Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தை ஏமாற்ற ஏமாற்றப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Featured Replies

உலகத்தை ஏமாற்ற ஏமாற்றப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தீர்வுத்திட்டம் இன்று வழங்கப்படும் நாளை வழங்கப்படும் என எம்மை அரசு ஏமாற்றுவதாக கூட்மைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிங்கள அரசு தமிழர்களுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்கப்போவது இல்லை.

ஆனாலும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட இந்த தீர்வுத்த திட்டம் தற்போது போரினவாத பிக்குகளிடம் இருக்கின்றது அதில் திருத்தங்களை செய்யவே மகிந்த காத்திருக்கின்றார்.

இப்படி இதற்கு முதல் பல முறையான செயற்பாடுகளுக்கு இதே முறை கடைபிடிக்கப்பட்டடுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் “எங்களுக்கு மதிப்பளிக்கவிட்டால் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் திரும்ப வரும்” என பிக்குகள் பீடாதிபதி மறைமுகமாக அரசை மிரட்டியிருந்ததை கவணிக்க வேண்டும்.

சர்வதேச அழுத்தங்களுக்காக ஒரு தீர்வு நாடகத்தை நடத்த வேண்டிய தேவை மட்டுமே அரசுக்கு உள்ளது. உண்மையான தீர்வுகள் என சிங்கள அரசிடம் எப்போதும் இருந்ததும் இல்லை இருக்கப்போவதும் இல்லை இது வரலாறு தந்த செய்தி.

எவன் ஒருவன் தன்னுடைய வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கின்றானே அவன் மீண்டும் அதே வாழ்கை வாழ சபிக்கப்படுகின்றான் இது வரலாற்று உண்மை நிதர்சனமும் இதுதான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய வரலாற்றுக் கடமையுணர்ந்து காத்திரமாக செயலாற்ற வேண்டும் தற்போதைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது ஒரு வரலாற்று இனம் மாபெரும் அழிப்பின் பின்னர் அதற்கான நீதி வேண்டி நிற்கும் போது அரசியல் கட்சிகள் அதன் தேவையுணர்ந்து செயற்படுவது போல் தெரியவில்லை.

புலம்பெயர் நாடுகளில் எவ்வளவுதான் போராட்டங்கள் வழக்குகள் செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் தாயகத்தில் மக்களுடைய மற்றும் தமிழ் அரசியல் வாதிகளுடைய எதிர்ப்புகள் எவ்வளவு காத்திரமானவை என்றே சர்வதேசம் அளவெடுக்கின்றது.

அந்த அளவுகளின்படி இவ்வளவு அழிவுக்குப் பின் எவ்விதமான காத்திரமான போராட்டங்களையே அல்லது காத்திரமான அறிக்கையோ கூட சிங்கள அரசுக்கு எதிராக இல்லை என்பதே பெருத்த வேதனை. ஏன் எதற்கு எப்படி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதர தமிழ்க் கட்டசிகளும் விளக்கம் தர வேண்டும்

நாங்கள்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

http://rste.org/2011/07/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/

சிங்கள பயங்கரவாதிகள் உலகை ஏமாற்ற முழு ஒத்துழைப்பையும் வழங்கும் கையாலாகாத சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விரோததேசமாம் இந்தியாவின் எடுபிடிகளான கூத்தமைப்பின் சம்பந்தன் மற்றும் மாவை சுரேஸ் குழுவது வழித்தோன்றல்கள் யாழ் மாநக(ரக)ரசபைக் கூட்டத்தொடரில் தண்ணீப்போத்தலால் எறிந்து விளையாடும் கண்கொள்ளாக் காட்சியை சிங்களவன் பதிவ செய்து இணையத்தளங்களில் ஏத்திவிட்டீருக்கிறான் ஒருக்கா தேடிப்பிடித்துப் பாருங்கோ. கு.... கூழுக்கு அழுகிதாம் கொண்டை பூமாலைக்கு அழுகுதாம் என மாநக(ரக)ரசபை உறுப்பினர்களது கூட்டத்தொடரில் பருகுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரே போத்தல் தண்ணீர் அதாவது யாழ் மாந(ரக)கர எல்லகை;குட்பட்டு வதிவோர்க்கு இவர்கள் எல்லாம் எப்படி நல்ல குடிநீரை வினியோகிப்பர் என்பதை தீர்மானிக்கவும். இதில முதல்வர் கூதலுக்கு போடுமாப்போல் ஒரு அங்கியை போத்துக்கொண்டு இருக்கிறா. கடந்த முப்பது வருட காலத்தில் மாநகர முதல்வர்கள் எவரும் கூட்டத்தொடர்களில் சாதாரணமான சூழலில் பங்குகொள்ளும்போது இப்படி போத்திக்கொண்டு வருவதில்லை. ஏதாவது முக்கிய விழாக்களிலேயே முதல்வர் அங்கியை அணிவது வழக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.