Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல்களை மறிக்க இந்தோனேசியா சர்வதேச கடல் பொலிஸ்காரன் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல்களை மறிக்க இந்தோனேசியா சர்வதேச கடல் பொலிஸ்காரன் அல்ல

Wednesday, July 13, 2011, 12:43உலகம், சிறீலங்கா

அகதிகள் அந்தஸ்துக் கோரிச் செல்வோரின் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதில் இந்தோனேஷியாவின் நடவடிக்கைகள் தெளிவில்லாமல் உள்ளதாக கனடா அவுஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. இது ஒரு துரதிர்ஷ்டவசமான விடயம் எனவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான அகதிக் கப்பல்கள் கடந்த காலங்களில் அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கே சென்றுள்ளதாகவும் நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இந்தோனேஷியா, சர்வதேசக் கடல் பொலிஸ்காரன் போன்று செயற்படுவதுவதாகவும் அந்த வேலை அவர்களுக்குரியது அல்ல என்ற கருத்துப்படவே இந்த நாடுகள் இவ்வாறு தெரிவித்துள்ளன என்று ராஜதந்திரிகள் கூறுகின்றர்.

இது இவ்வாறிருக்க, அலிசியா கப்பலில் வந்த ஈழத்தமிழ் அகதிகள் கனாடாவை நோக்கியே வரத் திட்டமிட்டிருந்தனர் என கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் அகதி அந்தஸ்து கோரும் இலகுவான இலக்காக கனடா காணப்படுவதாகவும் இந்நிலையில் குறித்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்தவர்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளா.

http://www.tamilthai.com/?p=21643

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வரவிரும்பும் சொந்தங்கள், கப்பல் தவிர்த்து மாற்றுவழியைப் பின்பற்றுவதே அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்திற்கு ஏற்றனவாக இருப்பதோடு, கனடா அரசு கொண்டிருக்கின்ற கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவராது இருக்க உதவக்கூடும்.கப்பல் வருகைகளின் பின்னர் கனடா அரசு எம் மீது கொண்டிருக்கின்ற அனுதாப உணர்வினைக் குறைத்துக் கொண்டுள்ளது போலத் தோன்றுகின்றது. இதை ஒரு ஆள்கடத்தல் வியாபரமாகவே பார்க்கின்றது.

முன்பு சம்பிர்தாய விசாரணை என்று நீதிமன்றில் 5 நிமிடங்களில் அனுமதிக்ப்பட்ட வதிவிட உரிமை, இன்று முழு நேர விசாரணையாக அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. அப்படி விசாரணை முடிந்த பின்னரும், உடனே முடிவுகள் தெரிவிக்கப்படதாத ஒரு நிலையையே காணப்படுகின்றது. ஆயினும் ஒரு தனிநபராக கனடாவினுள் நுழைபவர்களுக்கு ஓரளவான இலகுவான வதிவிட உரிமை கிடைக்கின்றது. ஆனால் இன்றுவரை கப்பலில் வந்த இரண்டு பிரிவினருக்கும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைக் கனடா அரசு தரவில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக எவ்வித கருத்தையும் கனடா அரசு தரவில்லை.

ஏஜேன்சிமார் இலகுவான பயணம் என்று உங்களை ஏமாற்றிக் காசு சம்பாதிக்க இவ்வழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இங்கு இறங்கிய பின்னர் எதிர்காலம் பற்றி உங்களுக்கு எவ்வித கருத்தையும் அவர்கள் சொல்லிவிடுவதுமில்லை. உங்களுக்கு வேறு, வேறான வழிகள் இருப்பது தெரியும். அதைப் பாவித்தே இத்தனை காலமும் மக்கள் வந்தார்கள். அந்த வழியைப் பாவிப்பதே உங்களின் எதிர்காலத்திற்கு நன்று.

ஒரு குழுவாக வருகின்றபோது, அது ஏதோ அமைப்பின் சார்பு உறுப்பினர்களாகவே சந்தேகிக்கப்படுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

தவிர, சென்ற முறை தாய்லாந்தில் தங்கியிருந்த மக்கள் பிடிபட்டு சிறிலங்காவிற்கு நாடுகடத்தப்பட்டமைக்கு 2ம் கப்பலில் வந்தவர்கள் கொடுத்த தகவல்களும் காரணமாக அமைந்தன என்பதுடன், அவ்வாறன செயலில் எனி வருபவர்கள் வந்து செய்வதைத் தவிர்ப்பீர்ககள் என்ற நம்பிக்கையுடன்.

சென்ற 2 கப்பல்களில் வந்தவர்களில் முதலாவது கப்பலில் வந்தவர் ஓட்டிகள் மற்றும்கள், தொழில்நுட்பவியளார்கள் ஒரு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டர்கள்.

இன்னமும் ஒரு தொகை மக்கள் (2ம் கப்பல்) வந்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

வதிவிட விசாரணைக்கு 2 வருடங்களாகியும் அழைக்கப்படவில்லை.

கப்பல்களிவல் வருபவர்கள் தொடர்பாக கனடா அரசு கொண்டு வரமுயலும் சட்டவரைவாக்கலின் படி, 14 வருடங்களுக்குக் குடும்பத்தினரை அழைக்க முடியாது. உற்பட்ட சில கடுமையான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

இது இன்றல்ல 80 பதின் கடைசியில் ஜேர்மனியில் இருந்து கப்பலில் சென்றவர்களுக்கும் இப்படித்தான் விசாரணைகள் நடைபெற்று சிலருக்கு 7 வருடங்களுக்கு பின்தான் நிரந்தர வதிவிடஉரிமை கொடுத்தார்கள். இது தமது கடல் எல்லையை யாரோ உடறுப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள் போலும்.

ஐ.நா வில் பதிந்து அகதிகளாக உள்ளவர்களை, மற்றும் ஐந்து குடும்பங்கள் சேர்ந்தும் 'ஸ்பொன்சர்' பண்ணி கூப்பிடலாம் கனடாவுக்கு.

கனடாவுக்கு முதலில் தமிழர்கள் அகதிகளாக கப்பலில் வந்தபொழுது, ( பதினைந்து + ஆண்டுகளுக்கு முன்னர்) , அவர்களை வரவேற்றது கனடா. அப்பொழுதும் வலதுகார கட்சியே இருந்தது. அப்படியானால் என்ன நடந்தது?

அதிகளவில் தமிழர்கள் வந்து 'ஒற்றுமையாக பொருளாதார ரீதியில் முன்னேறுவது' ;

கனடாவின் (மேற்குலகின்) ஒட்டுமொத்த நலிந்த பொருளாதார நிலைமை;

பயங்கரவாதிகள் என்ற முத்திரை;

என்பன காரணங்களாக இருக்கலாம் .

ஆனால்,கனேடிய பிரசைகளான தமிழர்கள் அதிகளவில் அரசியல் அழுத்தம் கொடுத்தால் இந்த நிலைமையை மாற்றலாம். கனேடிய யூதர்கள் போல பொருளாதாரத்தில் முன்னேறி அதையே அரசியல் அழுத்தமாக்கல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.