Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வௌ்ளைக்கொடி விவகாரம் தருஸ்மன் அறிக்கையில் இடம்பெறவில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on June 16, 2011

வௌ்ளைக்கொடி ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை சுட்டுக்கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ் உத்தரவிட்டார் என சரத் பொன்சேகா கூறியதாக சன்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி பான் கீ மூனின் தருஸ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர்களுள் ஒருவர் கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

வெள்ளைகொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்பான பணிப்பாளர் நாயகம் சீ.ஏ.எப்.எம்.விஜயரட்ன இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், அரச பிரதி வழக்கறிஞர் புவனெக்கா அளுவிகாரே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தருஸ்மன் அறிக்கை தயாரிப்பதற்கு தான் எந்தவித தகவல் வழங்கவில்லை எனவும் தருஸ்மன் அறிக்கையை முழுமையாக வாசித்த போது வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து எதுவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் வெள்ளைக்கொடி விவகார வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதியரசர் குழுவால் எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=22792

புலித்தேவன், பா. நடேசன் இருவரும் சரணடைய விரும்பியதை சிறீலங்கா அதிபரே ஏற்றுக் கொண்டுள்ளார். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்று எரித்த புகைப்படம் பின்னர் வெளியாகிறது. ஆக சரணடைந்த போர்க் கைதிகளை கொன்று வீசும்படி சிங்கள இனவாத அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதற்குக் காரணமான கோத்தபாயவையும், மகிந்த ராஜபக்ஷவையும் ஒளிநாடா காண்பிக்கிறது – மன்னிக்க முடியாத போர்க்குற்றம்.

நேற்று வெளியான சனல் 4 தொலைக்காட்சி நடைபெற்றது மன்னிக்க முடியாத போர்க் குற்றமே என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. மட்டக்களப்பு தளபதி ரமேஸ் போரில் மடிந்ததாக சிறீலங்கா இராணுவத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது. ஆனால் அவர் சரணடைந்த பின்னர் சிங்கள இராணுவத்தால் விசாரிக்கப்படும் காணொளி வருகிறது. அதற்குப் பின்னர் அவருடைய முகம் அடித்து சிதைக்கப்பட்டு, கொன்று வீசப்பட்ட புகைப்படம் வெளியாகிறது – மாபெரும் போர்க் குற்றம்.

போரில் ஈடுபடாத கலைஞரான இசைப்பிரியா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கொன்று வீசப்பட்டிருக்கிறார். சரணடைந்த பெண் புலி உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு லாரிகளில் இழுத்து மிருகங்கள் போல எறியப்படும் காட்சிகள் வருகின்றன. மூன்று பெண்களை கைகளைக் கட்டிவிட்டு சுட்டுத்தள்ளுகிறார்கள். கைகளைக் கட்டி ஒருவரை சுடுவது போர்க்குற்றமாகும். காரணம் சரணடைந்துவிட்டார் என்பது கைகளை கட்டுவதன் அடையாளமாகும். அதன் பின்னர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட வேண்டுமே அல்லாது சுடுவதற்கு ஒரு படையினனுக்கு யாதொரு உரிமையும் கிடையாது.

மேலும் சரணடைந்த ஆண்களை தென்னையுடன் கட்டி வைத்து ஓர் இராணுவத்தினக் தலையைப் பிடிக்க இன்னொருவன் கத்தியால் கழுத்தறுத்து கொன்றுள்ளன். இது சர்வதேச போர்க் குற்றம்.

சிறீலங்கா போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் தன்னை பதியாவில்லை என்று கூறுவது தப்பு. இப்படியான ஒரு நாடு எப்படி தன்னை நீதியின் முன் பதிவு செய்யும்..? எந்தவொரு நியாயம் கூறலுக்கும் அப்பாற்பட்டு சிறீலங்கா போர்க் குற்றவாளியே என்பதற்கு போதிய ஆதாரங்களை இக்காணொளி தருகிறது.

இந்த இலட்சணத்தில் போர் வெற்றி கொண்டாடுகிறார் மகிந்த ராஜபக்ஷ என்பதையும் அது சுட்டிக்காட்ட தவறவில்லை. மேலும் மக்களை போகவிடாமல் புலிகள் தடுத்தனர் என்ற குற்றச்சாட்டையும் அது பக்கச் சார்பின்றி வைத்துள்ளது மனங்கொள்ளத்தக்கது. மேலும் இந்த விவகாரம் சிங்கள இராணுவம் – புலிகள் என்பதல்ல பொது மக்கள் நரபலி எடுக்கப்பட்டார்கள் என்ற மானிட கொலை குற்றத்திற்குள் வருகிறது.

http://www.alaikal.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.