Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 12:29 |

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்

மீன்பிடிக்கும் போது இலங்கையின் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில் அவர் -

தமிழக மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கும்போது தவறுதலாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை நேற்று பிற்பகல் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள தகவல் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

நான் மே மாதம் பதவியேற்ற பின்னர் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஜூன் 7 ம் திகதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்றிருப்பதாக ஜூன் 15 ம் திகதியிட்ட கடிதத்தில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அவர்கள் ஜூன் 17 ம் திகதி விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமேஸ்வரம் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள சர்வதேச கடல் எல்லையை கடக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்படுகிறது.

ஜூன் 14 ம் திகதி நான் உங்களை டில்லியில் சந்தித்திருந்தேன். அப்போது இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் விவாதித்தேன். அதற்கு முன்பு ஜூன் 9 ம் திகதி அவர் கொழும்பு செல்வதற்கு முன்பாகவும் இந்த விவகாரத்தை அவருடன் விவாதித்திருந்தேன்.

தற்போது இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 5 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க நீங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com_

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.