Jump to content

சீனாவை முந்தியது ஜப்பானின் அதிவேக சுப்பர் கணனி 'கே': வேகம் 8.162 பீடாபுலொப்ஸ்.


Recommended Posts

Posted by: on Jun 22, 2011

உலகின் அதி வேக சுப்பர் கணனியை (Super Computer) கொண்ட நாடாக சீனாவே இருந்து வந்தது.

சீனாவின் டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படுவதே உலகின் அதிவேக சுப்பர் கணனி.

இந்நிலையில் சீனாவின் சாதனையை ஜப்பான் முறியடித்துள்ளது.

அக்கணினிக்கு சுப்பர் கணனி கே ('K') எனவும் பெயரிட்டுள்ளனர்.

இதனை ஜப்பானின் கணனி தயாரிப்பு நிறுவனமான 'புஜிஸ்டு' ஆகும்.

இக்கணனியானது தற்போது ரயிகன் எட்வான்ஸ் இன்ஸ்டிடியுட் போர் கொம்பியூடேஷனல் சயன்ஸ் (RIKEN Advanced Institute for Computational Science) இலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வேகம் 8.162 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 8.162 குவாட்ரில்லியன் (quadrillion) கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்.

இத்தகவல்களின் படி சுப்பர் கணனி 'கே' ஆனது டியானி (Tianhe) - 1 A ஐ விட மூன்று மடங்கு வேகம் கூடியது.

டியானி (Tianhe) - 1 A இன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). என்பதுடன் இது செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களையே மேற்கொள்ளக்கூடியதாகும்.

இக்கணினி, 68, 544 சிபியுக்களை ( CPU ) கொண்டதுடன் அவை ஒவ்வொன்றும் 2.2 Ghz வேகத்தில் இயங்கும் 8 கோர்களைக் கொண்டது.

இதன் படி சுப்பர் கணனி 'கே' ஆனது 1 மில்லியன் இணைந்த டெஸ்க் டொப் கணனிகளுக்கு சமமானதாகும்.

இதனை இயக்குவதற்கு தேவையான மின்சக்தியின் மூலம் சுமார் 10,000 வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்க முடிவதுடன் இயக்குவதற்கான வருடாந்த மொத்தச் செலவு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

http://www.tamilkathir.com/news/4979/58/8-162/d,view.aspx

Link to comment
Share on other sites

எல்லாம் சரி இதுதான் பிளைக்குதே....

இதனை இயக்குவதற்கு தேவையான மின்சக்தியின் மூலம் சுமார் 10,000 வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்க முடிவதுடன் இயக்குவதற்கான வருடாந்த மொத்தச் செலவு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அதனால்தான் அதன் பெயர் super computer ரா.... :huh::rolleyes::)

Link to comment
Share on other sites

இது 68, 544 CPU க்களைக் கொண்டது. அதாவது சுமார் 34 ஆயிரம் இரட்டை processsor களையுடைய கணணிகளுக்கு ஒப்பானது.

இது கணணி அல்ல. ஒரு Supercalculator. ஆயிரக் கணக்கான CPU க்கள் தொடுக்கப்பட்ட ஒரு கோர்வை. இதன் அசுரத் திறனானது வானிலை அவதானிப்பு போன்ற சிக்கலான விடயங்களை அலசி ஆராய உதவியாக இருக்கும்.

K04.jpg

Link to comment
Share on other sites

சில வருடங்களுக்கு முன்னர் Virginia Tech பல்கலைக் கழகத்தில் இவ்வாறான Supercalculator ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அப்போது இது உலகின் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. இதனை உருவாக்கிய குழுவிற்குத் தலைமை தாங்கியவர் சிறிநிதி வரதராஜன் என்ற தமிழராவார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.