Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்?

Featured Replies

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்?

உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை

தமிழக மீனவர்களை, பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர். நேற்றும், 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம், விசாரித்து வருகின்றனர்.

கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269445

அப்படியெல்லாம் இருக்காது. இலங்கையுடன் பகைமையை வளர்க்கக் கூடாது. நட்புறவுடன் இருக்க வேண்டும். அதனால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது என்று சொல்வதற்காக இந்தியா வழி தேடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
.

இந்தியாவின் அடிவயிறு தான் பலவீனமானது, என்பதைச் சீனா பல காலத்திற்கு முன்னே அடையாளம் கண்டு, அதுவே இந்தியாவைத் துண்டாடுவதற்கும், இந்தியாவுக்குள் இலகுவாக நுழைவதற்குமான வழி எனத் தீர்மானித்துவிட்டது!

அதற்கான முனைப்புக்கள் தான் இந்தச் செயல்பாடுகள்!

இந்தியா விழித்தெளும்பும் போது, காலம் கடந்து போய் விடும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.