Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ், ஜோசப் பரராசசிங்கம் ஆகியோரை பயங்கரவாதிகளே கொன்றனராம்! அடித்துக் கூறும் ரிசாத்.. சாந்த புஞ்சி ஹேவாவை தேடுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ், ஜோசப் பரராசசிங்கம் ஆகியோரை பயங்கரவாதிகளே கொன்றனராம்! அடித்துக் கூறும் ரிசாத்.. சாந்த புஞ்சி ஹேவாவை தேடுகிறார்.

[Thursday, 2011-07-14 21:43:23]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களான ரவிராஜ்,ஜோசப் பரராஜ சிங்கம் ஆகியோரை பயங்கரவாதிகளே படுகொலை செய்ததாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்த புஞ்சி ஹேவா மீதான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,சாந்த புஞ்சிஹேவா வன்னி மாவட்ட மக்களுக்கு ஆற்றிய சேவைகளை யாரும் மறந்து விடமுடியாது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் பல பணிகளை முன்னெடுத்தார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் தங்கியுள்ள நிலையில் அவர்களை அடிக்கடி வந்து பார்வையிட்டு தன்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்தார். அவர் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபாடு பார்க்கவில்லை. மக்கள் சேவகனான சாந்த புஞ்சிஹேவா அனுராத புரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலேயே உயிரிழந்தார்.

இவர் மட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ, அரசியல் தலைவர்களான காமானி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி, அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, த.மு. தஸநாயக்க தமிழ்த் கூட்டமைப்பு எம்.பிக்களான ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம் போன்றவர்கள் கூட பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டனர்.

இன்று அந்தக் கொடிய பயங்கரவாதம் அழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியான சுதந்திரமான வாழ்வை அனுபவிக்கின்றனர். இவ்வாறான தொரு சிறந்த சூழ்நிலையில் சாந்த புஞ்சி ஹேவா இல்லை என்பதே எமக்குள்ள பெரிய கவலை என விழித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46496&category=TamilNews&language=tamil

Edited by தமிழ் அரசு

ரவிராஜ், ஜோசப் பரராசசிங்கம் ஆகியோரை பயங்கரவாதிகளே கொன்றனராம்! அடித்துக் கூறும் ரிசாத்.

[Thursday, 2011-07-14 21:43:23]

http://www.seithy.com/breifNews.php?newsID=46496&category=TamilNews&language=tamil

அந்த பயங்கரவாதி ரிசாத்தின் தோழமை அமைச்சர் தானே.

சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்துள்ள கைகூலிகள் தான் இருவரையும் கொன்றார்கள்.

சிங்கள ஐ. தே. க. பயங்கரவாதிகளுடன் இணைந்திருந்து தமிழர் உரிமைகளைப் பேச முயன்ற மகேஸ்வரனையும் கொன்றது உந்த கொலைகாரக் கும்பல் தான்.

இதை சொல்லும் ரிசாத் உம் ஒரு பயங்கரவாதியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.