Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: பல்கலைக்கழகங்கள் இராணுவமயமாகின்றனவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ புதன்கிழமை, 15 யூன் 2011, 11:53 GMT ] [ நித்தியபாரதி ]

"அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் ஒரு மூளைச்சலவையே இப்பயிற்சி நெறி" என மூத்த விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு Rohini Hensman பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Guardian ஊடகத்தில் எழுதியுள்ளார். அதன் முழுவிபரமாவது,

பிரித்தானிய நாட்டு மாணவர்கள் தமக்கான கற்றல் நிதியை பிரிட்டன் அரசாங்கம் முடக்கியமையைக் கண்டித்து அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், உயர்கல்விக்கான நிதி ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையிலுள்ள சிறிலங்கா மாணவர்கள் தற்போது பிறிதொரு பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டியுள்ளார்கள்.

'தலைமைத்துவம் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தி' என்ற பெயரில், சிறிலங்கா இராணுவத்தால், பல்கலைக்கழக நுழைவாண்டு மாணவர்களுக்கு கட்டாயப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதானது தற்போது மாணவர்கள் முகங்கொடுக்கும் பிறிதொரு விடயமாக உள்ளது.

உயர் கல்வி அமைச்சரின் முன்னனுமதியின்றி, தலைமைத்துவப் பயிற்சியானது சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் கலாசார, விழுமியங்களைக் கருத்திற் கொள்ளாது, படையினரின் முகாங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு பலாத்காரமாக வழங்கப்படும் இந்தத் தலைமைத்துவப் பயிற்சியின் மூலம் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து ஆசிரியர்களும் மாணவர்களும் பல மகஜர்களைக் கையளித்த போதிலும், அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு கடந்த மே மாதத்தில் இப்பயிற்சி நெறியானது ஆரம்பிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவப் படைகளிற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவானது யுத்தக் குற்ற அறிக்கையை சமர்ப்பித்திருந்த காலப்பகுதியிலேயே இத்தலைமைத்துவப் பயிற்சிக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

மே 2009ல் சிறிலங்காவில் முடிவிற்கு வந்த அதன் உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில், அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறி, சிறிலங்கா அரசாங்கப் படைகளும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களிற்கான சாட்சியங்களைக் கொண்டு ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டது.

வைத்தியசாலைகள், உணவு வழங்கல் நிலையங்கள், ஐ.நா அலுவலகம், காயப்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் சேவை போன்றவை உள்ளடங்கலாக பொதுமக்கள் கூடியிருந்த பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதனால் உணவு மற்றும் மருந்து போன்ற அடிப்படை வசதிகளைப் பெற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த மக்கள் ஆளாகினர். போர் வலயங்களிற்கு அப்பால், சிறிலங்கா அரசாங்கமானது தம்மை விமர்சித்தவர்களையும், ஊடகவியலாளர்களையும் கடத்தியதுடன், அவர்களைக் கொலை செய்தது.

விடுதலைப் புலிகள், தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டதுடன், தம்மை மீறி பாதுகாப்புத் தேடிச் செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

அத்துடன், இளையோர் மற்றும் சிறார்களை பலாத்கார ஆட்சேர்ப்புச் செய்து கொண்டதுடன், பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளில் தொழிலாளர்களை பலாத்காரமாக ஈடுபடுத்தியமை போன்றவை புலிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

யுத்த வலயங்களிற்கு அப்பால், புலிகள் அமைப்பானது பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ்வாறான இரு தரப்பு மீறல்களின் விளைவால், ஜனவரியிலிருந்து மே 2009 வரை பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன.

அரசாங்கத் தரப்பு யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பாளிகளாக அதன் உயர் மட்டத்தில் உள்ள முப்படைத் தளபதியான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களது கட்டளைகளின் கீழ் பொது மக்களைக் கொன்று குவித்தமை, சரணடைந்த கைதிகளை துன்புறுத்தி அவர்களைக் கொலை செய்தமை போன்றவற்றிற்கு சாதாரண படை வீரர்கள் பொறுப்பாளிகள் அல்ல.

வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு யுத்தக் குற்றங்களை உறுதிப்படுத்தும் விதத்தில்,அண்மையில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் காண்பிக்கப்பட்ட சிறிலங்காவில் அரங்கேறிய கொடூரங்கள் நிறைந்த சனல் 04 தொலைக்காட்சியின் காணொலிக் காட்சிகள் உண்மையானவை என துறைசார் வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெண்கள் உட்பட சரணடைந்த நிராயுதபாணிகளாக்கப்பட்ட கைதிகளை கொடுமைப்படுத்தி துன்புறுத்தி அவர்களை பலாத்காரப்படுத்தி இறுதியில் சிறிலங்காப் படையினரால் அவர்கள் கொல்லப்படும் காட்சிகள் இந்தக் கானொலியில் பதிவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஈனத்தனமான செயல்களில் ஈடுபடும் படை வீரர்களின் பொறுப்பில் பல்கலைக்கழக நுழைவாண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படுவதென்பது ஒரு உத்தரவாதமற்ற விடயமாகும்.

பல்கலைக்கழக கல்வியின் ஊடாக தூண்டப்பட வேண்டிய சுதந்திரமான கருத்து வெளிப்பாடு, சுதந்திரமான கருத்தாடல்கள் போன்றவற்றை இவ்வாறான கட்டாய இராணுவப் பயிற்சியானது கேள்விக்குறியாக்கியுள்ளது என பொதுமக்கள் நலன் பேணும் பல்லினக் குழுவான Friday Forum என்ற அமைப்பைச் சேர்ந்த ஜெயந்த தனபால மற்றும் பேராசிரியர் சாவித்திரி குணசேகர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பெரும்பான்மை சிங்கள மக்கள் காலாதிகாலமாகப் பேணிவரும் வரலாற்று பண்பாடுகளையும் பிற விழுமியங்களையும் சீரழிக்கக் கூடிய விதத்திலேயே இந்தப் பயிற்சி நெறிக்கான பாடத்திட்டம் அமைந்துள்ளதால், இதில் ஏனைய சமூகங்களால் பேணப்படும் நலன்கள் கருத்திற் கொள்ளப்பட்டிருக்க மாட்டாது என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"சிறிலங்காத் தீவில் நிலவும் வேறுபாடுகள், பன்மைத்துவம், பல்லினத் தன்மை போன்றவை தொடர்பான திறந்த மனப்போக்கை அதைரியப்படுத்துவதாகவே இந்தப் பயிற்சி நெறிக்கான பாடத்திட்டம் அமைந்துள்ளது" எனவும் இவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச அரசாங்கத்தின் பண்புகளான அதிகாரத்துவம், இராணுவ மயமாக்கம் போன்றவற்றை மீள நிலைநாட்டுவதாக இந்தப் பயிற்சிநெறி அமைந்துள்ளது.

இந்த இலக்கு அடையப்படாவிட்டாலும் கூட பயங்கரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவப் படையானது, இந்நாட்டின் ஆயுதங்களை இயக்குவதில் மட்டுமல்லாமல், ஆயுதக் கொள்ளைகள் மற்றும் ஆயுதக் குழுக்களை உருவாக்குவதுடன், அரச பயங்கரவாதம், அரச எதிர்ப்புப் பயங்கரவாதம் போன்றவற்றையும் இயக்குவதில் வல்லவர்களாவர்.

சிறிலங்காத் தீவில் வாழும் எல்லா இனக் குழுமங்களையும் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகள் மத்தியில் இக்கட்டாய இராணுவம் சார் தலைமைத்துவப் பயற்சி என்பது வரவேற்கப்படாத ஒன்றாக இருப்பது நல்லதோர் விடயமாகும்.

"மாணவர் சமூகத்திற்குள் இராணுவ உத்திகளைத் திணிப்பதென்பது இந்நாட்டின் முழுமையான அழிவிற்கு வழிகோலும்" என யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடமிருந்து இளையோர் ஆராய்ச்சிக் குழுவால் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலாகும்.

"அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் ஒரு மூளைச்சலவையே இப்பயிற்சி நெறி" என மூத்த விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமானதும், போதியளவானதுமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல் இவ்வாறானதொரு தீர்வு எடுக்கப்பட்டதைக் கண்டித்து பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு, இத்தீவில் சமாதானமும், ஜனநாயகமும் வரவேண்டும் என உண்மையிலேயே விரும்புகின்ற எவராவது ஆதரிப்பார்கள்.

http://www.puthinappalakai.com/view.php?20110615104082

இவ்வாறான பயிற்சிகளுக்கு செல்லும் தமிழ் மாணவர்களுக்கு AK-47, RPG போன்ற துப்பாகிகளும், ஆயுதங்களும் ரவ்வைகளும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.