Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் பதுங்கி வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு

Featured Replies

[ புதன்கிழமை, 13 யூலை 2011, 03:45.49 AM GMT ]

கிழக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத தொகுதியொன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.36 ரீ56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால் இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள், விமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

வாகரைப் பிரதேசத்தில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த பகுதியில் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

மிகவும் பாதுகாப்பான முறையில் மீள பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அண்மையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்ப ஆயுதக் கும்பல் இந்த ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/view.php?226IB5302tjQC4e3UGpfcb2992Mdd3E293bc07pG4e4eWQjc02bBLGd2

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு,வாகரையில் ஏவுகணைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் படையினரால் மீட்பு

[Wednesday, 2011-07-13 09:50:09]

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்றுத் தேடுதல் நடத்திய இராணுவத்தினர் அற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

ரி-56 ரக துப்பாக்கிகள் 35, ஆர்.பி.ஜி. -15 மற்றும் ஏனைய வகையான ஆயுதங்கள் 17 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை 233 ஆவது படையணியின் தளபதி தெரிவித்தார்.

கிழக்குமாகாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தலைமையிலான படையினரே இந்த ஆயுதங்களை படையினர் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46403&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

படைஅதிகாரிகளை அதிர வைத்த பாரிய ஆயுதப்புதையல் – மோட்டார்கள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளும் சிக்கின

[ புதன்கிழமை, 13 யூலை 2011, 01:28 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ]

மட்டக்களப்பு வாகரைக் காட்டுப் பகுதியில் பாரிய ஆயுதக்களஞ்சியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் படைகளின் தலைமையக தலைமைப் புலனாய்வு அதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து கட்டுமுறிவுக்குளம் காட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பேரேராவின் நெறிப்படுத்தலில் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ரி-56 துப்பாக்கிகள்- 36, ஆர்பிஜி உந்துகணை செலுத்திகள்-07, 12.7 மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள்-07, எல்.எம்.ஜி துப்பாக்கிகள்- 05, எஸ்.எம்.ஜி துப்பாக்கிகள்- 02, எம்.பி.எம்.ஜி துப்பாக்கிள்-03, 81மி.மீ மற்றும் 60 மி.மீ மோட்டார்கள் -03 ஆகியனவே இந்தத் தேடுதலில் மீட்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் மிகவும் கவனமாக பொலித்தீன் பைகளினால் சுற்றப்பட்டு பிளாஸ்ரிக் பரல்களில் போட்டுப் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுவொன்றே இந்த ஆயுதங்களை மறைத்து வைத்திருந்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குப் படைத் தளபதி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேரா அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக் குழுவே, தமது ஆயுதங்களை புதைத்து வைத்து விட்டு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

http://www.puthinappalakai.com/view.php?20110713104269

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.