Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வீடியோவுக்கு எதிராக பிரிட்டனில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் !தமிழர்கள் முறியடிப்பார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணப் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த பிரித்தானிய வாழ் இலங்கையர்கள் தீர்மானித்துள்ளனராம். இந்த ஆர்ப்பாட்டம் வருகின்ற 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை லண்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிலையத்துக்கு எதிராக நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதை பிரித்தானியாவிலுள்ள இலங்கையர் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையர் என்ற சொல்லைப் பயன்படுத்தி சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வது போன்றதொரு மாயையும் ஏற்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இவ்வார்ப்பாட்டத்தை அரசாங்கத்துக்குச் சார்பான சிங்களவர்களே முன்னெடுக்கிறார்கள். இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யும் நபர் ஒருவர். சனல் 4, பக்க சார்பான, தீங்குவிளைவிக்கக்கூடிய ஒரு பிரச்சாரத்தை இலங்கைக்கு எதிராக நடத்தி வருவதாகக் கூறியுள்ளார். அதோடு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஏராளமான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தாமாகவே முன்வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூவின மக்களும் கலந்துகொள்கிறார்கள் எனப் போலிப் பிரச்சாரத்தை இலங்கை அரசு முடிக்கிவிட்டுள்ளதை தமிழர்கள் உணரவேண்டும். இதனை நம்பி ஏமாரவேண்டாம் !

முக்கியமாக சிங்கள இனவாதிகளால் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டத்தை முறியடிக்கும் விதமாக அதே இடத்தில் தமிழர்கள் திரளாக அணிதிரண்டு சிங்கள இனவாதிகளால் சனல் 4க்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை முறியடித்து அவர்களின் பொய் பரப்புரையை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக்காட்டுவதோடு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக யாராவது சதி செய்ய முற்பட்டால் தமிழர்கள் அதை முறியடித்து சனல் 4 தொலைக்காட்சியின் நற்பெயரை என்றும் நிலைநிறுத்துவார்கள் என்பதை சனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் அணிதிரண்டு சிங்களவர்களின் பொய் பரப்புரையை முறியடிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8316:-4-------&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அநியாயத்துக்கு போரடப்போறான்,

நாங்கள் நியாயத்திற்காக நின்று போராட போகிறோம் எனது உறவுகளே வாருங்கள் சிங்களவனின் பொய் பரப்புரையை முறியடிப்போம்.

எம்மை பொறுத்தவரையில் நாம் சனல் நாலின் ஆதரத்தை வைத்து அரசியல் பலம் எமது விடுதலைக்கு சேர்ப்பதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்; சட்டரீதியாக சர்வதேச அளவில் தடைகளை போட முயலவேண்டும்.

சிங்களவர்களே இன்று பிளவுறும் நிலைமை அவர்களுக்குள்ளே தோன்றியுள்ளது. அம்சா அவர்கள் நடாத்திய அண்மைய கூட்டத்தில் இலண்டன் ஜே.வி.பி. பொறுப்பாளர் 'எங்கள் மக்களையே ( கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலை கொலை) கொல்லுகின் றீர்கள்?'; 'ஏன் பொன்சேகாவை அடைத்து வைத்துள்ளீர்கள்?' என கேட்டாராம். மேலும் சில சிங்களவர்கள் 'உண்மையான விசாரணை வேண்டும்' எனவும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் ஆர்ப்பாட்டத்தினால் எங்களுக்குத் தான் நன்மை. சிலவேளை சனல் 4 தொலைக்காட்சி 17ம் திகதி சிங்களத்தின் ஆர்ப்பாட்டத்தினைக் காட்டி மீண்டும் சிங்களத்தின் போர்க்குற்றங்களை செய்தியாக வெளியிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.