Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரும் தமிழ் அமைப்புகளின் கூத்துகளும்...

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டு நிறுவனங்களில் நம்பிக்கை வைத்து, ஈழத் தமிழருடன் இணைந்து உலகத் தமிழர்களும் சர்வதேச செயற்பாட்டாளர்களும் மிக நீண்டகாலமாக ஐ.நா மனித உரிமைக்கான தலைமைச் செயலகத்தை கொண்ட ஜெனீவாவிற்குச் சென்று அங்கு

ஐ. நா. மனித உரிமைச் செயற்பாடுகளில் கலந்து வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் உரிமைகள் மிக நீண்ட காலமாக இலங்கைத்தீவில் பெரும்பான்மையின ஆட்சியாளர்களினால் மறுக்கப்பட்டு வருவதோடு, இவற்றை வேண்டிநிற்கும் தமிழீழ மக்களை பூண்டோடு அழிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் 1983ஆம் ஆண்டு இலங்கைத் தீவு முழுவதிலும் தமிழ் மக்கள் மீது இலங்கை ஆட்சியாளனால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்தே, தமிழீழச் செயற்பாட்டாளர்கள் உலகத் தமிழருடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையிடம் சென்றனர்.

அதே வேளையிலே ஐ. நா. மனித உரிமை ஆணைக் குழு, ஐ. நா மனித உரிமை உப ஆணைக் குழு, ஐ. நா மனித உரிமைக் குழு ஆகியவற்றுடன் பல சிறிய, சிறிய குழுக்கள் இயங்கிவந்தன.

ஐ. நாவும் இலங்கையும் அவ்வேளையிலே ஒரு மாதமாக நடைபெறும் ஆணைக்குழுவோ உப ஆணைக் குழுவோ, இலங்கை விடயத்தில் பெரிதாக பேசிக் கொள்வதில்லை. இதற்குப் பல காரணங்கள் காணப்பட்டன.

ஆனால் 1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள், வன்னி பெரு நிலத்திற்கு இடம் பெயர்ந்ததை தொடர்ந்து கொஞ்சங் கொஞ்சமாக ஐ. நா வின் பார்வை இலங்கையிடம் திரும்ப ஆரம்பித்தது. ஆனால் ஐ. நா வின் பார்வை, கடந்த 2005ம் ஆண்டு வரை இலங்கை மீது ஒர் சர்வதேச நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கவில்லை.

ஆனால் கொஞ்சங் கொஞ்சமாக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்ட கண்டன உரைகள், அறிக்கைகள், மனுக்கள், காலப் போக்கில் பித்தானியா, பிரான்ஸ், சுவிற்சலாந்து, ஜேர்மனி, நேர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மேற்கு நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.

இதற்கு ஐ. நாவில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை வேலைதிட்டங்கள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் ஒன்று, பத்து, நூறு, என இருந்து கொலையின் விகிதாசாரம் ஆயிரக்கணக்கில் அதிகரித்ததுடன் இடப்பெயர்வு உணவு , உடை ,தங்குமிடம் மருந்து ஆகியவை மிகவும் அதிர்ச்சிக்குரிய நிலையை அடைந்து விட்டது. இறுதியில் அங்கு ஓர் இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசுகள் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள், சிங்கள வர்த்தகங்கள் போன்று பலவற்றை தமிழர்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கில் ஆமை வேகத்தில் ஆரம்பித்து, இப்பொழுது குதிரை வேகத்தில் நடை பெறுகின்றன.

தற்போதைய நிலை கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் உலகத் தமிழினம் மட்டுமல்லாது மானிட சத்திரத்திலேயே காணத சந்திக்காத சாதனைகளுடன், வெற்றி நடைபோட்ட ஆயுதப் போராட்டம், இன்று தற்காலிகமாக மௌனித்துள்ளதா?

அல்லது நிரந்தரமாக மௌனித்துள்ளதா என் பதை யார் முடிவு செய்வேண்டும் என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய காலமிது.

அத்தோடு பித்தானியாவின் சனல் நாலினால்(04) ஆவணமாக்கப்பட்டு ஐ. நா மனித உரிமைச் சபையிலும் உலக மக்களுக்கும் காண்பிக்கப்பட்டு விட்டது. காண்பிக்கப் பட்டவையாவும் நம்பத்தகுந்தவையென முழு உலகமே ஏற்றுக் கொண்டுவிட்டது.

அப்படியானால் இப்பொழுது மக்களுடைய கடமை என்ன என்பதை நாம் ஆராய்வது மிக முக்கியமானது. இப்பொழுது நடந்து முடிந்த ஐ. நா மனித உரிமைச் சபையின் 17ஆவது கூட்டத் தொடல் எந்தவித கண்டனப் பிரேணை களையும் இலங்கை மீது நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், அமெக்கா தொடக்கம் கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் யாவும், நடந்துடிந்த மனித உரிமைச் சபையில் இலங்கை மிகவும் மோசமான முறையில் தமது வார்த்தைகளினால் கண்டித்து உரையாற்றினார்கள். இவற்றுக்கு உடந்தையாக ஐ. நா மனித உரிமை ஆணையாளன் உரையும் அங்கு அமைந்தது.

மேற்கு நாடுகளும் அமெக்காவும், இலங்கை மீது ஒர் கண்டனப் பிரேரணையை நிறைவேற்ற முன் வந்த பொழுதும் இவர்கள் இப் பிரேரணைக்கு ஒட்டுமொத்த ஆதரவும் இல்லாமல் முயற்சிப்பது, இலங்கைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையாக முடியுமென என எண்ணி கைவிட்டுள்ளனர்.

புலம் பெயர் வாழ் சங்கங்களும் அங்கத்தவர்களும் ஐ. நா 17ஆவது கூட்டத்தொடல் சில ராஜந்தந்திகள் புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் தமக்குள் சண்டையிடுவதில் காலத்தை கழிக்கிறார்கள் ஆனால் ஐ.நா அறிக்கை விடயத்தில் இவர்களது செயற்பாடுகள் மந்த நிலையில் உள்ளதாக பெரியதொரு குற்றச் சாட்டை புலம்பெயர் வாழ் சங்கங்கள் மீது சுமத்தியுள்ளனர்.

இவர் கூறியதாவது 17ஆவது கூட்டத் தொடல் தமது விடயம் ஆராயப்படலாம் என ஊகித்து இலங்கை அரசு வேறுபட்ட நாடுகளுக்கு தமது அமைச்சர்களை அனுப்பி உரையாடி அவர்களது ஆதரவை பெற்றது மட்டுமல்லாது, ஜெனிவாவில் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு இரு வாரத்திற்கு முன்னரே, இரு அமைச்சர்களும், சட்டமா அதிபரும் சென்று அங்கு தமது பரப்புரைகளை மேற்கொண்டு, வேறுபட்ட பிராந்திய நாடுகளின் ஆதரவை பெற்று விட்டனர் எனக் கூறினார்கள். ஆனால் புலம்பெயர் வாழ் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் ஜெனீவாவுக்கு கூட்டத் தொடன் இரண்டாம் வாரமே வருகை தந்துள்ளனர். அத்துடன் அங்கு முதல் வாரமே பிரசன்மாயிருந்த சங்கங்களின் பிரதிநிதிகளில் சிலர் சர்வதேசமொழியில் பரப்புரை மேற்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

ஓர் சங்கம் ஓர் வெளிநாட்டவருக்கு பெரும் தொகையான பணத்தை செலவழித்து முதல் நாளே ஜெனிவாவிற்கு அனுப்பியிருந்த பொழுதிலும, இப்பெயர்வழி நாம் ஏற்கனவே அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்ததையும், அத்துடன் ஜெனிவா செயற்பாடுகள் பற்றிய உண்மைக்கு புறம்பான விடயங்களை தனது தொடர்பாளர்களுக்கு தினம் அனுப்பி வைப்பதை நாம் வாசிக்க கூடியதாக இருந்தது.

உதாரணத்திற்கு இலங்கை விடயத்தில் ஓர் விசேட கூட்டத்தை ஐ.நா மனித உரிமைச் சபை கூட்டடத்யும் என்பது உண்மையான தகவல் அல்ல! காரணம் விசேட கூட்டத் தொடரை போர் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஜ. நா மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளினால் இப்படியான கூட்டத்தை கூட்டுவது வழக்கம்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 25, 26, 27ஆம் திகதிகளில் இலங்கை பற்றி கூட்டப்பட்ட விசேட கூட்டம், இலங்கையில் போர் நடைபெறும் பொழுதே மேற்கு நாடுகளினால் ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட காரணத்தினால், அவ்வேளையில் விசேட கூட்டம் நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதில் இன்னுமொரு வேடிக்கை என்ன வெனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 16ஆவது கூட்டத்தொடற்கு, பித்தானியாவில் லண்டனிலிலுள்ள இரு தமிழ்ச் சங்கங்களினால் பலர் ஜெனீவாவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இம்முறை இவர்களில் ஒருவர் தவிர்ந்த வேறு யாரையும் நாம் அங்கு காண முடியவில்லை. அங்கு சமூகமளித்திருந்த அந்த ஒருவரையும் இரு நாட்களின் பின்னர் காண முடியவில்லை.

இப்படியான வேலைத் திட்டங்களை செய்ய முடியாது. ஐ. நா. வேலைத் திட்டம் என்பது ஓர் தொடர்ச்சியான வேலை. யாரும் மின்னி மறைவது ஐ. நா. வேலைத் திட்டங்களுக்கு உகந்தது அல்ல.

ஆகையால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆவது கூட்டத்தொடல் இலங்கை மீது ஓர் கண்டன பிரேரணையை நாம் நிறைவேற்ற விரும்பினால் இந்தியா, மலோசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, போன்று மௌனம் சாதித்த நாடுகள் மட்டும் அல்லாது, மாலைதீவு, சீனா, ராசியா, கியூபா போன்று ஐ.நா.அறிக்கைக்கு எதிரான நாடுகளுடன் புலம் பெயர் வாழ் சங்கங்கள் உடன் தமது பரப்புரை வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால் வேறு வழிகளில் நாம் சர்வதேச சமூதாயத்தை நாடமுடியாது.

ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.

அண்மையில் நிறைவுற்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை பிரேரிப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்த போதும், பல்வேறு காரணங்களால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போயுள்ளது.

அதன் காரணமாக எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள அடுத்த மனித உரிமை அமர்வில் குறித்த பிரேரணையை முன்வைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதற்கு ஆதரவளிக்கும் வகையில் எதிர்வரும் செப்டம்பரில் மனித உரிமைக் கவுன்சிலின் ஆரம்பமானவுடன் சனல்4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பான தனது "இலங்கையின் படுகொலைக்களம்" காணொளியை மீண்டுமொரு தடவை ஒளிபரப்பத் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையொன்றுக்கான பிரேரணையை செப்டம்பரில் நடைபெறும் மனித உரிமைக் கவுன்சி்ல் அமர்வின் போது அமெரிக்கா முன்மொழியவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

http://akkinikkunchu.com/new/

சில சம்பவங்கள் உண்மைதான். நானும் கொஞ்ச நாள் ஜெனீவாவில் அலைந்தேன். இப்போ இல்லை. அதற்கு பல கசப்பான காரணங்கள் உள்ளன. ஐ. நா. பணி தொடர்பில் மிகவும் ஒழுங்கமைகப்பட்ட, நல்ல முகாமைத்துவம் கொண்ட எம்மவர் கட்டமைப்பு இல்லை. இன்றும் இல்லைத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.