Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சாவகச்சேரியில் சிங்கள - தமிழ் சாரதிகளிடையே மோதல்: இராணுவத்தினரும் தாக்கியதில் தமிழ் சாரதி படுகாயம்!

Featured Replies

சிங்களச் சாரதிக்கும் தமிழ் சாரதிக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக சிங்கள சாரதியுடன் இணைந்து இராணுவத்தினர் தமிழ் சாரதியை தாக்கியதில்அவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுக்காலை 7.30 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த வந்த சிங்கள வாகன சாரதி ஒருவர் சாவகச்சேரியில் யாழ் நோக்கி வருவதற்காக காத்திருந்த பயணியொருவரை ஏற்ற முற்பட்டபோது பயணிகளை ஏற்றவேண்டாம் என யாழ். கொடிகாமம் பஸ் சேவையில் ஈடுபடும் தமிழ் வாகனச் சாரதி கூறினார்.

இதன் போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை அவதானித்த இராணுவத்தினர் சிங்கள சாரதியுடன் இணைந்து தமிழ்ச் சாரதியை பொல்லுகள், இரும்புகளைக்கொண்டு தாக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட சாரதி உடல்,உள காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இராணுவத்தினர் பக்கசார்பாக நடந்துள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உள்ளுர் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடுபவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், அதனைக் கருத்தில்கொண்டு தமிழ் சாரதி நியாயம் கேட்டபோதே இந்த நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/16887/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டுக்குள் இரு இனங்கள் செர்ந்துவழ்வது எப்படி ஒரு இனம்(சிங்கள)அடக்கி ஒடுக்கும் பொது ?

ஆனால், இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. இந்த மாதிரி எழுதாச் சட்டங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு மாபெரும் கொடுமையை, கலாச்சாரச் சீரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது.

ஏன் பளை, மீசாலை, கொடிகாமம் முதலிய இடங்களில் இருந்து யாழ் செல்லும் தனியார் பேரூந்துகளில் கூட சாவகச்சேரியில் மக்களை ஏற்றக் கூடாதாம். ஆனால் அவற்றில் பெரும்பாலான நேரங்களில் போதியளவு இடம் இருக்கும்.

சாவகச்சேரியில் இருந்து குறைந்தளவு பேரூந்துகள் தான் உண்டு. அதனால் அங்கிருந்து போகும் தனியார் பேரூந்துகளில் மக்களை நெருக்கி அடைத்து தான் கொண்டு செல்கின்றனர். ஆண்கள் மேல் பெண்களும், பெண்கள் மேல் ஆண்களும் முட்டி - மோதி இடைவெளியின்றி நின்றுகொண்டு தான் செல்கின்றனர். பிரேக் அடிக்கும் போதும், வளைவுகளில் திரும்பும் போதும் நிலைமை படு மோசம். நான் அண்மையில் இரு தடவைகள் பயணம் செய்து அவதிப்பட்டேன். ஏனைய பகுதிகளில் இவ்வாறான சட்டங்கள் இல்லை.

உங்கள் மனைவி, மகள், ... இவ்வாறு செல்வதை யோசித்துப் பார்த்தால் தான் நிலைமை விளங்கும்.

சில காமுகர்களுக்கு இது இனிப்பாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.