Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகள் தொடர்பாக லியாம் பொக்ஸின் செயலாளர் இலங்கையில் இரகசிய சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் - இலங்கைச் செய்திகள்

[ பிரசுரித்த திகதி : 2011-06-16 10:07:16 AM GMT ]

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸின் செயலாளர் கடந்த வியாழக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஸவுடனும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமையுடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த இரகசிய சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் உள்ள ஸ்பைஸ் உணவு விடுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கை அகதிகள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தவே லியாம் பொக்ஸின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. லியாம் பொக்ஸின் செயலாளர் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமையே, லியாம் பொக்ஸின் செயலாளரின் இலங்கைக்கான விஜயத்திற்கு ஒழுங்கு செய்து கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடுகடத்துவதால் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்புமாயின் அதனை எதிர்கொள்வதற்கு விஜேதாச ராஜபக்ஸவை பயன்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

http://www.tamilulakam.com/news/view.php?id=25733

... ஓர் இணையத்தளம் வைத்திருக்கிறோம் ... நாலெழுத்து தமிழில் எழுதுவோம் ... என்றவுடன் உப்பச்சப்பில்லாத செய்திகளை வெளியிடுகிறார்கள்!!

... பிரித்தானியாவில் ... அகதிகள் விவகாரங்களை கையாளுவது இங்குள்ள உள்துறை அமைச்சகம், அதற்கு மேல் வெளியுறவுத்துறை சில காரியங்களுக்கு உள்துறை அமைச்சகத்துக்கு உதவும்!!! ... அதில் பாதுகாப்புதுறை அமைச்சகம் என்ன பங்கை வகிக்கப்போகிறது???????

... லியாம் பாக்ஸ் வந்து, சிங்கள இலவச காலிடேக்களை கடந்த காலங்களில் அனுபவித்தவர், இது பிரித்தானிய பாராளுமன்ற விசாரனைகளில் வெளியும் வந்து, ஊடகங்கள் போட்டு பிய்த்தெடுத்ததும் தெரிந்ததே!!! ...

... இதை வைத்து அதற்குள் ஏன் பின்னுகிறார்கள்???????? ... அறியாமையா???????? இல்லை குழப்பலாமென்றா??????? <_<

Will the Defence Secretary’s links with Sri Lanka compromise British calls for an enquiry?

Cross-Post, June 16th 2011, 8:41 pm

Cross-posted from James Bloodworth at Obliged to Offend

On the back of the Channel 4 documentary, Sri Lanka’s Killing Fields, the UK Government has renewed its calls for an independent investigation into alleged war crimes in the country.

Anyone watching the program, broadcast on Tuesday evening, could not but be appalled by the footage of summary executions and unarmed Tamil civilians being shelled during the final days of the conflict in Sri Lanka two years ago.

South African law professor, Christof Heyns, who the UN has been consulting on matters of extra-judicial killings in Sri Lanka, has said “What is reflected in the extended video are crimes of the highest order, definitive war crimes.”

In London, Foreign Office minister Alistair Burt has issued a statement warning the Sri Lankan Government that if it does not respond to calls for an inquiry “we will support the international community in revisiting all options available to press the Sri Lankan Government to fulfil its obligations.”

Sri Lankan President Mahinda Rajapaksa, who won a second term in January last year following the military victory over the separatists, has repeatedly denied any involvement in or knowledge of human rights abuses.

Defence Secretary Liam Fox met with President Rajapaksa and the Sri Lankan leadership in London last year, soon after the atrocities are alleged to have taken place. According to the Sri Lankan Ministry of Defence, Fox assured the Sri Lankan delegation that “the role of the international community at this stage [is] not to keep raising question, but to see how best to help in bringing the communities in Sri Lanka together.”

Fox also visited President Rajapaksa three times in 2009. His visit in March of that year, paid for by the Sri Lankan Government, came amid reports of the killings of up to 2,000 Tamil civilians in Vanni, as documented by Human Rights Watch, and weeks after the then British Foreign Secretary David Miliband and US Secretary of State Hilary Clinton had condemned Sri Lanka’s systematic shelling of civilian safe zones and medical facilities.

Furthermore, a week after his visit in November of that year, paid for by the Sri Lankan Development Trust, Fox said in a speech to parliament that:

“As members of the European Union, we have to be careful not to lecture too much or give too few incentives in a country that is beginning to move very much in the right direction.”

There was no mention in the speech of the fact that he was at the Sri Lankan President’s party convention the week before.

In all Liam Fox travelled to Sri Lanka three times in 2009 to meet the country’s President in a personal capacity. Fox also received a £50,000 donation from a UK Defence Industry owner selling arms to Sri Lanka on the 26th of January 2010.

Are British calls for an inquiry into alleged atrocities not undermined by a Defence Secretary with a history of freelancing and “private” meetings with the Sri Lankan President?

http://hurryupharry.org/2011/06/16/will-the-defence-secretary%E2%80%99s-links-with-sri-lanka-compromise-british-calls-for-an-enquiry/

Edited by Nellaiyan

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்மானால் முதலில் இலங்கை அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லாத பட்சத்தில் ஐ நா வின் உறுப்பு நாடு ஒன்று அதற்கு முன் மொழிய வேண்டும்.... பிரித்தான்னியா ஐ நாவின் உறுப்பு நாடு என்பது நாம் அறிந்ததே..

பிரித்தான்னிய பாராளுமன்றத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களாலும் முன்வைக்கப்படும் ஒரு கருத்து. டேவிட் கமேரூன் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று சமீபத்திய பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் வலியுறுத்தி இருந்தார். சர்வதேச விசாரணைக்கு எப்படி ஒத்துழைக்க வைப்பது, அப்படி இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கா விட்டால் பிரித்தான்னியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன அதன் மூலம் இலங்கைக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றி விவாதிக்கவே லியம் பாக்ஸ் இலங்கை சென்றுள்ளதாக ஒரு தகவல். பிரித்தானியா சிறந்த நிர்வாக கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாடு...

மேலே கூறியது போன்று நாட்டின் பாதுகாப்பு செயலாளர் அகதிகள் விவகாரம் பற்றி பேசுவதற்கு இன்னொரு நாடு போவது இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே நடைபெறும்.....

இலங்கையில் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் பற்றி பேச இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில், இந்திய பாதுகாப்பு செயலாளர் இந்திய வெளிவிவகார செயலாளர் ஆகியோர் சமீபத்தில் இலங்கை சென்றிருந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.