Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா விவகாரம் குறித்து மன்மோகனுடன் பேசுவார் ஹிலாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா விவகாரம் குறித்து மன்மோகனுடன் பேசுவார் ஹிலாரி

[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 11:02 GMT ] [ கார்வண்ணன் ]

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை புதுடெல்லி செல்லவுள்ள ஹிலாரி கிளின்ரன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.

இதன்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் மட்டுமன்றி சிறிலங்கா விவகாரம் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மறுநாள் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலி தீவு செல்லும் வழியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சென்னைக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் சிறிலங்கா விவகாரம் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காங்கிரஸ் வளாகத்தில் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் கருத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

அதேவேளை இந்தியாவும் இதுபற்றி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று முதல்முறையாக கூறியுள்ளது.

எனவே, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலரும், இந்தியப் பிரதமரும் கலந்துரையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20110717104298

Edited by தமிழ் அரசு

மதிப்புக்குரிய ஜெ. ஜெயலலிதா

முதலமைச்சர்

தமிழ்நாடு.

மதிப்புக்குரிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு,

முதல்கண் தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பாகிய நாங்கள், ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் கரிசனையுடன் வெளியிட்ட தீர்க்கமான கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள்; எல்லாவற்றுக்கும் எமது உளமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, எமக்காக குரல் கொடுத்ததன் மூலம் உலகத்தமிழர்களின் தலைவியாக பார்க்கப்படுகின்றீர்hகள்.

உங்களுக்கு தெரியும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் திருமதி ஹிலாரி கிளிங்டன் அவர்கள் சென்னைக்கு வரவிருக்கின்றார் என்று. அவர் உங்களை சந்திக்கும்போது, நீங்கள் சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானமும் அதன் முக்கியத்துவம் பற்றியும்பேசுவதோடு, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றியும் அதனை உடனே நடைமுறைப்படுத்தும் படியும் வேண்டிக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் இலங்கை இனப்பிரச்சனையினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, தற்போது சுதந்திரம் பெற்ற தென் சூடானில் நடைபெற்றது போன்று ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அதில் தமிழ் மக்கள் விரும்புகின்வாறு தீர்வை பெற்றுத்தர உதவும் படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி

உண்மையுள்ள

தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு.

---------------------------------------------------------------

ஒரு ஆக்கபூர்வமான செயல்பாட்டை உலகத்தமிழர்கள் எதிர்பார்கின்றனர். இந்த பேச்சுக்கள் வெறும் கண்துடைப்பாக இருக்காமல், தமிழீழ மக்களின் துன்பியல் வாழ்வில் ஒரு நல்ல தீர்வை கொண்டுவரல் வேண்டும்.

அதேவேளை உலகத்தமிழர்கள் இந்திய, அமெரிக்க தலைவர்கள் உள்பட்ட முக்கிய தலைமைகள் ஊடாக பரப்புரைகள், அரசியல் தொடர்புகளை தொடர்ந்தும் ஏற்படுத்தி எமது பக்க தேவைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

Edited by akootha

கிட்டத்தட்ட முன்னூறு பில்லியன்கள் ( 300 B USD) அமெரிக்க டாலர்களை அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில், அதுவும் பாகிஸ்தானின் அணுஆய்தம் காரணமாக தென்னிந்தியாவில், முதலீடு செய்துள்ளன.

இதனால் தமிழ்நாடும் கூட அமெரிக்க பார்வையில் தனக்கு இலாபம் தரும் மாநிலமாக பார்க்கப்படுகின்றது. அதனால் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தரும். அதை தமிழக, உலகத்தமிழர்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.