Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

Featured Replies

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பிரித்தானிய ஏடொன்று கேள்வி எழுப்பியது

றட்கோ மிளாடிச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பிரித்தானியாவின் கார்டியன் நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையின் கொலைக் களங்கள் விவரணம் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஆசிரியர் தலையங்கம் ஒன்று இன்று அந்த ஏட்டில் வெளியாகியது.

பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துவது ஒரு போர்க் குற்றமென அந்த ஏடு தெரிவிக்கிறது. அந்த விடயம் உண்மையென நிரூபிக்கப்பட்டால், கட்டளையிடும் அதிகாரிகளின் ஊடாக, இலங்கை இராணுவம், இலங்கை அரசு ஆகியவற்றின் உயர் பீடம் வரை அந்தக் குற்றச்சாட்டுச் சுமத்தப்படுமென கார்டியன் ஏடு தெரிவிக்கிறது.

றட்கோ மிளாடிச்சும், றடொவான் கறாஜிட்சும், த ஹேக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உள்ள நிலையிலும், சிரியாவில் ஆயிரத்து முன்னூறு பேர் உயிரிழந்த தாக்குதல்களை நடத்தியமைக்காக அந்நாட்டின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையிலும், நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டபோதிலும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கார்டியன் கேள்வி எழுப்பியுள்ளது.

விடுதலைப் புலிகள் ஜனாதிபதிகளைப் படுகொலை செய்தார்களெனவும், தற்கொலை அங்கியைக் கண்டுபிடித்தார்களெனவும், பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருந்தார்களெனவும் கூறி, கைதிகளைக் கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயலை நியாயப்படுத்த முடியாதென கார்டியன் குறிப்பிடுகிறது.

நடந்து முடிந்த சம்பவங்கள், முடிந்த கதையென இலங்கை அரசு கூறுவதாகவும், ஆனால், இந்தச் சான்றுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் கார்டியனில் இன்று வெளியான ஆசிரியர் தலையங்கம் மேலும் குறிப்பிடுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8207

Edited by akootha

  • தொடங்கியவர்

Sri Lanka: Evidence that won't be buried - Editorial

The targeting of civilians is a war crime. If proved, these charges go right up the chain of command of Sri Lanka's military and government. If Iran stands condemned for killing hundreds in the wake of the June 2009 election, if Ratko Mladic and Radovan Karadzic now face justice in The Hague, if Bashar al-Assad faces UN sanctions for an assault that has killed 1,300 Syrians, how it is that President Mahinda Rajapaksa and his brother, the defence secretary Gotabaya Rajapaksa, escape all censure, after over 40,000 civilians were killed?

That the LTTE assassinated presidents and invented the suicide belt, that the Tigers used civilians as human shields, is no defence from the charge that Sri Lankan soldiers summarily executed prisoners in their custody. Sri Lanka is trying to pretend these events are history, as the economy and tourism pick up. They are not. This evidence has to be faced.

http://www.guardian.co.uk/commentisfree/2011/jun/15/sri-lanka-evidence-that-wont-be-buried

போரை நடத்துவோரும் கட்டளைகளை இடுவோரும் ஒரே நோக்கமுடையவர்களாயிருந்தார்கள். அதுதான் தமிழினத்தை அழிப்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.