Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடில்லி மதில் மேல் பூனையாக இருக்க முடியாது!

Featured Replies

இலங்கை போர்க்குற்றங்கள்: புதுடில்லி மதில் மேல் பூனையாக இருக்க முடியாது! - ஜஸ்வந்த் சிங்

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மத்திய அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக வேலியின் மேல் அமர்ந்திருக்க முடியாது எனவும் அவர் ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சியில் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் நேற்று (08.07.11) ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, வன்னிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என இத்தொலைக்காட்சிக்கு கருத்து வழங்கிய பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் வற்புறுத்தியுள்ளார்.

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய காலக்கெடுவுக்குள் சர்வதேச நியமத்திற்கு ஏற்ற வகையில் சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் தொடர்புடையவர்களை நீதியின் முன்னிறுத்தாவிட்டால், சர்வதேச விசாரணைகளுக்கு அந்நாடு அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை என சிறிலங்கா படைத்தரப்பின் குரல்தரவல்ல அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இத்தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார். 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் போலியானது எனவும், இந்த ஆவணப்படம் வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அகிதிகளால் தயாரிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் புதுடில்லியின் அதிகார மட்டத்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாக இந்திய ஊடகமான Deccan Chronicle தெரிவித்துள்ளது. இந்த ஆவணப்படம் இந்திய மத்திய அரசின் பொறுப்புக் கூறல் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் இவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்கத்தைய நாடுகளும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும் இப்போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவதற்கும் உலக நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆவணப்படம் மத்திய அரசை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா படைத்தரப்பினருக்கு இந்தியா பாரிய உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படத்தை கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.

http://headlinestoday.intoday.in/site/headlines_today/programme/sri-lanka-war-crimes-on-tamils/1/144146.html

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={46923AC3-9D45-4BAA-9AF5-9EBDD9F2DB37}

-----------------------------------------------------------

ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம்- இந்தியாவில் முதல் முறையாக ஒளிபரப்பாகியது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88444

திட்டமில்லாத மதில்மேல் பூனையாக மட்டும் இருக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்து முடிக்கும் திருட்டு பூனையாகவுமல்லவா இருக்கிறார்கள். ஐ பி கே என்று வந்து அழித்து, முள்ளி வாய்க்காளில் அழித்து, இப்போது போர்க்குற்ற விசாரணையை முடக்குகிறார்கள். தங்களின் திருட்டை யாரும் காண்பதில்லை என்று நினைகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில், இந்த ஆவணப்படம் மத்திய அரசை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உங்க இஸ்டத்திற்கு ஏதாவது செய்வார்கள் என கனவுகாணப்படாது.. மற்றுபடி நெருக்கடி என்றபதம் ஓக்கே..

டிஸ்கி:

அவரவரை கூப்பிட்டு சமாதனபடுத்தவேணும் என்றால் எவ்வளவு பார்டி வைக்கோணும்? சரக்கு .. புரியாணி.. பைங்கிளிகள்.. இதெல்லாம் ஒட்டுமொத்தமாக வந்து அழுத்தினால் நெருக்கடி இருக்கத்தானே செய்யும்? :)

  • கருத்துக்கள உறவுகள்

cat.jpg

நாய்களுக்கும் பூனைகளுக்கும் செல்லபிராணியாக வளர்த்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன..

நாய்கள் உணவு அளிப்பவர் மீதும்... காவல் காக்கவும் ..பிரியப்படும் ...(ஒட்டுகுழுக்களை உதாரணமாக கொள்ளலாம்)

பூனைகள் பால் சோறு எல்லாம் எதுவும் தேவை இல்லை இருக்க இடம் கொடுத்தால் போதும்..( அவுஸ் ஓனர் மாறினாலும் அந்த இடத்திற்கே உரிமையாக வந்து கத்தும்)

சோ........... ஜச்வந்த் சிங் இலங்கை என்ற இடத்தினை அடக்கியாள முற்படும் இந்தியா பூனை என்று உவமை 100% சரி

சோ பூனையை வழிக்கு கொண்டுவர பூனைக்கு அறியாமல் ஓனரை(ஆட்சியாளர்கள்/ஆட்சி முறைமையை மாற்றுவதுதான் சரியாக இருக்கும் பூனையும் பழைய உரிமையுடன் கத்திவிட்டு போகும்

  • தொடங்கியவர்

மன்மோகன் சிங்கை பற்றி அண்மையில் வந்த கட்டுரை ஒன்றில் இவர் ஒரு 'பாசீவ்' தலைவர் ( எதாவது ஒன்று தலைக்கு மேலே பூனை பின்னரே முடிவுகள் எடுக்கும் தலைவர்) என குறிப்பிட்டு இருந்தனர். இது அலைகாற்று ஊழல் பற்றிய அவற்றின் 'இராஜினாமாக்களை' வைத்தே எழுதப்பட்டாலும் அவரின் ஆளும் அணுகுமுறையை காட்டுகின்றது.

அதேவேளை அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் இவர் வங்காளதேசம் மீது காட்டமான கருத்துக்களை தெரிவித்து இருந்தாராம். ஆனால் சிங்களத்தை பற்றி மூச்சே விடவில்லை.

அந்த வகையில் டெல்லி மீது தொடர் அழுத்தம் பிரயோகிக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கை பற்றி அண்மையில் வந்த கட்டுரை ஒன்றில் இவர் ஒரு 'பாசீவ்' தலைவர் ( எதாவது ஒன்று தலைக்கு மேலே பூனை பின்னரே முடிவுகள் எடுக்கும் தலைவர்) என குறிப்பிட்டு இருந்தனர். இது அலைகாற்று ஊழல் பற்றிய அவற்றின் 'இராஜினாமாக்களை' வைத்தே எழுதப்பட்டாலும் அவரின் ஆளும் அணுகுமுறையை காட்டுகின்றது.

அதேவேளை அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் இவர் வங்காளதேசம் மீது காட்டமான கருத்துக்களை தெரிவித்து இருந்தாராம். ஆனால் சிங்களத்தை பற்றி மூச்சே விடவில்லை.

அந்த வகையில் டெல்லி மீது தொடர் அழுத்தம் பிரயோகிக்கப்படல் வேண்டும்.

தோழர் அகூதா வந்தாலே ஒரே டமாஸ்தான் :D ஸ்கூலு பிள்ளை அவர்.. அவரு எங்கோ ராஜ்யசபா எம்பி தேர்தலில் நின்று கவுணும் டொப்பியும் போட்டு உலா வருகிறார்.. அவரை போய் பாசிவ் பூனை இதெல்லாம் டூமச்ச் ரிமொட்டு இப்போ கோகுல் காந்தியிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.. போக இவ்வளவு ஊழல் நடந்திருக்கு என்று முக்குக்கு முக்குக்கு அவனவன் உண்ணாவிரதம் இருக்கிறான்.இவன் அவனை கைகாட்டினால் அவன் இவன் நிர்வாகம் சரியில்லை வேறு ஒருவனை நியமிக்கறம் என்று சொல்லிபுடுவார்கள்.. மஞ்ச்ள் தண்ணி தெளித்து அறுக்கபட இருக்கும் ஆடுகளை சொல்லி குற்றம் இல்லை... :D ஆனால் ஓரளவுக்கு தான் சார்ந்த இன மக்களுக்கு (சிங்கு தாயோளிகள்) எஜமானரிடம் கைகாலில் விழுந்தாவது வாங்கி கொடுக்கிறார் மானங்கெட்ட சிங்கு அந்த விதத்தில் பாரட்டலாம்.. போக தமிழ் மந்திரிகளை எடுத்து கொள்ளுங்கள் . திமுக எங்க எவன்ட்ட சுருட்டலாம் என அலையும் கோஸ்டி.. போக நம்மட உள் துறை அமைச்சர் சிதம்பரம் என்ன பண்றார்? மலையாளிகளின் அட்டகாசத்தினை மத்திய அரசில் இருந்து ஒடுக்கிவிட்டாரம் .. தினமும் ஐபி ரா இன்னும் ஏதோ புதுசா உருவாக்கி இருக்கிறானக்ள் பெயர் தெரியவில்லை இவனுங்கள் எல்லாம் அன்றாடம் இவரிடம் பாதுகாப்பு குறித்து ரிப்போட் கொடுக்கவேணுமாம்! தமிழன் அனைவரையும் அடக்கி ஆளுகிறார் என்ற பீத்தல் வேறு! அதை தாங்கமுடியாமல் அனைவரும் செயல்படுகிறார்க்ள் என்ற பிதட்டல் வேறு.. இவனுக்கு பட்ஜெட்டே ஒழுங்காக போட தெரியாது என்பது வேறுகதை பிஏ பிஎல் படிச்சவென் எல்லாம் பட்சட் போட்டால் நாடு உருப்படுமா? அதிலும் இளைய காங்கிரஸ் எனும் பெயரில் கட்சி நடத்த்தி கொண்டு அனைத்து எம்.என்சி கம்பெனிகளுக்கும் எப்படி டேக்ஸை குறைக்கலாம் .. எப்படி வருமானவரி தவிர்க்கலாம் என ஆலோசனை வழங்கியவனுக்கு எப்படி நிதியமைச்சர் பதவி கொடுக்கலாம்..அவன் போகட்டும்..

டிஸ்கி:

பழகவேண்டிய....

பினாமி அரசியல்

தலைமுறை அரசியல்

உள்குத்து

வெளிகுத்து

இன்னும் பலது ஜன நாய்கத்தில் இருக்குதுங்கோ :D

  • தொடங்கியவர்

டிஸ்கி:

பழகவேண்டிய....

பினாமி அரசியல்

தலைமுறை அரசியல்

உள்குத்து

வெளிகுத்து

இன்னும் பலது ஜன நாய்கத்தில் இருக்குதுங்கோ :D

நன்றி புரட்சி. காலங்களுக்கு ஏற்ப மாறாத அரசியல் இறுதியில் தூக்கி எறியப்பட்டதே வரலாறு! இப்படியான அரசியல் குறுகிய இலாபம் மட்டுமே தருவன. இதை அண்மைக்காலமாக நடந்துவரும் 'அரபு நாட்டு நிகழ்வுகள்' (Arab Spring) தெளிவாக சொல்லுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புரட்சி. காலங்களுக்கு ஏற்ப மாறாத அரசியல் இறுதியில் தூக்கி எறியப்பட்டதே வரலாறு! இப்படியான அரசியல் குறுகிய இலாபம் மட்டுமே தருவன. இதை அண்மைக்காலமாக நடந்துவரும் 'அரபு நாட்டு நிகழ்வுகள்' (Arab Spring) தெளிவாக சொல்லுகின்றன.

பொருளாதார நிபுணர் தோழர் அகூதா அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.