Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கணிப்பு போராட்டம் லண்டன் லோர்ட்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணி பிரித்தானியாவில் விளையாடி கொண்டு இருக்கும்வேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் முன்னெடுத்து செல்லப்படும் புறக்கணிப்பு போராட்டம் தனது இறுதி புறக்கணிப்பு போராட்டத்தை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்திற்கு முன்பாக நடத்தவுள்ளனர். ஜூலை 03 ஆம் திகதி காலை 10:00 மணிமுதல் மாலை 06:00 மணி வரை இடம்பெறும்.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற சிங்களவர்கள் இளையோர்கள் மீது எச்சில் துப்பி, தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியதுடன், தமிழீழ தேசிக் கொடியை அகற்ற வேண்டும் என பிரித்தானிய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இளையோர் வைத்திருந்த கொடி தடை செய்யப்படவில்லை எனவும், அதனை அவர்கள் வைத்திருக்கும் உரிமை உண்டு எனவும் கூறிய பிரித்தானிய காவல்துறையினர், தாம் அந்தக் கொடியை அகற்றுமாறு கோரிக்கை விடுக்க மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியிருந்தனர்.

சிங்கள காடையர்களின் நடைமுறை மற்றும் தமிழ் இளையோர்கள் வன்முறையைத் தவிர்த்த காரணத்தினால், சிங்களவர்கள் மீது கோபம்கொண்ட பிரித்தானிய காவல்துறையினர், குழப்பம் விழைவித்த சிங்களவர்களின் பெயர், விபரங்களைப் பதிவுசெய்து, மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்து அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

முன்னர் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களின்போது மக்கள் தொகையைக் கண்டு அருகே செல்ல அஞ்சும் சிங்களவர்கள், இப்பொழுது அருகில் சென்று வன்முறையைப் பிரயோகிக்கும் அளவிற்கு துணிச்சல் பெற்றுள்ளமைக்கு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழ் மக்களின் எண்ணிக்கையே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவரும் பிரித்தானிய தமிழ் இளையோர்கள், இதற்கு முன்னதாக இந்த மாதம் மட்டும் அக்ஸ்பிறிஜ், கார்டிஃப், லோர்ட்ஸ், பிறிஸ்ரல் போன்ற பல இடங்களில் ஐந்து தடவைகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

எம் அன்புள்ள தமிழ் மக்களே எமது போராட்டங்களால் ஒரு புது விழிப்புணர்வை அனைத்துலக ஊடகங்களுக்கு நாம் அளித்துள்ளோம். எம் பாதையில் இருந்து நாம் விலகபோவது இல்லை, எமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழிழத்துக்கான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கம். இத் தருணத்தில் நாம் எமது மக்களை எம்மோடு இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போராட்டத்துக்கு வலு சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்.

Lord's Cricket Ground

St John's Wood Road, NW8 8QN. Closest Station: St John's Wood (Jubilee Line)

London, United Kingdom

03 July · 10:00 - 18:00

நன்றி

சஞ்சய்

தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view

இந்த அறிக்கையை லண்டன் மாநகர சபை தடுக்காத இடமெல்லாம் ஒட்டி விடுங்கள். ஒத்தாசைதரும் கடைகள் கோவில்கள் எங்கும் பார்வைக்கு வையுங்கள். ஆயிரம் கருத்திருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் வந்து ஒன்றாகும் படி அழையுங்கள்.

நேற்றய கூட்டணியினுடனான பேச்சுவார்தைகளி்ன் போது அரசாங்கம் தமிழர்களை நயாகத்தன்னும் மதிக்கப்போவதில்லை என்று காட்டியிருக்கிறது. உங்கள் பாதுகைகளிள் 60 ஆண்டுகளாக ஏமாற்றிவரும் பேச்சு வார்த்தகளையும் எழுதி பிடியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.