Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' : அவுஸ்ரேலியாவில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறது ஏபிசி தொலைக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 01:04 GMT ] [ கார்வண்ணன் ]

சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புகளைப் புறக்கணித்து அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘‘ ஆவணப்படத்தை நேற்று ஒளிபரப்பியுள்ளது.

ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நான்கு கோணங்கள் என்ற புலனாய்வு நிகழ்ச்சியிலேயே இந்த ஆணவப்படம் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் மீண்டும் இன்றிரவு 11.35 மணியளவில் ஏபிசி தொலைக்காட்சியின் முதலாவது அலைவரிசையில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஏபிசி நியூஸ் 24 அலைவரிசையிலும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது.

அத்துடன் ஏபிசி தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்கள் மட்டும பார்வையிடும் வகையில் தமது இணைத்தளத்திலும் வெளியிட்டுள்ளது.

ஏபிசி தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பாமல் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அது வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை அடுத்து அவுஸ்ரேலியாவில் சிறிலங்காவுக்கு எதிரான உணர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இந்தியாவில் எதிர்வரும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தியத் தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாவதைத் தடுக்கும் நகர்வுகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் புதுடெல்லியுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20110705104209

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் கொலைக்களம் என்றதினால் தான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்வது போல புதினப்பலகை செய்தி வெளியிட்டு இருக்கிறது. உண்மையில் ABC four Corner என்ற நிகழ்ச்சியில் தான் சிறிலங்காவின் கொலைக்களம் வந்தது. ABC four Corner திங்கள் 8.30, செவ்வாய் 11.35 ஏபிசி தொலைக்காட்சியின் முதலாவது அலைவரிசையிலும் சனி இரவு 8 மணிக்கு ஏபிசி நியூஸ் 24 அலைவரிசையிலும் ABC four Corner ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் ABC இணையத்திலும் ABC four Corner பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.