Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த வெற்றிக்கு உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பதில் இலங்கை கவலைப்படவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த வெற்றிக்கு உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பதில் இலங்கை கவலைப்படவில்லை

கேணல் ஹரிகரன்

யுத்தத்தில் வெற்றிகொள்ள உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பது குறித்து இலங்கை கவலைப்படவில்லை என்று கேணல் ஆர்.ஹரிகரன் கூறியுள்ளார்.

இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவர் கேணல் ஹரிகரன். ட்ரான்ஸ்கரண்ஸ் இணையத்தளத்தில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு கேணல் ஹரிகரன் பதிலளித்துள்ளார்.ஆர்வமான சில கேள்விகளை வாசகர் எழுப்பியிருந்தார். நிந்தனையான வார்த்தைப் பிரயோகங்களுக்கு நான் வழமையாக்கப்பட்டிருந்தேன். (இந்தியா தொடர்பாகக் கலந்துரையாடும்போது பிரியமானவர்களாக இலங்கையர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.) எவ்வாறாயினும் நாகரிகமான முறையில் வாசகர் கேள்விகளை எழுப்பியிருந்தார். நான் அவற்றுக்குப் பதில் கூறுகிறேன் என்று கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

எழுப்பப்பட்ட கேள்விகளும் ஹரிகரன் பதில்களும் வருமாறு:

கேள்வி: உலகளாவிய ரீதியில் இராணுவப் படைகள் நேர்மையான யுத்தங்களை நடத்துகின்றன என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவ்வாறாயின் அந்தப் படைகள் பற்றிக் குறிப்பிடுங்கள். தற்போதைய நிலைமையில் எந்தவொரு யுத்தமாயினும் நேர்மையானதாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: எனது 28 வருட தொழிலில் நான் பாரிய யுத்தங்கள் மற்றும் சிறிய யுத்தங்கள் பலவற்றில் பங்குபற்றியுள்ளேன். நேர்மையான யுத்தங்கள் இல்லை என்பதே எனது பதிலாகும். அவை ஒருபோதுமே நேர்மையானதாக இருக்கமாட்டாது, நேர்மையானதாகவும் அமையாது. ஏனென்றால் அடிப்படையில் இராணுவத்தின் தொழில் கொல்லுதல், பொருள் வளங்களை அழித்தல் என்பதாகும். ஆதலால் அந்த மாதிரியான விடயங்கள் யுத்தத்தின் பாதிப்பிலிருந்தும் விடுபட்டவையாகவே அமையும். ஆனால், அரசாங்கங்களினதும் இராணுவங்களினதும் முயற்சியானது நாகரிகமானதாக இருக்க வேண்டும். தமது தீமையான செயல்பாடுகள் குறித்து தாங்கள் பதிலளிக்கும் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதை ஜனநாயக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும். யுத்தத்தின்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும்போது குற்றவாளிகளைத் தண்டிக்கும்போது தமது நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளிக்கும் தன்மையைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

கேள்வி: யுத்தத்தின்போது படையினரின் இலக்குகள் என்ன? உங்கள் பகைவரை அழிப்பதன் மூலம் பலவீனமாக்குவதா அல்லது பகைவரின் வளங்களை அழிப்பதன் மூலம் பலவீனமாக்குவதா? அல்லது மனித வளங்கள் மற்றும் பொருட்கள், உள்சார்கட்டமைப்பை பலவீனமாக்குவதா? இதன் மூலம் நீண்டகாலத்துக்கு இராணுவ அச்சுறுத்தல் பகைவரிடமிருந்து ஏற்பட முடியாதவாறு பலவீனப்படுத்துவதா?

பதில்: அரசியல் ரீதியான கோட்பாட்டைத் தவிர, யுத்த காலத்தில் படைகளின் இலக்குக் குறித்து நீங்கள் மிகவும் தெளிவான முறையில் கூறியுள்ளீர்கள். தமக்கு வழங்கப்பட்ட தேசிய சாசனத்தின் பிரகாரமே இராணுவங்கள் சண்டையிடுகின்றன. ஆதலால் பகைவரின் அரசியல் கோட்பாடு பற்றிய சுமையை இராணுவத்தினர் கொண்டிருப்பதில்லை.

கேள்வி: இந்தியப் படைகள் நேர்மையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்திய சமாதானப் படை நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டது இலங்கையின் தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தது என்று நினைக்கின்றீர்களா? ஜம்முகாஷ்மீரில் இந்தியப் படை நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா? இந்தியப் படையினர் நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்று நீங்கள் கருதுவதாக ஜம்முகாஷ்மீர் மக்களிடம் நாங்கள் கேட்க முடியுமா?

பதில்: தயவுசெய்து உங்கள் முதல் கேள்விக்கான எனது பதிலை வாசியுங்கள். இலங்கையில் இந்திய சமாதானப் படையின் நடவடிக்கைகள் உட்பட அந்தப் பதில் இங்கு பொருத்தமாக அமையும். தேசிய நிகழ்ச்சி நிரல் தொடர்பாக யுத்தமிடும் படையினர் கவனத்தைக் கொண்டிருப்பதில்லை. யுத்தத்தின்போது அவர்கள் கொல்லும் இயந்திரங்களாக உருமாறுகின்றனர். ஆதலால் யுத்தத்துக்கு முன்னர் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக தேசியத் தலைவர்களே அதனை வழங்க வேண்டியுள்ளது.

கேள்வி: இலங்கைப் படையினரின் செயற்பாடு மட்டும் ஏன் ஆராயப்படுகிறது. குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் இவ்வாறு செயற்படுவதற்கு பூகோள அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றதா? பூகோள அரசியல் விவகாரங்கள் உள்ளதை நீங்கள் நேர்மையான முறையில் ஏற்றுக்கொள்ள முடியுமா?

பதில்: நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பூகோள அரசியல் விவகாரங்கள் உள்ளன. அதில் இலங்கையும் இந்தியாவும் உள்ளடங்குகின்றது. தந்திரோபாயமான பாதுகாப்புப் பற்றிய விடயமாக அது உள்ளது. இலங்கை இராணுவத்தின் செயற்பாடு மட்டும் பூகோள அரசியல் காரணங்களுக்காகத் தனியாக ஆராயப்படுவதாக நான் கருதவில்லை. அதேமாதிரியான தன்மையை இந்திய அமெரிக்க இராணுவங்கள் உட்பட வேறுபல இராணுவங்களும் எதிர்நோக்குகின்றன. ஆனால், இந்த நாடுகளில் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் சுறுசுறுப்புடன் செயற்படுகின்றனர். இராணுவங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடிக்கடி தண்டனை வழங்கப்படுகிறது. ஆதலால் அவர்கள் அண்மைய காலங்களில் தமது முறைமைகள், கட்டமைப்புகள் என்பனவற்றை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். இலங்கை ஏன் இப்போது கேள்விக்குட்படுத்தப்படுகின்றது என்பதற்கு இலகுவான பதில் உள்ளது. இலங்கையின் நன்மதிப்பு கவனத்திற்கெடுக்கப்படாமல் இருப்பதற்கு மூன்று சாத்தியமான காரணங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன்.

1.நான்காவது ஈழப்போருக்கு நீண்டகாலத்திற்கு முன்பே மனித உரிமை மீறல் பொதியை இலங்கை சுமந்திருந்தது. அரசாங்கத்தின் பதிலளிக்கும் கடப்பாடு குறைவாக இருந்ததுடன், சிறப்பு விடுபாட்டுடன் சட்டமீறல்கள் காணப்பட்டன. இந்த விவகாரங்கள் குறித்து சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சர்வதேச சமூகம் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதிகளவு பதிலளிக்கும் தன்மையுடையதாக இலங்கை இருக்க வேண்டுமென்று சர்வதேச சமூகம் கேட்டிருந்தது. ஆனால், அவற்றைத் திருப்திப்படுத்துவதற்கு தீவிரமான முயற்சியை இலங்கை மேற்கொண்டிருந்ததாகத் தென்படவில்லை. புலிகளினால் முழுமையான மீறல்கள் இடம்பெற்றதாக இலங்கை சுட்டிக்காட்டியது. தான் சிறப்பாகச் செயற்படுவதாக அது காண்பித்துள்ளது. இப்போதும்கூட ஏனைய நாடுகளுடன் அது தன்னை ஒப்பிடுகின்றது.என்னைப் போன்ற வெளியாட்களின் பிரதிமை இவ்வாறு உள்ளது. ஆதலால் யுத்தத்தில் இலங்கை இராணுவத்தின் செயற்பாடு அதிகளவுக்கான பரிசீலனைக்கு உட்பட்டுள்ளது.

2.யுத்தத்தின்போது இலங்கை ஊடகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியையே வழங்கியிருந்தது. ஐ.நா. மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனப் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர். நவீன சகாப்தத்தின் தொடர்பாடலுக்கு இது மோசமான தன்மையைக் கொண்டதாகக் காணப்பட்டது. சர்வதேச ஊடகங்கள் அரசாங்கம் தெரிவிக்கும் விபரங்கள் மற்றும் வதந்திகளிலும் புலிகளின் பிரசார விடயங்களிலுமே தங்கியிருந்தன.ஆதலால் அவை நம்புவதற்கு முடியாதவை என அரசாங்கம் தெரிவித்தது.

3.ஆட்சித்துறையில் நான் நிபுணரல்ல. ஆனால், யுத்தத்தின் பின்னரும் கூட இந்த விடயம் எழுப்பப்பட்டிருந்ததை நான் பார்க்கிறேன். நிவாரண நடவடிக்கையை சொந்தமாக இலங்கை எடுத்திருக்க வேண்டும். பொதுமக்களின் துன்பங்கள்,முறைப்பாடுகள் தொடர்பான விடயங்களை கையாளுவதற்கு ஆணைக்குழுவை இலங்கை நியமித்திருந்தது. புலிகள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாக பகிரங்க விசாரணையானது அதன் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவானது திடமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கவில்லை. தவறான செயற்பாட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. இப்போது சனல்4 இன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்கு யோசிப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது. யுத்தத்தில் வெற்றிகொள்ள உதவியளித்த சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பதில் இலங்கை கவலை கொண்டதாக இருக்கவில்லை. ஆனால், அது தொடர்பாக சதி இருப்பதாக அது பார்க்கிறது. இந்த விடயமானது குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரந்தளவில் பிரபல்யத்தைக் கொடுத்திருப்பதுடன், இலங்கையிடமிருந்து பதில்களை பல நாடுகள் நாடிக்கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில்.தினக்குரல்

இந்த ஹரிஹரன் ஒரு ஆய்வாளாராக இருந்து சிங்களம் செய்த அத்தனை கொடுமைகளையும் மறைக்க உதவிய ஒருவர். இன்று உலகமே சிங்களத்திற்கு எதிராக மெல்ல மெல்ல திரும்பும் சாத்தியங்களை கண்டவுடன், 'இலங்கை, நண்பர்களின் சொல்லை கேட்கவில்லை' என கூறுகிறார்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.