Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தோல்விக்கு காரணமான சர்வதேசம்...

Featured Replies

புலிகளின் தோல்விக்கு காரணமான சர்வதேசம்...

விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணம் யாது? இப்படியொரு ஆய்வரங்கம் நடத்தினால் பல காரணங்கள் முன்வைக்கப்படும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தின் காலத்தை அதிகம் நீட்டிவிட்டார். எதுவும் நீண்ட காலம் எடுத்தால் அதன் முடிபு வெற்றியாக அமையாதென ஒரு தரப்புக் கூறும்.

இன்னொரு தரப்பு, பிரபாகரன் தன்னுடன் கூட இருந்தவர்களை அறியத் தவறிவிட்டதன் விளைவே இந்நிலைமைக்குக் காரணம் என்பர்.

இதற்கு மேலாக விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் தோல்வி வந்திராது என்ற கருத்தும் முதன்மை பெறும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதேநேரம் புலிகளின் தோல்வியை சோதிடத்தின் அடிப்படையில் நின்று பார்ப்போர், குரு பகைத்து விட்டான் என்பர். இதிகாசங்களில் நம்பிக்கை கொண்டோர் இந்தப் பிரபஞ்சத்தின் முடிபே இப்படித்தான் என்று தத்தம் கருத்துக்களை முன்வைப்பர்.

எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான உறவை அல்லது சர்வதேசத்தின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறியதன் விளைவாக ஒரு இனத்தின் போராட்டத்தை விடுதலைப்புலிகள் முன்னெடுத்திருந்தாலும் அவர்களின் தாக்குதல் நடவடிக்கைகள் பயங்கரமானவை எனக் கருதிய சர்வதேசம் இதனை அடியோடு முடிபுறுத்த வேண்டும் என ஒட்டுமொத்த முடிபை எடுத்தது. அந்த முடிபு இலங்கை அரசுக்காக எடுக்கப்பட்டதல்லவாயினும், அம்முடிபு இலங்கை அரசுக்குச் சாதகமாயிற்று என்று கூறலாம்.

இவ்வாறு சர்வதேச சமூகம் எடுத்த முடிபை இலங்கை அரசு தனக்குச் சாதகமாக்கியது மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் தொடர்பில் மிக மோசமாக நடந்துகொண்டது.

இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்திற்கு ஒருபோதும் உடன்பாடானதல்ல. விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் பயங்கரமானவை என்ற முடிபை எடுத்த சர்வதேச சமூகம் இலங்கை அரசின் நடவடிக்கையைப் பார்த்து அதிர்ந்துபோனது. எதைப் பயங்கரம் என்று கருதினோமோ அதைவிடப் பயங்கரம் நடந்தமை உலகை உலுப்பவே செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அரசின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க முடியும் என நம்பிய சர்வதேச சமூகத்திற்கு அந்த நம்பிக்கையும் ஏமாற்றத்தைக் கொடுக்க,

இப்போது, இலங்கை அரசுக்குப் பாடம் புகட்டும் நடவடிக்கையில் சர்வதேச சமூகம் இறங்கியுள்ளது.

இதன் முடிபு இலங்கை அரசுக்கு இக்கதி ஏற்பட என்ன காரணம் என்றொரு ஆய்வரங்கிற்கு வழிவகுக்கும்.

அப்போது யார் எதைக் கூறினாலும் நாம் சர்வதேசம் எடுத்த முடிபே காரணம் எனக் கூறுவோம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20499

புலிகளின் தோல்விக்கு காரணமான சர்வதேசம்...

சர்வதேச சமூகம் எடுத்த முடிபை இலங்கை அரசு தனக்குச் சாதகமாக்கியது மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் தொடர்பில் மிக மோசமாக நடந்துகொண்டது.

இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்திற்கு ஒருபோதும் உடன்பாடானதல்ல. விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் பயங்கரமானவை என்ற முடிபை எடுத்த சர்வதேச சமூகம் இலங்கை அரசின் நடவடிக்கையைப் பார்த்து அதிர்ந்துபோனது. எதைப் பயங்கரம் என்று கருதினோமோ அதைவிடப் பயங்கரம் நடந்தமை உலகை உலுப்பவே செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அரசின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க முடியும் என நம்பிய சர்வதேச சமூகத்திற்கு அந்த நம்பிக்கையும் ஏமாற்றத்தைக் கொடுக்க,

இப்போது, இலங்கை அரசுக்குப் பாடம் புகட்டும் நடவடிக்கையில் சர்வதேச சமூகம் இறங்கியுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20499

விடுதலைப் புலிகளை அழிப்பது அவ்வளவு இலகுவானதில்லை என்பதும் அவ்வாறு அழிக்கும் பொழுது ஏற்படும் அழிவுகளை சர்வதேசம் நன்கு உணர்ந்தே இந்த தமிழ் இன அழிப்புக்கு துணை போனது.தனது நலன்களுக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களை அழிக்கவும் சர்வதேசம் தயங்கியிருக்காது. இன்று தனது நலன்களுக்கு எதிரான திசையில் இலங்கை செல்வதால் இலங்கையை தன் வளி இழுக்கும் எச்சரிக்கையாகவே உள்ளது இன்றைய சர்வதேசத்தின் நகர்வு.இதை தமிழர் தலமை நன்கு அறியும்.தமிழர் தலமை பாரிய எதிர்ப்புக்களை காட்டியிருந்தால் இன்னுமின்னும் நாசகார ஆயுங்களை இலங்கையூடாக வளங்கி எந்த எதிர்ப்புக்களையும் சர்வதேசம் முறியடித்திருக்கும் என்பதை தமிழர் தலமை நன்கு அறிந்திருந்தது.புலம்பெயர் உறவுகளை மட்டும் நம்பியே இறுதிக்கட்டம் அமைந்தது.

மாவீரர் நாள் உரையில் 2008

''இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்தன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டின் புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்புமீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தின் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம்கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்பணிகளைப் பெரும் குற்றவியற்செயல்களாக அடையாளப்படுத்தின் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.சிங்களத்தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர்தேசத்தின்மீது போர் தொடுத்தது. சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலகநாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலைகூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கிவருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இனஅழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்துவருகிறது.

இன்று சிங்களத்தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ்த்; தமிழர்களை ஆட்சிபுரியவேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனாற் போர் தீவிரம்பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போரன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இனஅழிப்புப் போர்.''

''புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்குத் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்கமறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?'' ''

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரும் தமிழரும் தீர்க்கமாக சிங்களத்தையும் அதன் பயங்கரவாதத்தையும் புரிந்தே போர் செய்தனர். ஆனால் சர்வதேசம் நாங்கள் சொன்னதை நம்பவில்லை. உண்மையில் இந்தளவுக்கு கொடுமையானது சிங்களம் என்பதை அவர்கள் நினைத்தே பார்த்திருக்கவில்லை. இன்று அதற்கான பலனை சர்வதேசமும் அனுபவிக்கிறது.

தீர்ப்பை நிச்சயம் எமக்கு சாதகமாக்க நாம் உழைக்கணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரும் தமிழரும் தீர்க்கமாக சிங்களத்தையும் அதன் பயங்கரவாதத்தையும் புரிந்தே போர் செய்தனர். ஆனால் சர்வதேசம் நாங்கள் சொன்னதை நம்பவில்லை. உண்மையில் இந்தளவுக்கு கொடுமையானது சிங்களம் என்பதை அவர்கள் நினைத்தே பார்த்திருக்கவில்லை. இன்று அதற்கான பலனை சர்வதேசமும் அனுபவிக்கிறது.

தீர்ப்பை நிச்சயம் எமக்கு சாதகமாக்க நாம் உழைக்கணும்

ஒற்றுமையாய் இணைந்து செயல்படுவோம்.ஈழத்தமிழனின் தனியாட்சி கனவுகள் நிறைவேறவேண்டும்.

  • தொடங்கியவர்

முன்பு களஉறவு ஒருவர் கூறியிருந்தார் எமக்கு கிடைத்துள்ள இன்றைய ஆயுதம் 'போர்க்குற்றம்' என்ற பிரமாஸ்திரம். அது இன்று ஒரு பெரிய அரசியல் நெருக்குவாரத்தை சிங்களத்திற்கு ( நன்றிகள் சனல் நாலு) தந்து நிற்கிறது. மேற்குலகமும் உலகமும் மெல்ல மெல்லமாக ஒரு உறுதியான நிலைக்கு சென்று கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் 'தனி ஈழம்' வரை செல்ல நாம் உழைக்க வேண்டும்.

U.S. threatens action against Colombo for failure to redress Tamils

The United States on Tuesday hardened its stand against Sri Lanka government cautioning it to take necessary steps to book the perpetrators of alleged war-crimes in the country and to bring together the war-torn north and east with the rest of the country after 26 years of war.

In an email answer to a question from journalists regarding accountability in Sri Lanka, the State Department spokeswoman Victoria Nuland said, “While domestic authorities have primary responsibility to ensure that those responsible for violations of international humanitarian law and human rights law are held accountable, international accountability mechanisms can become appropriate in circumstances in which a State is unable or unwilling to meet its obligations.”

Read more: http://www.allheadlinenews.com/articles/90052827?U.S.%20threatens%20action%20against%20Colombo%20for%20failure%20to%20redress%20Tamils#ixzz1QddGAmlo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.