Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சனைக்கு 20 வது திருத்தச் சட்டம்

Featured Replies

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான திருத்தத்தை 20 ஆவது திருத்தமாக முன்வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்கு குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த செயற்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதனை இழுத்தடிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து காலத்தை வீணடிக்காமல் சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன் வைக்கவேண்டும் என்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடு தலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன சுட்டிக் காட்டியுள்ளதுடன் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளன.

பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள நிலையிலேயே அரசியலமைப்பில் மற்றுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட தாகவும் அறிய முடிகின்றது.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் சட்ட வரைஞர் திணைக்களம் கலந்துரையாடி வருவ தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணை எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த தெரிவுக்குழுவில் 31 உறுப்பினர்களை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அறுதிப் பெரும்பான்மையை கொண்ட அரசாங்கம் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்றி அதனூடாக பிரச்சினைக்கு பெரும்பான்மையுடன் தீர்வை முன்வைக்கும் வகையிலேயே திருத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறியடிகின்றது.

http://akkinikkunchu.com/new/

உண்மையில் உரிமை தர விரும்பினால், நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், அதை இன்றே செய்யலாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்த முதலில் குடியேற்றத்தை நிற்பட்டலாம். அரசியல் ரீதியாக முதலில் வடக்கி கிழக்கை இணைக்கலாம்.

20 வது திருத்தச்சட்டம், பேச்சுவார்த்தை, உள்ளூராட்சி தேர்தல், நல்லிணக்க ஆணைக்குழு - இவை எல்லாம் உலகத்தையும், தமிழரையும் ஏமாற்றவே.

சிங்களப் பயங்கரவாத அரசை தடை செய்ய மேற்குலக நாடுகள் முன்வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.