Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்கள் 23 பேரும் விடுதலை

Featured Replies

இந்திய மீனவர்கள் 23 பேரும் விடுதலை

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த 20ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேரும் இன்று புதன்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.சி.எம்.ஜெமிஸுக்கு இவர்களின் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டதோடு இவர்களின் விடுதலை தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி கே.ஜீவராணி, இவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

தலைமன்னார் பொலிஸார் நாளை வியாழக்கிழமை மேற்படி விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ள நிலையில் அவர்கள் தமிழகம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/23954--23-.html

-----------------------------------

இந்திய மீனவர்கள் விடுதலை!

வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:36

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81967

  • தொடங்கியவர்

மனநலம் பாதிக்கப்பட்டோருடன் அடைத்து வைத்து கொடூர சித்திரவதை-ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

ராமேஸ்வரம் : இலங்கையின் அனுராதபுரம் சிறையில் தாங்கள் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராமேஸ்வரம் திரும்பிய 23 தமிழக மீனவர்களும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கடலுக்குள் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படைக் காடையர்கள் சிறை பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்திய அரசின் தீவிர நடவடிக்கைக்குப் பின்னர் 23 மீனவர்களையும் நேற்று தலைமன்னார் கோர்ட் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இன்று அவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்.

அவர்களுக்கு 23 மீனவர்களின் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மீனவர்கள் பேசுகையில், தங்களுக்கு அனுராதபுரம் சிறையில் கொடும் சித்திரவதை நிகழ்த்தப்பட்டதாக பரபரப்புடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், எங்களை சிறையில் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கினர். எங்களை சங்கிலியில் கட்டி சிறைக்கு இழுத்துச் சென்றனர்.

சிறையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர்.

எங்களை விடுவிக்கும்போது மீண்டும் எல்லை தாண்டி வந்தால் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினர் என்று மீனவர்கள் கூறினர்.

http://thatstamil.oneindia.in/news/2011/06/30/tn-fishermen-subjected-torture-lankan-jail-aid0091.html

மனநலம் பாதிக்கப்பட்டோருடன் அடைத்து வைத்து கொடூர சித்திரவதை-ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

சிறையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர்.

http://thatstamil.oneindia.in/news/2011/06/30/tn-fishermen-subjected-torture-lankan-jail-aid0091.html

யார் இவர்கள்?. ஏன் இவர்கள் சிறையில்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.