Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரெஜின் கடிதமும் சேரமானின் விளக்கவும்!!!

Featured Replies

ஈழமுரசு கக்கூசு லீக்ஸில் இருந்து மணக்க மணக்க சேரமான் உறுஞ்சி உறுஞ்சித் தானும் சுவைத்து உங்களிற்கும் சுவைக்கத் தருவது ரெஜியின் மறு பக்கம்

வன்னி மக்களுக்கான மனிதநேயப் பணிகளுக்கென புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களால் வழங்கப்பட்ட பெரும் தொகையான நிதியையும், பொருட்களையும் கையகப்படுத்தி ‘வணங்கா மண்’ கப்பலின் வன்னிப் பயணத்தை மண்குதிரைக் கடற்சவாரியாக ரெஜி இட்டுச்சென்றமை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களை எமது கடந்த பத்தியில் வெளிக்கொணர்ந்திருந்தோம்.

மே 18இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு கே.பி உரிமை கோர, அவருக்கு உறுதுணையாக நின்று தமிழீழ அரசியல்துறைக்கு ரெஜி வாரிசுரிமை கோரியமை பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

ரெஜியின் இவ் உரிமை கோரல் என்பது தற்செயலாக நிகழ்ந்தேறிய ஒரு விடயம் அல்ல. வெளிநாட்டில் சுயாதீனமாக இயங்கும் தமிழீழ தேசிய ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல், பரப்புரை அமைப்புக்களை இரும்புப்பிடிக்குள் முடக்கி வைத்திருத்தல் போன்றவை ரெஜியின் நீண்டகாலக் கனவுகள். இக்கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்பாகவே மே 18இற்குப் பின்னரான சூழலை ரெஜி அணுகியிருந்தார்.

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து தானே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்று கே.பி முடிசூடிக் கொள்ள, கே.பியின் ‘மதியுரைஞராக’ உருத்திரகுமாரனும், ‘அரசியல்துறைப் பொறுப்பாளராக’ ரெஜியும் கொலுவிருக்க முற்பட்டனர். இவர்களுக்கு உறுதுணையாக கே.பியின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக அறிவழகன் என்றழைக்கப்படும் கதிர்காமத்தம்பி விநாயகமும், அனைத்துலக பொறுப்பாளராக தற்பொழுது சுபன் குழுவினரின் பொம்மைத் தலைவராக விளங்கும் இராமு.சுபன் என்பவரும் கொலுவமர்ந்து கொண்டனர்.

இதில் உருத்திரகுமாரனின் பின்இயந்திரங்களாக இயங்கும் பொறுப்பு கே.பியின் இருகரங்களாக விளங்கும் மனோகரன் (பிரான்ஸ்), சர்வே (நோர்வே) ஆகியோரால் ஏற்கப்பட்டது. இதுபற்றி அப்பொழுது தனது நண்பர் ஒருவரிடம் கருத்துக்கூறிய சர்வே, நாடுகடந்த அரசாங்கத்தின் முன்இயந்திரமாக உருத்திரகுமாரன் விளங்குவதாகவும், ஏதாவது காரணத்தால் உருத்திரகுமாரன் என்ற இயந்திரம் முடங்கும் நிலை ஏற்பட்டால், நாடுகடந்த அரசாங்கம் என்ற தொடருந்து வண்டியை சர்வே என்ற பின்இயந்திரம் அதன் இலக்கில் கொண்டுசென்று நிறுத்தும் என்றும் சூளுரைத்திருந்தார்.

நிதிக்கையாடல், தவறான நடத்தை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கையின் நிமித்தம் 2003ஆம் ஆண்டு வன்னிக்கு அழைக்கப்பட்ட பொழுது தனது மனைவியை ஒஸ்லோவில் தனியே விட்டுவிட்டு தன்னால் வன்னிக்கு வரமுடியாது என்றுகூறி பதின்மூன்று பக்கத்தில் வன்னிக்கு தொலைநகல் அனுப்பி விட்டு ஒளிந்து கொண்டவரே இந்த சர்வே. இவர் எழுதிய தொலைநகலின் பிரதி எம்மிடம் உள்ளது.

தற்பொழுது கொழும்பிலிருந்தவாறு தனது எசமான்களின் ஏவல்களை புலம்பெயர் தேசத்திற்கான கட்டளைகளாக கே.பி வழங்க, அவற்றை சிரம்மேல் கொண்டு கச்சிதமாக செயற்படுத்தும் நாசகார நடவடிக்கைகளில் உருத்திரகுமாரன், ரெஜி, விநாயகம், சுபன், சர்வே, மனோ ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரான்சில் வருடந்தோறும் இடம்பெறும் விளையாட்டு விழாவிலிருந்து இவ்வாண்டு தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களை அந்நியப்படுத்தி, நிகழ்வை தவறான பாதையில் இட்டுச்சென்ற பெருமை ரெஜி, மனோ ஆகியோரையே சாரும்.

ரெஜியின் இவ்வாறான நாசகார நடவடிக்கைகளின் நதிமூலத்தையும், மே 18இற்குப் பின்னர் தமிழீழ அரசியல்துறைக்கு ரெஜி வாரிசுரிமை கோரியதன் ரிசிமூலத்தையும் நாம் புரிந்து கொள்வதற்கு, 21.08.2008 அன்று வன்னிக்கு ரெஜி அனுப்பிய கடிதத்தை நாம் இப்பத்தியில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

வழமையாக வன்னிக்கு எழுதும் கடிதங்களில் அறிவன் என்று ஒப்பிடும் ரெஜி, இம்முறை அனுப்பிய கடிதத்தில் கே.பி.ரெஜி என்று ஒப்பமிட்டிருந்தார். ஏழு பக்கங்களில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு ரெஜி அனுப்பிய கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது:

“வணக்கம்,

அன்புடன் பா.ந.அண்ணர் அவர்கட்கு,

தற்போதைய சூழலில் அதிகம் தொந்தரவு தர விருப்பம் இல்லை. ஆனால் எழுதாமல் இருக்க மனம் வரவில்லை. குறிப்பாக மீடியா தொடர்பாக எனது அவதானிப்பை எழுதுகின்றேன்.

எனக்கு மீடியா தொடர்பாக சில அனுபவங்கள் உண்டு. சிறிதுகாலம் அதில் பலவேலைத் திட்டங்களை செய்தேன். குறிப்பாக ஜெயசிக்குறு காலம் மற்றும் ஓயாத அலைகள் நடவடிக்கைகளின்போதும் நானும் அலெக்ஸ் ம் பல வேலைத்திட்டங்களைச் செய்தோம்.

தற்போது செய்திகள் பல்வேறு கோணங்களில் வருகின்றன. உண்மையில் செய்திகளை யார் தணிக்கை செய்து ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட வகையில் வருகின்றது என்பது தெரியவில்லை. ஆனால் சில விடயங்களை கவனத்தில் எடுக்கும்படி வேண்டுகின்றேன்.

முதலாவதாக தாயகத்தில் மக்களிற்கு வழங்கப்படும் செய்திகள் எல்லாம் வெளிநாட்டு மக்களிற்கு தேவையில்லை.

ஒரு உதாரணம்:

முன்னாள் போராளிகளை இணைப்பு, இணைத்ததற்கான படத்துடன் கூடிய சான்று செய்தி, மக்கள் பயிற்சி ஆரம்பம் அதற்கான சான்று படத்துடன் கூடிய செய்தி எல்லாம் வெளிநாட்டு மக்களிற்கு தேவையா? இதனால் என்ன பிரயோசனம்? மாறாக எதிரியின் மனோ திடத்தினை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாகவே இருக்கும்.

1997, 98 காலப்பகுதியில் எல்லைப்படை, சிறப்பு எல்லைப்படை போன்ற முழுச்செய்தியும் நடவடிக்கைகளின் பின்பே தெரியவந்தது. அதுமட்டுமன்றி எல்லைப்படையினர் 1999 தென்மராட்சி சமரின்போது பிடிபட்ட பின்னரே எதிரிக்கு எமது தந்திரோபாயம் முழுமையாக விளங்கியது.

எமது இணைய தளங்கள், ஊடகங்கள் யார் முதலில் செய்தி வெளியிடுவது, யார் கூடுதலாக புகைப்படம் பிரசுரிப்பது, என்றபோட்டியில் எந்த செய்தியினை யாருக்கு எப்போது விடவேண்டும் என்ற நிலை இல்லாது போய்விட்டது.

தற்போது இன்ரநெற் வசதி, தொலைபேசி வசதி எல்லாம் இயக்கத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டில் உள்ளதால் நாங்கள் செய்திகளை ஒருமுகப்படுத்தி விடுவது நல்லது.

புலிகளின் குரல் சேவையானது வெளிநாட்டிற்கு வருவது நல்லது. ஆனால் உள்ளூர் வெளியூர் என வகைப்படுத்தப்படவேண்டும்.

வெளிநாட்டில் மக்கள் தற்போதைய நிலையினை எண்ணி முகம் சுழிக்கின்றனர். அது அவர்களது தவறு அல்ல. தவறு எமது மீடியாக்கள்மீதுதான். மிகைப்படுத்தப்பட்ட ஆய்வுகளும் மதிப்பீடுகளும் மக்கள் மத்தியில் மனக்கோட்டைகளை ஏற்படுத்தியது எனலாம். எனவே இது மீடியா விடயங்களில் அது தொடர்பானவர்களிடம் அவதானமாக செயற்படுமாறு சொல்வது நன்று.

உதாரணம் இரண்டு:

புள்ளிவிபரங்கள் நேர்முகங்கள் வழங்குதல் தொடர்பானது. நாம் வன்னியில் மிகப்பெரிய அவலம் ஏற்பட்டுவருவதாக கூறும்போது, கிளிநொச்சியில் இருக்கின்ற மருத்துவ சுகாதார மற்றும் அரச அலுவலக அதிகாரிகள் அங்கு எல்லாம் சரியாக இருப்பதாக கூறுகின்றனர்.

இறுதியாக வந்த அரசாங்கத்தின் அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் பெயர்விபரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர

வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது வழியில் சொல்வதற்கு இடம் அளிக்கக்கூடாது.

புலிகளின் குரல்:

வெளிநாட்டு, உள்நாட்டு மக்களிற்கு வழங்கப்படும் செய்திகளில் மாற்றம் வேண்டும், வகைப்படுத்தல் வேண்டும். உள்நாட்டில் எம் மக்களிற்காக வழங்கப்படும் செய்திகள், ஆட்சேர்ப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் உரைகள், தகவல்கள், போன்றவை வெளிநாட்டில் வதியும் மக்களிற்கு தேவையில்லை. அதனால் வரும் நன்மையை விட பக்க விளைவுகளே அதிகம்.

புலிகளின் குரல் எல்லா இடமும் எல்லா நாட்டிற்கும் கேட்கமுடிகின்றது என்ற சந்தோசம் ஒருபுறமிருக்க செய்திகளின் தன்மை, நிகழ்ச்சிகளின் தன்மை பற்றியும் உள்நாட்டு வெளிநாட்டு மக்களிற்கு என வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துதல் நல்லது.

ஈழநாதம்:

இதன் சில பிரதிகளும் தற்போது இணையங்களில் வருகின்றன. ஆசிரியர் தலைப்பு மற்றும் சில தேர்வு செய்த கட்டுரைகளை மட்டும் வெளிநாட்டிற்கு பொருத்தமானது என நினைக்கின்றேன். அத்துடன் முக்கியமான மக்கள் படும் துயரங்கள் பற்றிய செய்திகளும் இணையங்களிற்கு கொடுக்கமுடியும்.

ஒளித்தொகுப்பு ஆவணங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

இவை வெளிநாட்டிற்கு கூடுதலாக வருகின்றன. ஆனால் அவற்றில் புள்ளிவிபரங்கள் தவறாக இடம்பெறுகின்றன. அது மட்டுமன்றி கருத்துக்கள் தற்போதைய உலக அரசியலிற்கு ஒவ்வாமையாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக கரும்புலிகள் நினைவு தொகுப்பில் உலக தற்கொலைத் தாக்குதல்களை குறிப்பிட்டமையும் அதில் அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதல்களை விபரித்தமையும் ஆகும். நாங்கள் சரியாக சொன்னாலும் அதனை தவறாக புரிந்து விமர்ச்சிப்பவர்கள் வெளிநாட்டில் அதிகம் மட்டுமன்றி அதனைத்தான் நம்புவதற்கு நிறையபேர் இருக்கின்றனர். திரும்ப அதனை திருத்துவதற்கோ சரியென எதிர்வாதம் புரியவோ எம்மவர் முயற்சிப்பதும் இல்லை.

இணையதளங்களிற்கு செய்திகள் வழங்குதல்:

இவை நிச்சயமாக கட்டுப்படத்தப்படவேண்டும். போட்டி, ஆர்வக்கோளாறு காரணமாக செய்திகளின் தன்மைகளை யோசிக்காது எவ்வளவு வேகமாக அனுப்பமுடியுமோ அவ்வளவு அனுப்புங்கள் என்பது சரியானது அல்ல. அதேபோலத்தான் புகைப்படங்களும். வன்னியில் இருந்து நேரடியாக புதினம் செய்தியாளர். வன்னியில் இருந்து நேரடியாக பதிவு செய்தியாளர்.

வன்னி களமுனையில் இருந்து நேரடியாக பரபரப்பு றிப்போட்டர் என செய்திகள் வருகின்றன.

உப்புச்சப்பில்லாத செய்திகள், தேவையற்ற புகைப்படங்கள், சினிமாத்தனமான ஆய்வுகள். இதற்கு எல்லாம் காரணம் வன்னியில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ வருகின்ற அல்லது அனுப்பப்படுகின்ற செய்திகளும் புகைப்படங்களுமே.

வெளிநாட்டில் உள்ள செய்தியாளர்கள் இணையதளங்களைக் கேட்டால் நாட்டில் இருந்து வந்தது, அவர்கள் பார்த்துதானே தந்திருப்பினம் என்கிறார்கள். குறிப்பாக உள்ளூர் மக்களிடம் எழுச்சியினை ஏற்படுவதற்காக பேசப்படுகின்ற சொற்கள், பேச்சுக்கள், புகைப்படங்கள் என்பன இங்கு தேவை இல்லை என கருதுகின்றேன். வெளிநாட்டில் மக்களிற்கு தலைவரிடம் நம்பிக்கை இருக்கின்றது. போர் வெல்லப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஒரு சிலரிற்காக நாம் ஒட்டுமொத்தமான மக்களுக்கும் விளக்கம் கொடுக்கதேவை இல்லை.

தற்போதைய நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள அனைவரும் பங்களிக்க முன்வாருங்கள் என்ற செய்தியும் அதேநேரம் மக்கள் படுகின்ற துன்பதுயரங்களை எடுத்து கூறுவதும் பொருத்தமானது ஆகும்.

ஏனெனில் போராட்டத்திற்கு அவசரமாக என நிதி சேகரிக்கப்படுகின்றது. இவை தெரிந்த ஆதரவாளர்களிடம் தலைவர்தான் உங்களிடம் கேட்கசொன்னவர் என்று கேட்டு பெரும்தொகை வாங்கப்படுகின்றது. நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு சொல்லப்படுகின்றது மட்டுமன்றி, தலைவர் ஒப்பத்துடன் துண்டுகளும் வழங்கப்படுகின்றன.

எனவே இதைவிட பிரச்சாரம் செய்து நம்பிக்கையை கட்டியெழுப்பி நிதிபெறுதல் தேவை இல்லை.

வெளிநாட்டில் உள்ள மக்கள் செயற்பாட்டு ரீதியான மாற்றத்தினை எதிர்பார்க்கின்றனர். வாய்மொழி மூலமான உறுதிப்பாடுகள் ஏற்கனவே தளபதிகள், பொறுப்பாளர்களால் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டில் உள்ள மக்களிற்கு போர் வெல்லப்படவேண்டும், இல்லாவிட்டால் இதுவரை நீங்கள் செய்த பங்களிப்புகளிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும், போர் வெல்லப்படாமல் விட்டால் நாம் முற்றாக அழிக்கப்படுவோம் என்ற கருத்துப்படதான் நாம் செய்திகளை வழங்கவேண்டும்.

குறிப்பு:

தலைவரின் கையெழுத்திட்ட பற்று சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. அதனை சிலர் சிலருக்கு காட்டிஉள்ளனர். இது நம்பிக்கை ஏற்படுத்துகின்ற நல்லவிடயம். தலைவர் சொல்லுவார், தன்னை பயன்படுத்தி போருக்கு வலுசேர்க்க முடியும் என்றால் சேருங்கள் என்று. ஆனால் தற்போதைய சூழலில் இந்த பற்றுசீட்டு தவறுதலாக அல்லது வேண்டுமென்றே அல்லது தம்மை காக்கும்பொருட்டு பொலிசாரிடம் பிடிபட்டால் அது தலைவருக்கும் ஒட்டுமொத்தமான இயக்கத்திற்கும் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் நெகிழ்ச்சி இல்லாத மீட்சி இல்லாத தன்மையினை கொண்டுவரும். ஏனெனில் இதுவரை எமது இயக்கம் குற்றம் செய்ததாக நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படவில்லை (குறிப்பாக பிரித்தானிய நீதிமன்றங்களில்). ஆனால் இந்த பற்றுசீட்டு அகப்பட்டால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்.

குறிப்பு 2:

பிரித்தானிய தமிழர்பேரவை ஆரம்பத்தில் இயக்கத்தின் தடையினை நீக்க வழக்கு போடப்போவதாக கூறி இருந்தது. இதுபற்றியும் இவர்களை எவ்வாறு பிரிட்டிஸ் அரசு பயன்படுத்தலாம் என்பது பற்றியும், நான் முன்பு எழுதியிருந்தேன். தற்போதைய செய்தியின்படி இயக்கத்தின் அரசியல் சமூக அபிவிருத்தி பிரிவு என வகைப்படுத்தி அதனை மட்டும் இயங்க நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதான் உண்மையில் சர்வதேசத்தின் புலம்பெயர்ந்த மக்களை பிரிப்பதற்கான நடவடிக்கை.

ஐரிஸ் போராட்டம், ஏன் தற்போது காமாஸ் இயக்கம் போன்றவற்றை அவர்களது மிகப்பெரிய ஆதரவாளர்களிடம் இருந்து பிரித்து ஆயுதப்போராட்டத்தினை தனியாகவும் அரசியலை தனியாகவும் தனிமைப்படுத்தினர். எமது இயக்கத்திலும் ஆயுதப் போராட்டத்தினையும் அரசியலையும் தனிமைப்படுத்தி அரசியலுக்கு மக்கள் உதவி செய்தால் தடையில்லை, ஆயுதப்போராட்டத்திற்கு உதவி செய்யகூடாது என்றும் சொல்லுவார்கள். பின்பு ஆயுப்

போராட்டத்தினை செய்யும் தலைவரை அங்கீகரித்தால் குற்றம் என்றும் அரசியல் தலைவரை அங்கீகரிக்கலாம் என சொல்லுவார்கள்.

இந்த மிகப்பெரிய சூழ்ச்சியில் தமிழ்போரம் மாட்டுப்பட போகின்றது. தயவு செய்து இதற்கு அனுமதிக்கவேண்டாம். பிரித்தானிய தமிழ் போரத்தினை ஒரு நிறுவனமாக வைத்திருக்க வேண்டும் தவிர இயக்கத்தின் அல்லது தமிழ் மக்களின் ஒரு தனித்துவ நிறுவனமாக ஆக்கக் கூடாது. ஆனால் அதுதான் நடக்கின்றது. மக்களிடம் அங்கத்தவர் பட்டியல் சேர்ப்பது, தாம் இயக்கத்தின் அரசியல் பிரிவு என ஆருடம் கூறுவது, இயக்கத்திற்கு போராட்டம் செய்வதுதான் கடமை, அரசியலை பார்ப்பது எமது கடமை என கூறுவது, இதெல்லாம் தெளிவற்ற கூற்றுக்களோ அன்றி தற்செயலான வாக்கியங்களோ அல்ல. திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஊன்றப்படுகின்றன.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற பொங்குதமிழ், தமிழ்போரத்திற்கான ஆதரவு தேடும் தளமாகவே பாவிக்கப்பட்டது. இங்கு சாதாரணமாக நிகழ்சிகளில் தாயகப்பாட்டு போடுகின்றனர், நாட்டியம் ஆடுகின்றனர், ஆனால் பிரித்தானிய பொங்குதமிழில் பிரபாகரன் என்ற பெயரோ புலிகள் என்ற வார்த்தைகளோ உச்சரிக்க கூடாது என்று ஒழுங்கமைக்கப்பட்டோர்களால் கூறப்பட்டது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் தங்களிற்குள் சிரிப்பார்கள் புலி ஆதரவாளர்களால் புலி அடக்கப்படுவதனை பார்த்து.

மகாத்மா காந்தி தென் ஆபிரிக்காவில் முதல் வகுப்பு ரிக்கற் எடுத்து பயணம் செய்தார். ஆனால் வெள்ளைக்காரர்கள் அவரை முதல்வகுப்பில் இருக்க அனுமதிக்கவில்லை. அதனால் சத்தியா கிரகம் செய்தார். இறுதியில் பொலிசார் அவரைமட்டும் செல்லலாம் என்றனர். ஆனால் அவர் நான்மட்டுமல்ல எல்லோரும் போகவேண்டும் என்று சத்தியா கிரகம் செய்தார். ஆனால் அந்த இடத்தில் தமிழ்போரம் இருந்திருந்தால் ஓம் என்று சொல்லி பயணம் செய்திருப்பார்கள் மட்டுமன்றி நாட்டிற்காக எவ்வளவு சிரமப்பட்டு பணம் செய்தோம் என மக்களிற்கு விளக்கம் வேறு கொடுத்திருப்பார்கள்.

புலம்பெயர் மண்ணில் போராட்டம் தொடர்பான சர்வதேசத்தின் கொள்கைகளிற்கு ஏற்பதான் நாம் நடந்து விசயங்களை சாதிக்கவேண்டும் என்ற கொள்கைக்கு வரையறை தேவை. இல்லாவிடில் எதிர்காலத்தில் அதன் விளைவுகள் அதிகமாகும். பொங்குதமிழ் செய்தி பிரித்தானியாவில் எந்த உள்ளூர் செய்திகளிலும் வரவில்லை. ஏன்? தங்களிற்கு அசுரபலம் இருப்பதாக சொல்லி கொள்ளும் தமிழ்போரம் ஒரு சிறிய பத்திரிகையில் ஒரு சின்ன மூலையிலாவது ஏன் செய்தியினை வரசெய்திருக்க கூடாது? யாருக்காக பொங்குதமிழ் செய்தோம்? பொங்குதமிழ் நடந்த இடம் உங்களிற்கு எங்கு என்று தெரியுமா?

ஒரு ஒதுக்குபுறமான விளையாட்டுமைதானம். உண்மையில் லண்டன் நகரில் செய்திருந்தால் அருகால் வந்துபோயிருந்த பயணிகளிற்கு தெரிந்திருக்கும். நான் இதுதொடர்பாக கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் அதற்கு 6 மாதத்திற்கு முன்பு விண்ணப்பிக்கவேண்டும் என்று. அப்படியாயின் ஏன் அதனை செய்திருக்க கூடாது? மக்கள் எங்குவரச்சொன்னாலும் வருவார்கள்.

நன்றி

கேபிறெஜி”

ரெஜி எழுதிய இக்கடிதம் பல முரண்பாடுகளை கொண்டிருந்ததை, அதனை சுயாதீனமாக ஆராய்பவர்களுக்கு நன்கு புரியும். அதாவது, வன்னியில் இருந்து வெளிநாடுகளுக்கு செய்தி அனுப்புவோருக்கு அரசியல் அறிவு போதாது என்ற தொனியுடனும், வெளிநாட்டுகளில் இருக்கக்கூடிய சட்டச்சிக்கல்களிடையே சுழியோட்டம் ஓடித் தாயகப் பணி புரியும் தேசிய செயற்பாட்டாளர்களை போராட்டத்தின் எதிரிகளாக விளிக்கும் கருத்தோட்டத்துடனுமே தனது கடிதத்தை ரெஜி எழுதியிருந்தார்.

இலண்டன் பொங்குதமிழ் நிகழ்வில் தேசியத் தலைவரின் படம் வைக்கப்படாதையிட்டு தனது கடிதத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் ரெஜி, அதே கடிதத்தில் புலம்பெயர்வாழ் மக்களுக்கு வழங்கப்படும் தேசியத் தலைவரின் கையப்பமிட்ட பற்றுச்சீட்டுக்களால் இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்றும் ஒப்பாரிவைக்கின்றார். அப்படியென்றால் ரெஜி கூறவிளைந்த செய்தி என்ன?

இக்கேள்வியே அப்பொழுது வன்னியிலும் எழுந்திருந்தது. ரெஜியின் கடிதம் பற்றி அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களுடன் அப்பொழுது கலந்தாலோசித்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள், ‘ரெஜி என்னதான் சொல்கின்றான்?’ என்று வினவியிருந்தார். இதுவே தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் கடும் சீற்றமுற்று, ரெஜியை வன்னிக்கு வருமாறு பணித்தமைக்கான காரணியாகவும் அமைந்திருந்தது.

வன்னியில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் சுயாதீன செய்தியாளர்களாலும், தமிழீழ அரசியல்துறை, அனைத்துலக தொடர்பக ஊடகப் பிரிவு, அனைத்துலக தொடர்பக பரப்புரைப் பிரிவு, படைத்துறைப் பேச்சாளரின் செயலகம், சமாதான செயலகம் போன்ற கட்டமைப்புக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக வலையமைப்புக்களாலுமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் இதுவிடயமாக தனது கடிதத்தில் ரெஜி வெளியிட்ட அபத்தமான கருத்துக்கள் சுயாதீன செய்தியாளர்களின் செயற்பாட்டையும், ஊடகப் போராளிகளையும் தூற்றும் வகையிலேயே அமைந்திருந்தன எனக்கூறின் மிகையில்லை.

இவ்வாறான நாசகார நடவடிக்கைகளிலேயே மே 18இற்குப் பின்னர் ரெஜியும், கே.பி கும்பலை சேர்ந்த அவரது சகபாடிகளும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் உண்மை எனும் நெருப்பாற்றில் இவ்வாறான நாசகார நடவடிக்கைகள் பொசுங்கிப் போய்விடும் என்பதே வரலாறு கற்பிக்கும் படிப்பினையாகும்.

தொடரும்...

சேரமான் எழுதாமல் விட்டது.

அனைத்துலக தொடர்பகத்தினை மீறி தமிழீழ விடுதலைக்கான செயற்பாட்டில் ஈடுபடுவதோ, விடுதலைப் புலிகள் ஏனைய பிரிவுகளின் பெயரில் செயற்படுவதோ, அல்லது தமிழ் அமைப்புக்களை தொடங்கி தமிழர் ஒற்றுமைக்காக உழைப்பதோ எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனினும் எம்மை மீறி, எமது உத்தரவுகளை மீறி மேற்கண்ட செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் தந்திரிகளின் மறுமுகம், ஈழமுரசு லீக்ஸ் எண்டு துரோகியாக்கப்பட்டு தமிழ் மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் நிலைக்கு இட்டுச் செல்வோம். அல்லது நீங்களாகவே மனமுடைந்து ஒதுங்கும் நிலையை ஏற்படுத்துவோம். அனைத்துலக தொடர்பகம் என்ற நெருப்பாற்றை மீறுவோர் அனைவரும் துரோகியாக்கப்பட்டு பொசுக்கப்படுவார்கள் என்பதே வரலாறு கற்பிக்கும் படிப்பினையாகும். (அதற்குச் சிறந்த உதாரணம் - உருத்திரகுமாரனும் நாடு கடந்த தமிழீழ அரசும்)

Edited by மின்னல்

இந்த சலசலப்புக்களும், போலிப்பரப்புரைகளும் அடங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.