Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை இந்நாட்டு குடிமக்களாக இந்த அரசாங்கம் கருதுகின்றதா, இல்லையா? மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, June 20, 2011, 21:09சிறீலங்கா

கொழும்பின் பின்தங்கிய பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ் பேசும் மக்களை அகற்றி, அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட திட்டமிடப்படுகின்றது. வடக்கில் வாழும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயக தேர்தல் கலந்துரையாடலின் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு மூட்டைக்கு 700 ரூபாய் வரை உரமானியம் வழங்கப்படும் பொழுது, மலையகத்தில் உழைக்கும் தோட்டத் தொழிலாளிக்கு குறைந்த பட்ச அடிப்படை சம்பளமாக ரூபாய் 500 கூட மறுக்கப்படுகின்றது.

சொல்லொண்ணா துன்பங்களுக்கு தமிழ் மக்களை உள்ளாக்கிய யுத்தம் முடிந்து இரண்டு வருடம் கடந்த பின்னும்கூட, உலகமே வலியுறுத்தும் அரசியல் தீர்வு மறுக்கப்படுகின்றது.

இது என்ன, தமிழர்களையும் உள்ளடக்கிய இந்நாட்டின் அரசாங்கமா? அல்லது தமிழர்களுக்கு இது அரசாங்கம் இல்லையா? தமிழர்களையும் இந்நாட்டு குடிமக்களாக இந்த அரசாங்கம் கருதுகின்றதா? என்ற கேள்விகளுக்கு விடைகளை அரசாங்கம் உலகத்திற்கு உடனடியாக அறிவிக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்ட மாநாட்டில் தலைமை உரையாற்றிய முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு ஜிந்துப்பிட்டியில் முன்னணியின் பெருந்தொகையான அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சமவுடமை கட்சி, ஜனதா மண்டபய மற்றும் மாலபே சீலரத்ன தேரர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

கொழும்பு மாவட்டம் ஜனநாயக மக்கள் முன்னணியின் கோட்டை என்பதை இம்மாநாடு தெட்டத் தெளிவாக நிரூபிக்கின்றது.

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், அதற்கு பின்னரும் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டிருந்த மனத்தடைகளை இம்மாநாடு தவிடுபொடியாக்கியுள்ளது.

எமது கட்சியை அழிக்க நினைத்த துரோகிகளும் இருக்கின்றார்கள். அதேபோல் இச்சம்பவங்களை பெரிதுபடுத்தி, இத்துடன் எமது கட்சியின் அரசியல் கொழும்பிலே முடிந்தது என்று நினைத்த பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற தமிழ் முகவர்களும் இருக்கின்றார்கள்.

இனி கொழும்பு மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கி பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு தாரை வார்க்கலாம் என்ற கனவுகளுடன் இருக்கின்ற இவர்களுக்கு இங்கே கூடியிருக்கும் நீங்கள் உரிய பதில்களை வழங்கியுள்ளீர்கள்.

எதிர்காலத்திலே நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் நாம் எமது மக்கள் சக்தியை எடுத்துக்காட்டுவோம். அதற்கான ஜனநாயக களத்திலே ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையிலே நானே நேரடியாக களமிறங்குவேன்.

இதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. யாழ்ப்பாணத்தில்கூட தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடைவிதிக்கும் அரசாங்கம் இதுவாகும். இங்கே பாடசாலை மாணவிகள் கொண்டு தமிழ் மொழியிலே தேசிய கீதத்தை பாடவைத்தோம்.

அதற்கு பின்னால் இருக்கின்ற அரசியல் அர்த்தம் உங்களுக்கு புரியும். கொழும்பு மாநகரத்திலே வாழ்கின்ற ஏழை எளிய தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்களை கொள்ளையடிப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.

மத்திய கொழும்பின் ஜிந்துப்பிட்டியில் இருந்து நவகம்புர, கொச்சிக்கடை உள்ளடங்களாக வடகொழும்பு மற்றும் தெமட்டகொடை, கொலொன்னாவை மற்றும் தென் கொழும்பின் கிருலப்பனை வரை வாழும் மக்களுக்கு இந்த உறுதி மொழியை நாங்கள் தருகின்றோம்.

இங்கே இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு, ஐக்கிய சமவுடமை கட்சி தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, மாலபே சீலரதன தேரர் ஆகியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி, சரவணபவன் ஆகியோர் எமது மேடையிலே அமர்ந்திருக்கின்றார்கள்.

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை விட்டுகொடுக்காமல் உரத்த குரலில் எடுத்துக்கூறும் அதேவேளையில் சகோதர சிங்கள மக்களை நோக்கி நேசகரம் நீட்டுகின்ற மேடை இதுவாகும்;.

ஜனநாயக சிந்தனைகொண்ட பௌத்த தேரரையும், முற்போக்கு சிங்கள அரசியல் தலைவர்களையும் அழைப்பித்து தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் சிங்கள மொழியிலேயே உரையாற்றவைக்கும் மேடை இது.

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள்ளே தமிழ் மக்களின் சமத்துவமிக்க எதிர்காலத்திற்காக தீர்மானங்களை நிறைவேற்றும் மேடை இதுவாகும். காணாமல்போன, யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக குரல் எழுப்பும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள மேடை இதுவாகும்.

இதை நாங்கள் கொழும்பில் செய்கின்றோம் என்ற பின்னணியில்தான் எமது கட்சியின் சிறப்பு இருக்கின்றது. கொழும்பு தலைநகரின் மத்திய பகுதியிலே பெருந்திரளான அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும்கூட்டி இத்தகைய ஒரு மேடையையும், மாநாட்டையும் உருவாக்கி நடத்துகின்ற தகைமையும், துணிச்சலும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குத்தான் இருக்கின்றது.

இந்த பெருமை அனைத்தும் என்மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் உங்களைத்தான் சாரவேண்டும்.

http://www.tamilthai.com/?p=19726

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.