அழைக்கப்படும் வடிவேல் மகேந்திரனை கைது செய்யுமாறு இன்ரப்போல் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த இவர், தற்போது இன்ரப்போலின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கில் இடம்பெற்ற பல கொலைகளின் பின்னணியில் இவர் செயற்பட்டதாக நம்பப்படுகிறது. மட்டக்களப்பு சந்திவெளியில் செல்லையா பரமேஸ்வரக் குருக்கள் கருணா குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும் வடிவேல் மகேந்திரன் சம்மந்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின்போது பரமேஸ்வரக் குருக்களை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற வடிவேல் மகேந்திரன், தனது கைத்துப்பாக்கியினால் அவரை சுட்டுக் கொன்றதாக அறிய முடிகிறது.

இப்படுகொலைச் சம்பவத்தை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

வடிவேல் மகேந்திரன் ஆரம்பத்தில் புளொட் இயக்க உறுப்பினராக செயற்பட்டுவந்தவர். பின்னர் உள்முரண்பாடுகள் காரணமாக புளொட்டிலிருந்து வெளியேறி ஈ.என்.டி.எல்.எப் உடன் இணைந்து இந்திய அமைதிப்படைக் காலங்களில் செயற்பட்டதுடன் இக்காலத்தில் பல கொலைகளின் பின்னணியில் இவரே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய அமைதிப் படையின் வெளியேற்றத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார்.

பின்பு சுவிஸ் தேசத்தில் இடம்பெற்ற ஒரு கொலையைத் தொடர்ந்து தலைமறைவாகிய இவர், சுவிசிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கருணா குழுவும் ஈ.என்.டி.எல்.எப் குழுவும் இணைந்து செயற்பட்ட காலத்தில், இந்திய புலனாய்வுத்துறையின் துணையுடன் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

பின்னாளில் கருணா - ஈ.என்.டி.எல்.எப் குழுக்களுக்கு இடையிலான உறவு முறிவுற்றபோதும் இவர் கருணாகுழுவுடனேயே தொடர்ந்தும் இயங்கியதுடன் மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளில் இடம்பெற்ற பல கொள்ளை, கொலைகளின் சூத்திரதாரியாகவும் செயற்பட்டு வந்தார்.

கருணாவும் இவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D3D372C3-1D04-4A3E-A625-D88AF80AE32C}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.