Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அதீத அதிகாரம், நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகள் மிக குறைவு : சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

Featured Replies

[ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 05:55.00 PM GMT ]

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடினமாகிக்கொண்டிருப்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளதுதமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து இரண்டு வருடங்களாகியும் இலங்கையின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நல்லிணக்கததுக்கான நடவடிக்கைகளில் தாமதம் காட்டிவருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் மீண்டும் முறுகல் நிலை தோன்றி வருகிறது.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்களுக்கான உரிய தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் பாரிய துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையின் பங்காளி நாடுகளான இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்றவை இலங்கைக்கு கடுந்தொனியுடனான வலியுறுத்தலை விடுக்க வேண்டும்.

அத்துடன், வெளிப்படையாக வடக்குக் கிழக்கில் பொதுநிர்வாகத்தை ஏற்படுத்துவதுடன் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கோரியுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறையில் அளவுக்கு அதிகமான அதிகாரங்களை கொண்டிருக்கிறார். அவரின் சகோதரர்களும் அதிகளவான அதிகாரங்களை கொண்டிருக்கிறார்கள்.

அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டங்கள் இன்னும் அமுலில் உள்ளன.

இந்தநிலையில் ஜனாதிபதியினால் நல்லிணக்கத்துக்காக அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் மத்தியில் நம்பிக்கையை வெல்லவில்லை. அந்தக்குழு இறுதியில் அதிகாரமற்ற ஆணைக்குழுவாகவே அமைந்துள்ளது.

போரின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக வடக்கு கிழக்கில் பல குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு பரிந்துரைகளை செய்திருக்கிறது.

உடனடியாக சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும்.

அவசரகால சட்டம்; பயங்கரவாத தடைச்சட்டம் என்பவற்றை நீக்க வேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

போரின் போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

போரில் மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்து மீளத் திரும்பிய மக்களுக்கு முழுமையான நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

இராணுத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு நட்டுஈடுகள் வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்களின் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகள் நிறுததப்பட வேண்டும்.

தமிழ்ப்பெண்களுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இறுதித் தீர்வின் போது முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் உட்பட்ட பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்.

இதேவேளை இலங்கையின் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன இலங்கையில் நல்லிணக்கத்துக்காக ஊக்கத்தை அளிக்க வேண்டும்.

அத்துடன் வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்த சர்வதேச விசாரணையை இந்த நாடுகளும் அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும்.

போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை இணங்கும் வரை, அது நடைமுறைப்படுத்தப்படும் வரை இலங்கைக்கு இராணுவ உதவிகளை குறித்த நாடுகள் நிறுத்த வேண்டும்.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் அபிவிருத்தி பங்காளிகளும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கான நிதியுதவிகளை கண்காணிக்க வேண்டும்.

அத்துடன் வடக்கு கிழக்கை புனரமைப்பு செய்வதில் இலங்கை அரசாங்கம் தமது சொந்த நிதியை செலவிடுவதற்கு குறித்த அமைப்புகளும் நாடுகளும் வலியுறுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகளும் அதன் உறுப்பு நாடுகளும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப உரிய செயற்பாடுகளுக்கு இலங்கையை முன் நகர்த்தி செல்ல வேண்டும்.

போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை இணங்கும் வரை அதன் படையினரை ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படைகளில் இணைக்கக்கூடாது.

தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைத்தமை தொடர்பிலும் இலங்கைப் படையினர் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்தவர்களின் சுதந்திர நடமாட்டம், காணாமல் போனோர் தொடர்பில் உண்மையான நிலைமையை வெளிக்கொணர்தல் உட்பட்ட மனிதாபிமான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

இதற்கிடையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்துக்கு உதவவேண்டும்.

அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் சர்வதேச பொறிமுறைக்கு உதவ வேண்டும்.

சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக வன்முறைகளை தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட செய்ய வேண்டும் போன்ற பரிந்துரைகளை சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு செய்துள்ளது.

http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI34eE29303jQUdd3QjP20j923e4GLBcb2pGu2

இந்த அறிக்கையின் முழு வடிவம் இங்கே: http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/209%20Reconciliation%20in%20Sri%20Lanka%20-%20Harder%20than%20Ever.pdf

-- இதை நாம்i தெரிந்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித ஆர்வலர்கள் .. போன்றவர்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.

-- உங்கள் முகநூல்/குருன்ச்செய்தியில் இணைத்துவிடலாம்

இதனுடன்,

ஐ.நா அறிக்கை : www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

சனல் நாலு : http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields

இவற்றையும் சேர்த்து தரலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.