Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் அரங்கேறிய அரசபயங்காரவாதம் தற்போது வடக்கில் துளிர்விட ஆரம்பித்துள்ளது -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 ஜூன் 2011

கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் ஒலித்தவை

http://youtu.be/-Mi8-s-MkTQ

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது அளவெட்டியில் வைத்து இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து இடது சாரி கட்சிகளினாலும், ஜனநாயக விரும்பிகளாலும் இன்று நண்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துறை விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நாட்டிலே சிவில் நிர்வாகத்திற்கு பதிலாக இராணுவ ஓடுக்குமுறையான ஆட்சியே நிலவுவதாக சுட்டிகாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமக்கு சிவில் நிர்வாகமே வேண்டும் எனவும் இதனால் இந்த அரசு உடனடியாக இராணுவ ஆட்சியை ஒழித்து விட்டு சிவில் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரினதும், மற்றும் அவர்களது பாதுகாப்பு பிரிவினரதும் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

முன்னர் தெற்கில் அரங்கேறிய அரசபயங்காரவாதம் தற்போது வடக்கில் துளிர்விட ஆரம்பித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது விழுந்த இந்த அடி ஜனநாயத்திற்கும், ஜனநாயகத்தை விரும்பும் அனைவரினதும் மீது விழுந்த அடி எனவும் குறிப்பிட்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63089/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.