Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை _

Featured Replies

வீரகேசரி இணையம் 7/5/2011 10:28:58 AM

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும் முறை கடந்த சில மாதங்களாக அமுலில் இருந்தது.

இந்த நடைமுறை நேற்று முதல் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்வதைப்போன்று யாழ்ப்பாணத்துக்கும் செல்ல முடியும். ஒமந்தையில் அமைக்கப்பட்டுள்ள விசேட காவலரணில் விபரங்களை பதிவு செய்துவிட்டு இவர்கள் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை தொடரலாம் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும் நடைமுறையானயது நேற்று முதல் நீக்கப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சில் இந்த அனுமதி பெறுவதற்காக அமைக்கப்பட்ட அலுவலகமும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. யாழப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கு சென்றபோது அனுமதி பெறும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாக யாழ்ப்பாணத்துக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டை உடையவர்கள் பயணிக்க முடியுமென்றும் இங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டில் அவசர தேவைகள் நிமித்தமும் மற்றும் மரண வீடுகளுக்கு செல்வதற்கும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அவர்கள் இலங்கையராக இருந்தாலும் வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும் நிலை காணப்பட்டு வந்தது. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

வெளிநாட்டவர்களாக இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் பிறந்திருந்தால் இவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியினை பெறத்தேவையில்லை என்ற நடைமுறை முன்னர் இருந்தது. ஆனால் கடந்த இரு மாதத்துக்கு முன்னர் அத்தகையவர்களும் அனுமதி பெற்றே குடாநாட்டுக்கு செல்ல வேண்டுமென்ற நடைமுறை அமுலுக்கு வந்திருந்தது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு ஒருவர் விண்ணப்பித்தால் அனுமதி கிடைப்பதற்கு நான்கு தினங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்தனர். கொழும்பிலிருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டையுடையவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்லும்போது படையினரால் கடவுச்சீட்டும் கடவுச்சீட்டுடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியும் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறைக்கு தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தன. இந்த நிலையிலேயே நேற்று முதல் இந்த நடைமுறையானது நீக்கப்பட்டுள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32532

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்! இணைப்புக்கு கோமகன்!

எனது நண்பரொருவர் நாளை போகின்றார்! இந்த அனுமதிப் பத்திரத்தைப் பற்றி மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்!!!

அவருக்கு மிகவும் ஆறுதலான செய்து இது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.