Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூன் 30ஆம் நாள் மேலும பலர் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட இருக்கின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jun 19, 2011 / பகுதி: செய்தி /

ஜூன் 30ஆம் நாள் மேலும பலர் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட இருக்கின்றனர்

பிரித்தானியாவில் இருந்து ஜூன் 30ஆம் நாள் மேலும் பலர் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட இருப்பதாக, லண்டனைத் தளமாகக்கொண்ட ‘வதைகளில் இருந்து சுதந்திரம்’ என்ற அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

அரசியல் தஞ்சம் கோருவோர் கொழும்பிற்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு வதைகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படும் நிலையில் (16-06-2011) ஒரு தொகுதி அடைக்கல தஞ்சவாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மற்றொரு தொகுதியினர் எதிர்வரும் 30ஆம் நாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட இருப்பதாக இந்த அமைப்பு எச்சரிக்கை செய்திருக்கின்றது.

சிறீலங்காவில் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பிரித்தானியாவில் அடைக்கலத் தஞ்சம் கோரிய பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும், அடிப்படை மருத்துவ வசதிகளையும் செய்துகொடுத்துவரும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள இத்தகவல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இலங்கையில் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அடைக்கலம் கோரியிருந்த 334 பேருக்கு இந்த அமைப்பு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றது.

இதேவேளை, நேற்று லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களிள் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதுடன்;, கட்டுநாயக்க கொண்டு செல்லப்பட்ட இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்களா என்பதை இன்று இரவுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

வானூர்தியில் பலவந்தமாக ஏற்றப்பட்டு பின்னர் தடுப்பு முகாம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் ஒருவரது தகவலின் அடிப்படையில், ஆண்கள் 48 பேரும், பெண்கள் 6 பேரும் இந்த வானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் 40 இற்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை, 27 மட்டுமே லண்டனில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, கட்டுநாயக்க வானூர்தி நிலைய காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தன்னுடன் சேர்ந்து 29 பேர் வானூர்தியில் வந்ததாக திருகோணமலையைச் சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞன் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

சரியான எண்ணிக்கையை வெளியிட பிரித்தானிய எல்லைக்கட்டுப்பாட்டு முகவர் அமைப்பும், கொழும்பின் புலனாய்வு மற்றும் காவல்துறையினரும் மறுத்துவரும் பின்புலத்தில், கொழும்பு சென்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக, சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இருந்த போதிலும், 20 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டதாகவும், ஏரனயவர்கள் மீகமுவ தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

(16-06-2011) திருப்பி அனுப்பி வைக்கப்பட இருந்தவர்களில் சிலர் இங்குள்ள அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனி நபர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதேபோன்று, எதிர்வரும் 30ஆம் நாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களைத் தடுத்து நிறுத்தவும், அரசியல் தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்பாது இருக்கவும், மேலும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/16944/57/30/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக பிரித்தானியாவில் வாழும் எம்மவர் ஓர் சிறந்த முன் மாதிரியாக விளங்குவார்கள் எவ்வாறு இதனை அனுமதித்தார்கள் இது ஏற்கனவே அகதிகளுடன் மோசமாக நடந்துவரும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இதனை பின்பற்றுவதற்கு வசதியாகிவிடும், இவர்கள் ஏற்கனவே சிலரை திருப்பி அனுப்பி விட்டனர் மற்றவர்களை முகாம்களில் அடைத்து புலிகள் என சந்த்தேகிப்பவர்களுக்கு மேலதிகமான காவல் நிறுத்தி உளவியல் ரீதியாக சித்திரவதை செய்கிறார்கள்,

மனித உரிமை அமைப்புகள் கண்டனம் செய்தால் மற்ற நாடுகளை விட தாம் தான் அகதிகளை ஏற்று கொள்பவர்கள் என்று கதை விடுவார்கள் 1500 அவுஸ்திரேலியருக்கு ஒரு அகதி என்ற விகிதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.