Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதாபயவின் கஜபா படைப் பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்படுவதால் இராணுவ அதிகாரிகள் பலர் அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப் பிரிவிலுள்ள தமக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு மாத்திரம் விசேடமான கவனிப்புக்களை மேற்கொண்டுவரும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவின் கொள்கையானது பெரும்பாலான இராணுவ அதிகாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

இது இராணுவ அதிகாரிகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பெரும் காரணமாக உருவாகி வருவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோதாபய ராஜபக்ஸ இராணுவத்தில் பணியாற்றிய போது மிக நீண்டகாலமாக கஜபா படைப் பிரிவிலேயே பணியாற்றினார்.

இதன்காரணமாக அவர் தன்னுடன் பணியாற்றிய தனக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரம் இராணுவ நடைமுறைகளையும் மீறி பதவி உயர்வுகள், வெளிநாட்டு புலமைப் பரிசில்கள் மற்றும் வேறு சிறப்புரிமைகளை வழங்கி வருவதாக ஏனைய இராணுவ அதிகாரிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இந்த நிலையில், இராணுவத்தில் சிரே~;ட அதிகாரிகள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் மேஜர் ஜெனரல் ஜனக வல்கமவை புறந்தள்ளிவிட்டு மேஜர் ஜெனரல் உதய பெரேராவை அமெரிக்க பாதுகாப்பு கல்லூரியில் ஒரு வருட பாட நெறிக்காக அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளர் பரிந்துரை செய்துள்ளார்.

இராணுவத்தில் பணிக்கு சேர்க்கும் 16ஆவது இலக்கத்தின்படி தற்போதுள்ள 51ஆவது படைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாக ஜனக்க வல்கமவே உள்ளார்.

அமெரிக்காவில் புலமைப் பரிசிலுக்காக அனுப்பப்படவுள்ள இராணுவ அதிகாரியான உதய பெரேரா இரண்டாம் நிலை சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் கஜபா படைப்பிரிவில் பணியாற்றியவர்.

உதய பெரேரா தற்போது மலேசியாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக பணியாற்றுகிறார். அவர் அமெரிக்கா செல்லும் நிலையில், புதிய பிரதித் தூதுவராக தென் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் தவுலகல பெயரிடப்பட்டுள்ளார். அவரும் கஜபா படைப்பிரிவின் அதிகாரியாவார்.

இதனைத்தவிர, சீனாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் மகிந்த விஜேசூரிய கஜபா படைப்பிரிவின் அதிகாரி. அவருக்கு முன்னர் இந்தப் பதவியை வகித்த பிரிகேடியர் சாந்த திஸாநாயக்கவும் கஜபா படைப் பிரிவின் அதிகாரியாவார்.

அத்துடன், ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரக காரியாலங்களில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் என்பவரும் கஜபா படைப் பிரிவின் அதிகாரியாவார். அத்துடன், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் கஜபா படைப் பிரிவில் பணியாற்றியவர்.

இதனைத் தவிர, இந்தியப் பாதுகாப்புக் கல்லூரியில் புலமைப் பரிசில் பெற்றுச் சென்றுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சீன தேசிய பாதுகாப்புப் கல்லூரியில் பயிற்றுவரும் ஜகத் அல்விஸ் ஆகியோரும் கஜபா படைப் பிரிவின் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8313:2011-07-03-19-48-00&catid

கஜபாகு படை/ கோத்தா சம்பந்தப்பட்ட போர்குற்ற ஆதாரங்களை சனல் நாலுக்கு அனுப்பிவைத்தும் உங்கள் அதிரிப்தியை தெரிவிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.