Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழிப்பு இராணுவத்தை தத்து எடுக்கும் இந்தியா -தமிழ்நெற்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 8, 2011 / பகுதி: செய்தி /

இன அழிப்பு இராணுவத்தை தத்து எடுக்கும் இந்தியா -தமிழ்நெற்

சென்ற புதன், வியாழன், வெள்ளி நாட்களில் முதலாவது “இராணுவமும் இராணுவமும்” நேரடிப் பேச்சுக்கள் நடைபெற்றன. சிறிலங்கா, இந்தியா இராணுவப் பிரதிநிதிகள் அந்த நாட்களில் சந்திப்பை மேற்கொண்டனர். தங்கள் இராணுவப் பயிலகங்களில் கூடுதலான இராணுவப் போதனாசிரியர்களின் சேவையைப் பரிமாறிக் கொள்வதற்கு இரு பகுதியினரும் ஒத்துக்கொண்டனர்.

இந்திய ஊடகச் செய்திகளின்படி சிறிலங்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை “வெற்றிகரமாக” முடித்துள்ளபடியாலும் இந்தியா இன்னும் ஐம்மு – காஸ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதாலும் இரு பகுதி இராணுவத்தினரின் அனுபவப் பகிர்வு அவசியம் என்று உணரப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாகத் தனது இராணுவப் பயிலகங்கள், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் கூடுதல் இடங்களைச் சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியா ஒதுக்கவுள்ளது. இராணுவத் திறனை உயர்த்துவதோடு, ஆங்கில மொழித் தேர்ச்சி, மலையேற்றம், தூரஓட்டம் போன்ற உடற் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளது.

சிங்கள, தமிழ்ப் பொது மக்களின் அரசியல் புதுடில்லிக்கு எதிராக இருப்பதால் இராணுவ மற்றும் பொருளாதார வாயிலாக இரு நாடுகளையும் ஒன்றிணைப்புச் செய்யும் உத்தி கையாளப்படுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். முழுத் தீவையும் இந்தியாவுடன் இணைப்பதற்கு இது தான் பொருத்தமான உபாயம் என்று புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் சிந்திப்பதாக அதே அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்கூறிய இரு இராணுவத்தினரின் புதுடில்லிப் பேச்சுக்களில் சிறிலங்காவின் ஐவர் கொண்ட தூதுக் குழுவிற்கு இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் ஏச்.சி.பி குணத்திலக்கா தலைமை தாங்கினார். இந்திய இராணுவக் குழுத் தலைவராகச் சர்வதேச ஒத்துழைப்பிற்கான இராணுவ மையத்தின் மேலதிக பொது இயக்குநர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் செயற்பட்டார்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவம் அதை முழு அளவில் இராணுவமயப் படுத்துவதில் துரிதமாக ஈடுபடுகிறது. மக்கள் அடிபணியப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த மண்ணின் இன விகிதாசாரம் மாற்றப்பபடுகிறது. இன அழிப்பு நோக்குடன் அடையாளங்கள் அழிக்கப்படுககின்றன. இலங்கைத் தீவில் தமிழர் இருப்பை இல்லாமற் செய்வது தான் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.

இது மாத்திரமல்ல ராஜபக்ச ஆட்சியில் முழுத்தீவும் இராணுவ மயப்படுத்தப்படுவதால் ஒரு உருமாற்றம் செய்யப்பட்ட இராணுவ சர்வாதிகார அரசமைப்பு ஓசைபடாமல் உருவாகின்றது. “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக நாடு” என்று சிறிலங்காவை அழைத்த உலக நாடுகள் அதன் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.

அதே உலக நாடுகள் இப்போது இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசை அங்கீகரிப்பதோடு இராணுவத்தின் தலைமையுடன் நெருக்க உறவுகளை ஏற்படுத்த தமக்குள் போட்டியிடுகின்றன. தமக்குச் சாதகமான சூழலை இந்தக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவில் உருவாக்கும் நோக்கில் இதைச் செய்கின்றன.

சிறிலங்காவின் இன அழிப்பு இராணுவத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவை ராஜபக்ச கைது செய்வதற்கு இந்திய உளவுத் துறையினரின் ஆலோசனை தான் காரணமென்று கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று இந்திய உளவுத் துறையினர் எச்சரித்ததாகவும் அவை கூறுகின்றன.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாகக் கூறிய இந்திய உளவுத்துறை தனக்குரிய மக்கள் ஆதரவைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று பொன்சேகா பற்றிய எச்சரிக்கையை விடுத்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சிறிலங்கா இராணுவத்துடன் வைத்திருக்கும் “இராணுவமும் இராணுவமும்” நேரடி உறவுகளைப் போன்ற விசேட உறவுகளை இன்னும் ஒன்பது நாடுகளோடு இந்தியா வைத்திருக்கிறது. இது இந்தியாவுக்கான இலங்கை இராணுவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தப் போதுமானது. இது ஜனநாயகப் போர்வையுடன் இலங்கையில் ஏற்பட்ட இராணுவ ஆட்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவும் இடம்பெறுகிறது.

இலங்கைப் பிரச்சனைக்கு வெளிநாடுகள் வழங்கும் தீர்வுகளுக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் என்று கொழும்பு அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தீவைப் பொறுத்தளவில் இந்திய இராசதந்திரம் தோல்வியைச் சந்திப்பதாக அவர்கள் அனுபவரீதியாக உணர்ந்துள்ளனர்.

புதுடில்லியை சிங்களவர்களும் தமிழர்களும் எதிர்க்கின்றனர். இந்தியா முன்வைக்கும் அதிகாரப் பகிர்வு யோசனைகளை இரு பகுதியும் அல்லது ஒரு பகுதியாவது எதிர்ப்பது நிட்சயம்.

இதை நன்கு உணர்ந்த இந்தியா தனது செல்வாக்கை இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பத் தீர்மானித்துள்ளது. இராணுவக் கட்டமைப்பையும் பொருளாதார அம்சங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் போது தானாகவே அரசியல் ஒன்றிணைவு வரும் என்பது புதுடில்லியின் திட்டம்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக சர்வதேச மட்டத்தில் கண்டிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தை இந்தியா தத்து எடுத்துள்ளது. இப்படியான நகர்வுகள் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சனையைக் காணாமற் போகச் செய்யலாம் என்று இரு பகுதியும் எண்ணுகின்றனர்.

இன அழிப்பு நோக்குடன் சிறிலங்கா இராணுவம் புரிந்த போர்க் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தனது மக்களின் கோரிக்கைக்கு எதிராகச் செல்வதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய, சிறிலங்கா இராணுவங்கள் இரண்டுமே பாரதூரமான போர்க் குற்றங்களைச் செய்துள்ளன. இதனால் அவற்றிற்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இருப்பதில் வியப்பில்லை.

சிறிலங்கா இராணுவம் என்ற சொற்பிரயோகம் தவறானாது. சிறிலங்கா என்பது முழுத் தீவையும் குறிப்பிடும் பெயர்ச் சொல் என்று எண்ணுவீர்களானால் அதுகும் தவறானதே. முற்றிலும் சிங்கள இனத்தவர்களைக் கொண்ட இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று அழைப்பது மிகப் பொருத்தம்.

தமிழர் இராணுவத்தின் வெற்றிடத்திற்கு மேல் நின்று இப்போது இந்திய – சிங்கள இராணுவங்கள் பேசுகின்றன. அவர்களுடைய நட்பு, அனுபவப் பகிர்வு, பரஸ்பர வலுவூட்டல் என்பன இந்த வெற்றிடத்திற்கு மேல் கட்டியெழுப்பபடுகிறது. இவை ஒன்றும் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கும் போர்க் குற்றம் தொடர்பான சர்வதேசக் குற்றச்சாட்டுகளுக்கும் தீர்வாக அமைய மாட்டாது.

ஈழத்தமிழர் விடுதலைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூரம் மிக அதிகம் என்று ஒரு இந்தியப் பேச்சாளர் சொன்னார். காந்தியின் சாத்வீக முறையில் சுதந்திரம் பெற்ற நாடு இப்போது இராணுவ ஒன்றிணைவு பற்றிப்பேசி ஈழத் தமிழர்களின் விடுதலைக்குச் சவால் விடுகிறது.

தமிழாக்கம் க.வீமன்

http://www.pathivu.com/news/17301/57//d,article_full.aspx

இன்று எமது கையில் கிடைத்துள்ள 'சனல் நாலு' ஆவணப்படத்தை சரியாகப்பயன்படுத்தி, புது டெல்லியின் போக்கில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து, அதன் மூலம் சர்வதேச ஆதரவுடன் தாயக மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதன் மூலமே தற்போதைய இந்திய அரசியல் போக்கை மாற்ற உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இருநாட்டு இராணுவத்தினரும் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல பாலியல் கொலைகள் செய்வதில்

  • கருத்துக்கள உறவுகள்

இதை நன்கு உணர்ந்த இந்தியா தனது செல்வாக்கை இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பத் தீர்மானித்துள்ளது. இராணுவக் கட்டமைப்பையும் பொருளாதார அம்சங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் போது தானாகவே அரசியல் ஒன்றிணைவு வரும் என்பது புதுடில்லியின் திட்டம்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக சர்வதேச மட்டத்தில் கண்டிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தை இந்தியா தத்து எடுத்துள்ளது. இப்படியான நகர்வுகள் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சனையைக் காணாமற் போகச் செய்யலாம் என்று இரு பகுதியும் எண்ணுகின்றனர்.

இந்திய ஆட்சியாளர்கள் என்றும் நேர் வழியில் சிந்திப்பதில்லை, என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக் காட்டு!!

தங்களுக்கு மட்டும் மூளையுள்ளதாக சிந்திக்கும் ஒரு கூட்டம், விரைவில் கூழ்ப் பானையில் விழப் போவது மட்டும் உறுதி!!!

எங்களுக்கு பதவி ஆசை! கதிரை மேல் ஆசை! எங்களால் முடிந்தது துரோகத்தனம் மட்டுமே......ஆகவே நண்பர்களை எதிரியிடம் காட்டி கொடுப்பதே என் வேலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.