Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பை பொறுப்புக்கூற வைக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை!

Featured Replies

கொழும்பை பொறுப்புக்கூற வைக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை! - Callum Macrae வலியுறுத்தல்!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக் கூறவைக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை என 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தின் இயக்குனர் Callum Macrae வலியுறுத்தியுள்ளார்.

இதனை உலக நாடுகள் செய்யத் தவறினால் இத்தகைய போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் உலக வரலாற்றில் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா - அது எந்த நாடாக இருந்தாலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக் கூறவைக்க வேண்டியது ஒவ்வொரு நாடுகளின் கடமையாகும். இல்லையேல் அது இலங்கையின் நிலையான சமாதானத்திற்கும், அபிவிருத்திக்கும் குந்தகத்தையே ஏற்படுத்தும்' என Callum Macrae ஊயடடரஅ ஆயஉசயந எச்சரித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் தொடர்பில் The Deplomat எனும் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்செவ்வியில் அவர் தெரிவித்த முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் வெளியிட்ட எச்சரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தீவிர கவனத்தில் எடுக்கும் என நான் நம்புகின்றேன்.

இப்போரின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுத்து, இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன்னிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவும், பிரித்தானியாவும் வலியுறுத்தியிருந்தன.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமானதும், சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையிலும் விசாரணைகளை முன்னெடுக்காது விட்டால் இவ்விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாது என இவ்விரு நாடுகளும் எச்சரித்திருந்தன.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை நம்பத்தகுந்ததும், காத்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.

அதேவேளை, இவ்விகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், இப்போரின் போது போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என தொடர்ச்சியாக கூறிவருகின்றது.

அதேபோன்று, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவும் இத்தகைய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. இவ்விசாரணைகளை முன்னெடுப்பதற்குரிய சர்வதேச நியமங்களை உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு கொண்டிருக்கவும் இல்லை.

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உண்மையாக விசாரணைகளை மேற்கொள்ள விருப்பம் கொண்டிருந்தால், இத்தகைய விசாரணைகளை அது என்றைக்கோ ஆரம்பித்திருக்க வேண்டும்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி கடந்த இரு வருடங்களாக வௌ;வேறு காணொளிக் காட்சிகளை ஆதாரங்களாக வெளியிட்டு வந்துள்ளது.

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நாம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு இக்காணொளிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நாம் ஏற்கெனவே கரிசனை கொண்டிருந்த காரணத்தினால் நாம் முன்னர் வெளியிட்ட காணொளிக் காட்சிகளையும், புதிய காணொளிக் காட்சிகளையும் இணைத்து இந்த ஆவணப்படத்தை தயாரித்தோம்.

இந்த ஆவணப்படம் மேற்கத்தைய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆனால் ஈராக்கில் பிரித்தானியப் படைத்தரப்பினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்தும் நானும், பலரும் இணைந்து ஆவணப்படத்தை தயாரித்திருக்கின்றோம். அவ்வகையில் இக்குற்றச்சாட்டை என்னால் ஏற்கமுடியாது.

எனது பணி என்னவென்றால், இத்தகைய போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே. இத்தகைய போர்க்குற்றங்கள் எங்கு இடம்பெறுகின்றதோ அல்லது இப்போர்க்குற்றங்களில் யார் ஈடுபட்டனரோ என்பது எனது பிரச்சினையில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சாட்சிகளற்ற போராக சிறிலங்கா அரசாங்கம் நடத்தி முடித்திருந்தது. போர் இடம்பெற்ற பகுதிகளில் ஏற்கெனவே பணியாற்றிய சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததைத் தொட்ந்து இந்நிறுவனங்களும் போர் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டன.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு சர்வதேச ஊடகவியலாளர்களோ, தொண்டு நிறுவனங்களோ அனுமதிக்கப்படவில்லை. உள்ளுர் ஊடகங்களும் போர் குறித்த சுயாதீனனமான செய்திகளை வெளியிட முடியாத நிலையில் அச்சுறுத்தல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இப்போரின் போது என்ன நடந்தது என்ற உண்மை வெளிவருவதற்கு இரு வருடங்கள் எடுத்துள்ளன.

இந்நிலையில், சிறிலங்கா படைத்தரப்பினர், தமிழர் அமைப்புகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து எமக்கு கிடைக்கப் பெற்ற காணொளிக் காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து புலமை வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்களின் உதவியுடன் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் இந்த ஆவணப்படத்தை தயாரித்தோம்.

சிறிலங்கா படைத்தரப்பினரைப் போல் போரில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடுரமான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்தும் நாம் இந்த ஆவணப்படத்தில் ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம்.

இப்போரின் போது இடம்பெற்ற மனிதப்படுகொலைகளைத் தடுப்பதற்கோ அல்லது போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி சர்வதேச போர் நியமங்களுக்கு உட்பட்ட வகையில் போரை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவதற்கோ ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீனமான

சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால் அத்தகைய பொறிமுறை ஒன்றை உறுவாக்குதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என பான் கீ மூன் கூறியுள்ளார். இதனை சிலர் மறுத்துள்ள போதிலும், பான் கீ மூன் கூறியது உண்மையானால் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் பாதுகாப்புப் பேரவை மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஊடாக இத்தகைய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை அந்நாடுகள் முன்வைக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த ஆவணப்படத்தை ஜெனிவாவிலும், நியூயோர்க்கிலும் காட்சிப்படுத்துவதற்கு சர்வதேச மன்னிப்புச் சபையும், மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தன. இந்த ஆவணப்படம் சர்வதேச ரீதியில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் பிரதியொன்று பான் கீ மூனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்த ஆவணப்படத்தை இதுவரை பார்க்கவில்லை என்பது ஆச்சரியமாகவும், சிறிது அதிர்ச்சியாகவும் இருக்கின்றது' என The Deplomatஎனும் ஊடகத்திற்கு Callum Macrae வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={C772A4A3-0613-4ECE-A6C5-26DBBA731566}

  • தொடங்கியவர்

முடிந்தால் முகநூல்கள் / குறுஞ்செய்திகளில் இணைத்துவிடுங்கள்

http://the-diplomat.com/2011/07/11/sri-lankas-killing-fields/

‘Sri Lanka’s Killing Fields’

The Diplomat speaks with Callum Macrae, director of 'Sri Lanka's Killing Fields,' about his documentary film and the controversy surrounding it.

In May, the UN Panel of Experts set up to investigate allegations of war crimes during the final weeks of the Sri Lankan civil war in 2009 reported ‘credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian law and international rights law was committed both by the government of Sri Lanka and the LTTE.’

Last month, British TV station Channel 4, aired the documentary ‘Sri Lanka’s Killing Fields’, which included graphic footage of alleged war crimes and crimes against humanity. The British Foreign Office Minister expressed shock at the film’s content, but the Sri Lankan High Commission in London stated that the film was ‘driven by a political agenda against Sri Lanka.’ The Diplomat’s Stewart Watters speaks with the documentary’s director, Callum Macrae, to hear his take on the controversy.

What was your personal motivation to direct this film? Why Sri Lanka, and why now?

Channel 4 has been reporting on this throughout the past two years and the documentary Sri Lanka’s Killing Fields represents the culmination of all that. Although the release comes not long after the Panel of Experts’ report was published, that was a coincidence and we were clearly researching at the same time. However, I think it’s significant that we both reached virtually identical conclusions.

Interestingly enough this does tie directly into one of the complaints that have been made against the film. It’s been portrayed in Sri Lanka as a kind of strange Western agenda against this developing country. The reality is that I’ve made quite a few films which relate to extrajudicial executions and torture and in fact the last two major films I made dealt with allegations against British troops in Iraq. So the idea that this film is pursuing a Western agenda is wrong. My job is to investigate the facts and get to the truth of what happened and tell the story, whether or not those crimes were committed by the Sri Lankan government, the Tamil Tigers (LTTE) or the United Kingdom.

Mobile phone footage by soldiers, LTTE guerrillas and civilians forms a critical element of the film. What is the significance of this ability to visually document the final chaotic days of a conflict?

Well the irony of this war is that the Sri Lankan government went to such efforts to ensure no-one from outside witnessed or was able to report on the final part of the conflict. The United Nations and international observers were left with little option but to get out when the Sri Lankan government claimed they could no longer guarantee their safety.

International media was forbidden entry, and in Sri Lanka itself the domestic media was brutally suppressed. Sri Lanka is, by some measures, the fourth most dangerous place in the world to be a journalist and it’s certainly true that anti-government critics have found themselves expelled, forced into exile or murdered by forces unknown. So I believe the hope was that this war could be fought in secret and it has effectively taken two years for this information to come out.

Footage originated from a variety of sources; civilians, LTTE cameramen and footage shot by soldiers as ‘trophy footage’ as they committed war crimes such as summary executions and the abuse of bodies. One of the reasons I believe this footage has emerged is that there are many people of conscience within the Sri Lanka military and they are extremely unhappy and deeply ashamed by some of the actions documented by the footage. The footage has been extensively analysed by a number of independent experts both for the United Nations and Channel 4, and they all agree that there is no reason to believe it’s anything other than genuine footage depicting genuine executions.

http://the-diplomat.com/2011/07/11/sri-lankas-killing-fields/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது. இவன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றினால் பின்னால் வருபவனும் செய்து கொண்டுதான் இருப்பான்.. . போக ஈழ சொந்தங்கள் இந்த திமுக அதிமுக போல ஏதாவது செய்வார்கள் (ஐக்கிய தேசிய கட்ட்சிvsசுந்திரகட்சி )என கூடி கூடி கும்மியடிக்கபடாது ..பொன்சேகாவை கைகாட்டிவிட்டு தப்பித்து கொள்ளுவான் ..பொன் சேகா தற்போத நிலையில் பாலும் தேனும் ஓடவைக்ககூடிய தீர்வு பொதி தன்னிடம் உள்ளது என்று புளுகுவான்(அது என்ன பொதியோ யாம் அறியோன் பராபரமே இது கழுதை சுமப்பதைவிட பெரிய பொதியாக இருக்கும் போல கிடக்கு).....போர்குற்றத்தின் ஊடாக பின்வருவனவற்றையும் வலியுறத்தவேண்டும்..

போர்குற்றம் இரண்டாம் பட்சம் அதோனோடு இணைந்த பெறுபேறுங்கள் முதலாம் பட்சம்..

1.சிங்களவனோடு சேர்ந்து வாழ இயலாது

2. நிகழ்ந்த போர்குற்றங்களின் அடிப்படையில் .. தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்தபட்ச வேறு ஒரு கனடா போன்ற நாடுகளின் முறைமையை நிவாரணமாக கோருதல்..(மொள்ளமாறி கிந்திய 13 சட்டதிருத்தம் அல்ல)என்ன தேவை என்று யாருக்குமே தெரியாமல் கூடி கும்மியடிக்க கூடாது அல்லவா?

3.அவ்வாறு சர்வதேச அழுத்தத்தினை ஒத்து கொண்டு அமைக்கும் சிங்களத்தின் தெரிவுக்குழு புல்ராசு குழு புளாசுளாக்கி குழு அண்டார்டிக்கிக்கா குழு ஆகியவற்றின் குழுக்ககளுக்கின் திசிஸ் ரிப்போட்(அறிக்கை) சமர்பிக்கவேண்டிய குறைந்த பட்ச கால எல்லைகள் ச்ர்வதேசத்துடனாக இறுதி செய்யபடவேண்டும்(இல்லையென்றால் உலகம் அழியும் வரை ஜவ்வு மாறி இழுத்து விடும் டெக்னிக்ஸ்களும் சிங்களவரிடம் உண்டு)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.